அனுதின வேததியானம் : நம்முடைய விடுதலைக்காக நம் ஆத்துமா குணமடைதல்.
இன்றைய வேததியானத்தின் நோக்கம் சங்கீதம் 41:4.
நம்முடைய வாழ்க்கையில் நாம் அடிக்கடி குழப்பங்களையும் அல்லது சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்கும் போது நாம் அவற்றிற்கு எப்படி தீர்வு காணலாம் மற்றும் அவைகளை எப்படி மேற்கொள்ளலாம் என்று சிந்திக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும் ஒரு தீர்வைக் கண்டறிவது அல்லது ஒரு பணியை நிறைவு செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதையே நோக்கமாக வைத்து அணுகுகிறோம். மனிதர்களாகிய நாம், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பதிலைத் தேடவேண்டும் என்று இயல்பாகவே அமைக்கப்பட்டு இருக்கிறோம். இது தினசரி சமையல், வேலை, படிப்பு, விட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்குவது போன்ற எளிய விஷயங்களாக இருக்கலாம் அல்லது திருமணப் பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள், பொருளாதார பிரச்சனைகள் போன்ற முக்கியமான விஷயங்களாகவும் இருக்கலாம். இவ்வாறு எந்தவொரு சூழ்நிலையிலும், நாம் அதனைப் பகுத்தறியவும் அதற்க்கான காரணத்தை அறிந்து கொள்வதிலும், பதில்களைத் தேடுவதிலும் மற்றும் அதற்கான தீர்வைக் கண்டறிவதில் மட்டுமே நம்முடைய முழுமையான ஒருங்கிணைந்த கவனத்தை செலுத்துகிறோம். இந்தக் கவனத்துடன் இதற்கான பதில்களையும், விடுதலையையும் நாடி நாம் தேவனிடம் அதற்காக ஜெபிக்கிறோம். நம்முடைய கவனம் வெளிப்புறமான பதில்களின்மேல் இருக்கிறது. மாறாக இதற்கான பதில் உட்புறமானதாய் இருக்கலாமா? மத்தேயு 11:28.30 28. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் மெதுவாயும். என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” ஏன் தேவனாகிய கரத்தர் நமது சுமைகளையும் வலிகளையும் நம்முடைய ஆத்துமாவுடன் இணைத்துப் பேசுகிறார்? நம்முடைய வெளிப்புற பிரச்சனைகளுக்கு ஆத்துமாவில் இளைப்பாறுதல் பெறுவது எவ்வாறு நமக்கு தீர்வாக இருக்க முடியும்?.
ஆத்துமா என்றால் என்ன? ஆத்துமா என்பது “மனிதர்களுக்குள் உட்ப்படுதப்பட்ட ஆவிக்குரிய கொள்கை அல்லது ஆவிக்குரிய மற்றும் நீதிநெறிமுறையின் வலியுறுத்தல் அல்லது மனிதர்களின் நெறிமுறையையும் மற்றும் இயல்பான உணர்ச்சிப் பண்பையும் குறிக்கிறது.” (மேரியம் வெப்ஸ்டர் அகராதி). நமக்குள்ளாக உட்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும் ஆவிக்குரிய, நீதிநெறிமுறைக்குரிய, மற்றும் உணர்ச்சிகளுக்குரிய கொள்கைகளே நம்முடைய ஆத்துமாவாக இருக்கிறது. இது நமது வெளிப்புற சரீரத்திற்கு அப்பார்ப்பட்டு செல்லுகிறது. இது மனிதனுடைய சரீரத்தைத் தாண்டி அவனுக்கு தனித்துவத்தை கொடுக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இப்படியிருக்க, நாம் எவ்வளவு தூரம் ஆத்துமாவின்மேல் கவனம் செலுத்துகிறோம்? ஆத்துமா