மனிதனுடய திறமையை விட அவனுடய நம்பகத்தன்மையே மேலானது: வேத தியான பகுதி எரேமியா 28 மற்றும் 29.ம் அதிகாரங்களிலிருந்து
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் சபையோடு கூட இருப்பதாக.
நமது வாழ்க்கையின் சில நேரங்களில் நாம் மற்றவர்களை விட குறைவுபட்டவர்களாக நம்மை எண்ணுகிறோம். அவர்கள் தங்கள் திறமையின் மூலமாக அடைந்த வெற்றி மற்றும் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகள் மூலமாக பெற்ற அங்கீகாரங்களைப் பார்த்து. நாம் குறைவுபட்டவர்களென்று நம்மை நாமே தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றோம். உலகமானது திறமை அழகு மற்றும் செயல் திறன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு, வெற்றியாகிறது தீர்மானிக்கப்படுவதாகக் கூறுகிறது. இருப்பினும் பெரும்பாலான சமயங்களில் தேவனுடைய செயல்படும் விதமானது உலகத்தைக் காட்டிலும் முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. அவர் திறமையை விட நம்பகத்தன்மையையே மிகவும் முக்கியத்துவப்படுதுகிறார். இந்த சத்தியத்தைப் பற்றி எரேமியா 28 மற்றும் 29.ம் அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. எரேமியா 28.ம் அதிகாரத்தில், அன்னியா தீர்க்கதரிசி யூத மக்களிடத்தில் தேவன் கூடிய விரைவில் நம் மீது பாபிலோனுக்கு இருக்கும் அதிகாரத்தினைத் தகர்த்துப் போட்டு நம்மை மீட்டுக்கொள்வார் என்று தைரியம் கொண்டு கூறினான் அவனுடைய உணர்ச்சித்துவமிக்க மற்றும் பிரபலமான இந்தச் செய்தியானது மக்களுக்கு எளிதில் நம்பிக்கை அளித்தாலும் அது பொய்யானதாகும் அனனியாவின் கவர்ச்சிகரமான செய்தி மக்களை ஈர்க்கின்ற வகையில் இருந்தாலும் அது அவர்களுடைய அடிமைத்தனத்தைப் பற்றிய உண்மையான தேவ நோக்கத்தை விட்டு வழிவிலகச் செய்தது.
அதற்கு மாறாக, எரேமியா தீர்க்கதரிசி கூறிய சத்தியம் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது. எரேமியா 29.ம் அதிகாரத்தில், அவன் அடிமைகளாக இருந்த யூதர்களை நோக்கி. நீங்கள் பாபிலோனில் தங்கியிருந்து. உங்கள் வாழ்க்கையை அங்கே கட்டி எழுப்பி, அந்த நகரத்தினுடைய சமாதானத்தை நாடுங்கள் என வலியுறுத்தினான். இந்தச் செய்தியானது கவர்ச்சிகரமாக அல்லது பிரபலமானதாக இல்லாவிட்டாலும், தேவனுடைய சித்தத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், தானியேல், நெகேமியா போன்ற தலைவர்கள் உருவாக்கப்பட அடித்தளமாக அமைந்தது எரேமியா தேவனுடைய வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு நினைவூட்டினான்
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
எரேமியா 29:11
அனனியாவின் செய்தியோ கீழ்ப்படிதல் இல்லாத ஈர்ப்பு தன்மையினுடைய ஆபத்தினை வெளிப்படுத்துகிறது. எரேமியாவின் செய்தியோ, காணப்படாத மற்றும் பிரபலமானதாக இல்லாவிட்டாலும், நம்பகத்தன்மையினுடைய முக்கியத்துவத்தினை நமக்குக் காண்பிக்கிறது. தேவன் நம்பகத்தன்மையைக் குறித்து மகிழ்கிறார். திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் அதைவிடவும் மேலான, நிலைத்து நிற்கக்கூடிய குணாதிசயங்களை அவர் நமக்குள்ளே உருவாக்குகிறார்.
நீங்கள் இன்று கவனிக்கப்படாதவர்களாகவும். திறமையற்றவர்களாகவும். சாதாரணமானவர்களாகவும் உணர்கின்றபோது சோர்ந்து போகாதிருங்கள். தேவன் உங்களுக்குள்ளாக இருக்கின்ற நம்பகத்தன்மையை பொக்கிஷமாகப் பார்க்கிறார். கீழ்ப்படிதல் உள்ள ஒவ்வொரு செயல்களும், நம்பிக்கையுடைய ஒவ்வொரு தருணங்களும். அன்பில் வளர்வதற்கு எடுக்கப்படுகிற மிகச் சிறிய தேவனால் முயற்சிகளும் நித்யத்துக்குரியவைகளாக இருக்கின்றன. உங்களுக்கு கொடுக்கப்பட்ட
நம்பகத்தன்மையினுடைய வளரச்சியானது. உங்களுடைய வாழ்வின் போராட்டம் மற்றும் சந்தேகங்களை இயேசு கிறிஸ்துவினிடத்தில் அவருடைய அர்ப்பணிப்பதன் மூலமாகத் தொடங்குகிறது. நம்பகத்தன்மையானது நமக்குள்ளாக உருவாக்கப்பட அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் ஒருவராலும் கவனிக்கப்பட்டாவிட்டாலும், நம்பகத்தன்மை உடையவர்களாகவும். கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவும் தினமும் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறதேயல்லாமல், நீங்கள் பூரணமடைவதை பற்றியதல்ல இந்தத் தாழ்மையுள்ள அரப்பணிப்பின் மூலமாக தேவன் உங்களுடைய குணாதிசயங்களை மாற்றவும். அவருடைய அன்பில் ஆழமாக வேரூன்றி வளரவும் செய்கிறார்.
ஆகையால், நீங்கள் கிறிஸ்துவின் கிருபையை நாடுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப்பாராதிருங்கள். தேவன் உங்களுடைய நம்பகத்தன்மையில் மகிழ்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் உள்ள நம்பகத்தன்மை மற்றும் கீழ்ப்படிதலே அவருக்கு
விலையேறப் பெற்றதாக உள்ளது. மேலும், இவைகள் உங்களுடைய வாழ்வில் தேவனால் வளர்த்தெடுக்கப்படுகிற விதைகளின் நித்திய அறுவடையாக உள்ளது.
(08 செப்டம்பர் மாதம் 2025 அன்று மத்தேயு 11:26 ஊழியத்தின் சார்பாக Rev இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதார் டேவிட் மற்றும் சகோதரி அபிகேலால் மொழிபெயர்க்கப்பட்டது).
Click here to download as PDF -> Tamil