உங்களுடைய முயற்சிகளே முக்கியம், பிரதிபலன்கள் அல்ல

Posted on November 29, 2025

Home Publications Posts உங்களுடைய முயற்சிகளே முக்கியம், பிரதிபலன்கள் அல்ல

உங்களுடைய முயற்சிகளே முக்கியம், பிரதிபலன்கள் அல்ல

அனுதின வேததியானம்: உங்களுடைய முயற்சிகளே முக்கியம், பிரதிபலன்கள் அல்ல.

வேததியானக் குறிப்பு:  மத்தேயு 25:14-30 

நம்முடைய பள்ளி, சமூகம், மற்றும் குடும்பங்கள் நமக்கு என்ன கற்றுக் கொடுத்திருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அவைகள் நமக்கு அர்ப்பணிப்புடன் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா அல்லது எப்போதுமே குற்றமில்லாமல் செம்மையானவர்களாய் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா? அவைகள் நம்மைக் கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் வாழக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா அல்லது வெற்றிகரமான வாழ்க்கை வாழக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை உன்னிப்பாகப் பாருங்கள். நான் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளில் மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அர்ப்பணிப்புடன் இருப்பது செம்மையாக இருப்பதை விட மிகவும் வித்தியாசமானது. நாம் கொள்கையுள்ளவர்களாக இருப்பதும் வெற்றியுள்ளவர்களாக இருப்பதும் ஒன்றல்ல. இப்போது, ​​இவற்றில் உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் கொள்கைகளை முதன்மைப் படுத்துகிறீர்களா அல்லது உங்களுடைய வெற்றி மற்றும் குற்றமில்லாத செம்மையான வாழ்வை விரும்புகிறீர்களா? உங்களில் பெரும்பாலோர்க்கு உங்களுடைய பதில் தெளிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்போது, ​​உங்களை நீங்களே, “இதை குறித்து வேதம் என்ன அறிவுறுத்துகிறது?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது அதற்கான பதில் தெளிவாக இருக்கும். 1 சாமுவேல் 16:7 “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”  

மத்தேயு 25:14-30-ல் உள்ள தாலந்துகளின் உவமையைக் கவனித்துப் பாருங்கள். இரண்டு மனிதர்கள் தங்களிடம் இருந்த தாலந்துகளை கொண்டு வியாபாரம்பண்ணி சம்பாதித்தார்கள். ஒருவனோ, ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தான். 27-வது வசனத்தைக் கவனியுங்கள். மூன்றாவது மனிதனை, தன்னுடைய தாலந்துகளை அவன் வியாபாரம் பண்ணாமல் இருந்ததற்காகவோ அல்லது வர்த்திக்காமல் இருந்ததற்காகவோ எஜமான் கண்டிக்கவில்லை. அந்த மனிதன் குறைந்தபட்சம் அதை காசுக்காரர் வசத்திலாவது போட்டு வைத்திருந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதில் வந்த லாபத்தைக் குறித்து அவர் பேசவில்லை, மாறாக, அந்தத் தாலந்தைக் கொண்டு அந்த மனிதன் எதையும் செய்ய ஆர்வமில்லாதிருக்கிறான் என்பதையே குறிப்பிடுகிறார். இதை வேறு விதமாக சொல்ல வேண்டுமானால், அந்த மனிதன் எந்த முயற்சிகளும் எடுக்காமல் தன்னை ஒரு பாதுகாப்பான நிலைமையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்ததை குறித்தே அவர் கோபப்படுகிறார். அவன் ஈட்டிய பணத்தின் அளவை விட, அவனுடைய தவறான மனப்பான்மையையும் அணுகுமுறையையும் தேவன் கண்டிக்கிறார். நாம் சற்று நேரமெடுத்து இதை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் – பெரும்பாலும், நாம் சரியான காரியத்தை செய்கிறோமா, அல்லது பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சித்து மூன்றாவது மனிதனைப் போல குற்றமற்றவர்களாக இருக்க முயற்சிக்கிறோமா? நம்முடைய கவனம் நம்முடைய மனப்பான்மையின் மேல் இருக்கிறதா அல்லது நம்முடைய செயல்திறனின் மேல் இருக்கிறதா? 2 கொரிந்தியர் 8:12 “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.”

      வேதாகமத்தில் எங்கும் தேவன் குற்றமில்லாமல் செவ்வையாய் இருப்பதையும் மற்றும் வெற்றியையும் அறிவுறுத்தவில்லை. அவர், தேவனுடைய கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் நம்முடைய அர்ப்பணிப்பை மட்டுமே பரிந்துரைக்கிறார். அவர் நம்முடைய குற்றமற்ற செவ்வையான செயல்களை அல்லாமல் நம்முடைய இருதயத்தையே விரும்புகிறார். கொலோசெயர் 3:23,24 “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்”. பூரணமான உதாரணமான இயேசு கிறிஸ்துவை இப்போது நாம் பார்க்கலாம். இந்த பூமியில் அவருடைய முடிவு தோல்வியானதாகவே இருந்தது. அவர், நீண்ட காலம் வாழவில்லை, அவர் ஒரு துரோகியாகவும் தேவ தூஷணம் செய்பவராகவும் ஜனங்கள் எல்லார் மத்தியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் கைவிடப்பட்டார், மற்றும், அவமதிக்கப்பட்டு சபிக்கப்பட்டார். இருப்பினும், அவருடைய மரணம் வரையில் சத்தியத்திற்காக தனது இருதயத்திலிருந்தும் ஆத்துமாவிலிருந்தும் உழைத்தார். அவர் ஜனங்களுடைய கருத்துக்களில் கவனம் செலுத்தவில்லை, மாறாக, நன்மை செய்வதற்கான அவருடைய அர்ப்பணிப்பின் மீதே கவனம் செலுத்தினார். ஆனால், நாம், இதற்கு நேர் மாறாக செயல்படுகிறோம் அல்லவா?