என்பது அன்பு, ஆசைகள், உணர்ச்சிகள் , விருப்பங்கள், மனப்பான்மை, நெறிமுறை, கொள்கைகள் மற்றும் குணாதிசயங்களின் இருப்பிடமாகும். நம்முடைய ஆத்துமா ஒன்று தேவனை கவரச்சிசெய்வதாய் அல்லது வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது. நம்முடைய பாவங்கள் ஆத்துமாவிலிருந்து உண்டாகின்றன. இது வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய ஆத்துமாவே நம்முடைய குணாதிசயமாக இருக்கிறது. குணாதிசியம் என்பது “ஒருவரை மற்றவரிடமிருந்து தனித்துவமாகக் வெளிப்படுத்தக்கூடிய மனநிலைப் பண்புகள் மற்றும் நெறிமுறை சார்ந்த பண்புகள் ஆகும்” (ஆக்ஸ்போர்ட் அகராதி). நாம் நம்முடைய வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பதைவிட நம் குணாதிசயங்களைப் பற்றியே தேவன் அதிக அக்கறை உள்ளவறாக இருக்கிறார். ஆகவே நம் ஆத்துமாவில் நாம் குணமடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதையே அவர் விடுதலையாக கருதுகிறார். சங்கீதம் 41:4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன். என ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு தடையையும் ஒரு குறிக்கோளோடு தேவன் வைக்கிறார். அவர் நம்முடைய பாதைகளில் வைக்கும் ஒவ்வொரு கடினத்துக்கும் ஒரு குறிப்பான திட்டத்தை வைத்திருக்கிறார், நமது ஆத்துமாவில் இருக்கும் குறிப்பான பலவீனங்கள் மற்றும் குறைகளை சரி செய்யும்படிக்கு அவர் நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் தனிப்பட்ட முறையில் ஒழுங்குபடுத்துகிறார். நாம் ஒரு கணக்காளாராக மாற விரும்பினால் 12 ஆம் வகுப்பில் குறிப்பிட்ட கணிதம் மற்றும் கணக்கியல் படிப்புகளை தேர்வு செய்து படிக்கிறோம். அதுபோலவே, தேவன் நமக்குள்ளாக ஒரு குறிப்பிட்ட குணாதிசய வளர்ச்சியைக் காண்பதற்காகவும் அல்லது நம்முடைய ஆத்துமாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட பாவத்தை சரி செய்வதற்காவும் அவருடைய கரங்களில் அதற்காக பயிற்றுவிப்பதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போம் என்ற நம்பிக்கையில் அவர் நமது வாழ்வில் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குகிறார். மாறாக, அந்த சூழ்நிலைகளில் தேவன் நம்முடைய குணாதிசயத்தை கட்டுவதற்க்காக கொடுக்கும் பயிற்சி என்று எண்ணுவதற்கு பதிலாக அவைகளை நீக்குவதற்காக போராடுகிறோம். நம்முடைய ஆத்துமா குணமடையாமல் நாம் தேவனின் முகத்தை எப்படி பார்க்க முடியும்?.
இன்றைய சிந்தனைக்கு:
என்னுடைய வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் என்னதாய் இருக்கிறது ? நான் என்னுடைய சரீரத்தைவிட என்னுடைய குணத்தை அதிகமாக மதிக்கிறேனா? என்னுடைய ஆத்துமா குணமடைய நான் துன்பப்படத் தயாராக இருக்கிறேனா? அல்லது குணமடைதலை நிராகரித்து என்னுடைய பிரச்சனைகளுக்கு விரைவான தற்காலிக தீர்வுகளைக் காண விரும்புகிறேனா?
