அனுதின வேததியானம்: கடமை, பொறுப்பு, மற்றும் இறக்கம்.
இன்றைய வேததியானத்தின் நோக்கம் :உபாகமம் 21: 1-9, லூக்கா 10 : 25 -37.
தேவன், எந்தவிதமான குழப்பமான சூழ்நிலையிலும் நீதியைக் குறித்து எவ்வளவு அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? உபாகமம் 21:1-9 ல், கொலை செய்யப்பட்டு கிடந்தவன் யார் என்றும் அவனைக் கொன்றவன் இன்னான் என்றும் தெரியாத ஒரு சம்பவம் இருக்கிறது. இச்சமயத்தில், அந்த சமுதாயத்திற்கு ஒரு பொறுப்பு இருந்தது – அதாவது, நடந்த தவறை அங்கீகரித்து, மரித்தவரை கனம்பண்ணி, மற்றும் குற்றமில்லாதவர்கள் மேல் பழி சுமத்தப்படாமல் இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளுவதுமாய் இருந்தது இது வெறும் ஒரு சடங்காக அல்லாமல், “எவ்வளவு சிரமமான சூழ்நிலையாக இருந்தாலும், அல்லது ஒரு நபர் தனக்காக பேச முடியாத சூழ்நிலையிலும் கூட நீதியே முக்கியமானதாகும் என்று தேவன் வெளிக்காட்டுவதாகும்.
பல நூற்றாண்டுகளுக்கு பின்னர், இயேசு கிறிஸ்து நல்ல சமாரியனுடைய உவமையின் மூலம் இந்த கருத்தை வெளிச்சமிட்டுக்காட்டினார் அந்த சமாரியன், வேறு யாரேனும் உதவ முன்வரவேண்டும் என்றோ அல்லது அந்த குற்றுயிராக கிடந்த மனிதன் தானாகவே அவரிடத்தில் உதவி கேட்க வேண்டும் என்றோ காத்திருக்கவில்லை. அவன், அந்த மனிதனுடைய தேவையை பார்த்து, அவனுக்கு உதவுவதற்கு முன்வந்தது மட்டுமல்லாமல், தைரியத்துடனும், இரக்க குணத்துடனும் செயல்பட்டான். இதன் மூலம், இயேசு கிறிஸ்து, பொறுப்பேற்றுக்கொள்வது என்பது நம்முடைய நண்பர்களுக்காகவோ அல்லது நமக்கு தெரிந்த மக்களுக்காகவோ மட்டுமல்லாமல் அது அறியாதவர்களுக்கும், கவனிக்கப்படாதவர்களுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தக்கூடியது என்று நமக்கு காட்டுகிறார்.
இன்றைக்கு, இந்த அழைப்பானது இன்னும் அவசரமானதாக இருக்கிறது. நம்மை சுற்றிலும் வன்முறை, வறுமை, புறக்கணிக்கப்படுவது, மற்றும் மக்கள் முறைகேடுபடுத்தப்படுதல் போன்ற துன்பங்கள் எல்லா இடத்திலும் இருக்கிறது. இயேசு கிறிஸ்து. இதனை பார்த்து மனம் நொறுங்குகிறார். எனவே, இந்த கேள்வியானது நம்மை நோக்கிக் கேட்கப்படுகிறது: நாம் பொறுப்பேற்றுக்கொள்ளுவதற்கு தயாராக இருக்கிறோமா? அவருடைய கூக்குரலை கேட்டு உண்மையாகவே அதற்காக நாம் ஏதேனும் செய்ய விரும்புகிறோமா? விசுவாசம் என்பது நாம் எதை நம்புகிறோம் என்பதை பொருத்தது மட்டுமல்ல. மாறாக அது, நீதிக்கடுத்த தைரியம் கொள்வதும், தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களை பார்ப்பதற்கு விருப்பம் கொண்டு, அங்கீகரித்து, அவர்கள் சார்பாக செயல்படுவதுமே ஆகும்.
இன்றைய சிந்தனைக்கு:
உங்கள் வாழ்க்கையிலோ அல்லது துன்பப்படுகிறவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்கள், சமுதாயத்திலோ அல்லது உதவி தேவைப்படுகிறவர்களாக இருக்கிறவர்கள் யார்? உங்களால் முயன்ற சிறிய வழிகளில் இரக்கமுள்ளவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் இன்று நீங்கள் எவ்வாறு முன்வந்து உதவமுடியும்?
ஜெபம்:
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உமக்கு முன்பாக ஜெபத்தில் வருகிறோம். அநேக நேரங்களில் கவனிக்கப்படாமலும் காணப்படாதவைகளுமாய் இருக்கிறவைகளை பார்க்கக்கூடிய கண்களையும், அதற்காக தயக்கமின்றி செயல்படக்கூடிய இருதயத்தையும் எங்களுக்குத் தாரும் நீதி மற்றும் இரக்கத்திற்கான உமது கூக்குரலுக்கு பதிலளிக்கிறவர்களாய் இருக்கவும். ஒடுக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கும், மற்றும் அநேகர் மறுபுறம் திரும்பும் சூழ்நிலைகளில் நாங்கள் பொறுப்பெடுத்து செயல்படவும் எங்களுக்கு உதவும். இராஜாதி இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தின் மூலம் இவைகளை கேட்டுக்கொள்கிறோம். எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமேன்.
இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:
மெய்யான விசுவாசம் என்பது நம்மை பொருப்பெடுக்கவும், செயல்படவும் அழைக்கிறது உபாகமத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தவன் யார் என்று தெரியாதது போலவும், சமாரியனால் உதவப்பட்ட குற்றுயிராய் கிடந்த மனிதனைப் போலவும் கவனிக்கபடாமல் புறக்கணிக்கப்பட்ட அநேகர் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய நீதி மற்றும் இரக்கத்தினை பார்ப்பதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும், அதின்படி வாழ்ந்துகாட்டுவதற்கும் நம்மை தேவன் அழைக்கிறார்.
(2025 அக்டோபர் மாதம் 15 அன்று மத்தேயு1128 ஊழியத்தின் சார்பாக Rev இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு, சகோதரி லல்லியால் மொழிபெயர்க்கப்பட்டது).
அறிவிப்புகள்:
1. எங்கள் வேத்தியானக் கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் பெற விரும்பினால், தயவுசெய்து நீங்கள் எங்கள் (மின்னஞ்சல் நிரப்பவும். மூலம் பெறப்படும்) குறுகிய கேள்வித்தாளை பிரதிபலிப்புகள் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. மேலும் அவை நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
2. உங்கள் சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறார்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்கள் வாராந்திர சீஷத்துவ கூட்டத்தில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750? pwd=EsfuED6du4T8YMjFdSXdpvWuPXpCOW.1
(சந்திப்பு ஐடி: 811 4423 5750. கடவுச்சொல்: 12345).
3. தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு, தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
https://us06web.zoom.us/j/81144235750?pwd=EsfuED6du4T8YMjFdSXdpvWuPXpCOW.1
உங்களுடைய நம்பிக்கையிலும் மற்றும் கூட்டுறவிலும் உங்களுடன் நடக்க நாட்கள் எதீர்நோக்குகிறோம்.