ஜெபம்:
பரோலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, எங்களுக்குள்ளாக காணமுடியாத பகுதியாய் இருக்கும் எங்கள் ஆத்துமாவை குறித்து நாங்கள் அறியாமை உள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய நெறிமுறைகள், ஒழுக்கங்கள், கொள்கைகள், அன்பு, ஆசைகள், நடத்தைகள், மனப்பான்மை மற்றும் குணாதிசயங்களுக்கு மிகவும் குறைந்த கவனத்தையே செலுத்துகிறோம். எங்களுடைய வாழ்க்கையை சுலபமாக நகர்த்தி செல்வதிலே அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதை நிறைவேற்றுவதற்கு எந்த விலையையும் செலுத்தி உறுதியுடன் போராடுகிறோம். எங்களுடைய ஆத்துமா உம்மோடு இணைக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்புகிறதினால் அது குணப்படுத்தப்படவேண்டும் என்பதை நாங்கள் மறந்துவிட்டோம். எனவே எங்கள் ஆத்துமா குணப்படுதலுக்கு நேராக திருப்பப்பட வேண்டும் என விரும்புகிறோம். நீர் எங்களுடைய ஆத்துமாவை குணப்படுத்தாவிட்டால் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக இருக்க முடியாது. நாங்கள் எங்களுடைய உள்ளான குணப்படுதலை நிராகரித்ததின் நிமித்தம் பாவம் செய்திருக்கிறோம். கர்த்தாவே, எங்களை மன்னித்து, எங்களுடைய ஆத்துமாவில் குணமடைவதற்காக ஒவ்வொரு நாளும் உம்முடைய இரக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு எங்களுக்கு நினைவூட்டும்.
இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:
நம்முடைய ஆத்துமாவை சீரபொறுத்துவதே தேவனுடைய முதன்மையான நோக்கமாக இருக்கிறது. ஒரு சீர்கெட்ட ஆத்துமா தேவனோடு ஒருபோதும் ஒருங்கிணைந்து இருக்க முடியாது. எனவே நமக்குள் இருக்கும் உள்ளான ஆவிக்குரிய ஜீவன் குணமாக்கப்படுவதே மெய்யான விடுதலையாகும். நம் வாழ்க்கையில் தோன்றும் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு அடிப்படையான பிரச்சனையிலிருந்தே உருவாகிறது. நமக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் நாம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றதினால் அதே நாளிலே அது குணமடைய வேண்டும் என்று எதிர்பார்த்து செல்லுவதில்லை. நாம் எலும்பு முறிவிலிருந்து குணமடைய மருத்துவரின் பரிந்துரையின்படி அனைத்து சோதனையையும் மற்றும் 2 மாதங்கள் சிகிச்சையையும் நாம் மேற்கொள்கிறோம். இதன் மூலம் வரும் வலி மற்றும் வீக்கம் என்பது எலும்பு முறிவிற்க்கான அடிப்படை அறிகுறிகளாக இருந்தாலும், நம்முடைய வலி மற்றும் வீக்கத்திற்கு நாம் சிகிச்சை பெறாமல் எலும்பு முறிவிற்கே சிகிச்சை பெறுகிறோம். அது போலவே, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு பதிலாக நம்முடைய பரம மருத்துவரிடம் சென்று அவருடைய சிகிச்சையின் மூலம் நமது சீர்கெட்ட உள்ளான சுய நெறிமுறையற்ற ஆத்துமாவில் மெய்யான விடுதலையை அவர் மூலமாய் பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்போமாக.
(2025 அக்டோபர் மாதம் 26 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜெஸிந்த் ஏஞ்சல் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
1. உங்கள் சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்கள் வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNSINXYWIZ WmNnb3EvQT09
(சந்திப்பு ஐடி: 811 4423 5750. கடவுச்சொல்: 12345).
2. தனிப்பட்ட ஆலோசனைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களுடைய நம்பிக்கையிலும் மற்றும் கூட்டுறவிலும் உங்களுடன் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
- புதுப்பிப்புகள் மற்றும் தகவல்தொடர்புக்கு எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்: https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
- நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழே உள்ள இணைப்பில் திட்டமிடுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment
Click Here to Download as PDF ->Tamil