நாம் அநேக நேரம் குற்றமற்று செம்மையாய் இருப்பதிலும் காரியங்களை செய்யக்கூடிய செயல் திறனிலும் பெலனிலும் நம்முடைய கவனத்தை செலுத்தி தோல்வி அடைகிறோம். ஏனென்றால், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் மனிதனை அல்லாமல் நாம் தேவனையே சேவிக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நாம் ஒரு நல்ல கிறிஸ்தவராக, பெற்றோராக, பிள்ளையாக, அல்லது வேலைக்காரராக இருப்பது என்றால் எப்போதுமே மிகச் சிறந்த விளைவுகளையும் பிரதிபலன்களையும் கொடுப்பதே என்று நினைக்கிறோம். ஆனால், அது இதற்கு மாறானது. நாம் எந்த இருதயத்துடன் காரியங்களை செய்கிறோம் என்பதே தேவனுக்கு முக்கியமானது. நம்முடைய செயல்பாடுகளின் அடிப்படையானது அவரை வேர் கொண்டு இருக்குமானால் நம்முடைய பலவீனங்களின் மேல் அவர் எஜமானாய் இருப்பார். முயற்சிகளும் அர்ப்பணிப்பும் நம்முடைய வேலைகள். விளைவுகளை உருவாக்குவது அவருடைய வேலை. இயேசுவினுடைய அர்ப்பணிப்பு உலகத்திற்கு அடுத்த பரிமாணங்களை அல்லாமல் நித்திய பரிமாணங்களை உருவாக்கியது. பிரசங்கி 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 

இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய பார்வையில் மெய்யாகவே எது மதிப்பிடப்படுகிறது – என்னுடைய குணாதிசயமா அல்லது செயல்திறனா? நான் என்னுடைய முழு இருதயத்தின் முயற்சிகளில் மகிழ்ச்சி கொள்கிறேனா அல்லது என்னுடைய மிக செம்மையான செயல்களில் மகிழ்ச்சி கொள்கிறேனா? என்னை திருப்தி படுத்துவது எது – சரியானதை செய்வதா அல்லது நற்பெயரை சம்பாதிப்பதா? நான் இயேசு கிறிஸ்துவை சேவிக்கின்றேனா அல்லது என்னுடைய புகழை சேவிக்கின்றேனா?

ஜெபம்:

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, நாங்கள் பெரும்பாலும் எங்களுடைய குற்றமற்ற செம்மையிலும், வெற்றிகளிலும் நோக்கமாய் இருக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் எங்களுடன் வேலை செய்கிறவர்கள், முதலாளிகள், சக விசுவாசிகள், மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் அங்கீகரிப்பையும் மதிப்பையும் எதிர்பார்க்கிறோம். நீர் எங்களை எங்களுடைய ஆத்துமாவில் இருந்து உமக்கென்று மனப்பூர்வமாக காரியங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர் என்பதை மறந்து விட்டோம். எல்லா தீர்க்கதரிசிகளும், நியாயாதிபதிகளும், உம்முடைய சீஷர்களும் பலவீனங்களை கொண்டிருந்தார்கள் என்பதை நினைவு கூற எங்களுக்கு உதவி செய்யும். எவருமே குறைபாடற்று செவ்வையானவர்களாய் இருக்கவில்லை. நீர் அவர்களுடைய செவ்வையற்ற நிலைமையை கண்டிக்கவில்லை. அவர்களுடைய கடின இருதயத்தைக் கண்டித்து, அவர்களுடைய மனம் திரும்புதலை கனம் பண்ணினீர். இன்று, எங்களுடைய பலவீனங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு எங்களுடைய செம்மையான பிரதிபலிப்புகளின் மேல் அல்லாமல் எங்களுடைய அர்ப்பணிப்பின் மேல் நாங்கள் கவனம் செலுத்த எங்களுடைய இருதயங்களை நீர் சதையானதாய் மாற்ற விண்ணப்பம் செய்கிறோம். எப்படிப்பட்டதான பிரதிபலிப்புகள் நேரிட்டாலும் நாங்கள் நன்மையானதையே செய்ய நோக்கமாய் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய பலவீனங்களின் மேல் நாங்கள் நோக்கம் வைக்கும் போது, நாங்கள் குற்றமில்லாதவர்களாய் இருக்க வேண்டும் என்று நீர் எங்களை கேட்டுக் கொள்ளாமல் நாங்கள் உம்மோடு மாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர் என்பதை புரிந்து கொள்ள உதவி செய்யும். எங்களுடைய தேவனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தின் மூலம் இதை கேட்டுக்கொள்கிறோம், ஆமென்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:   

      I கொரிந்தியர் 3: 6,7 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். குறைபாடு இல்லாமல் செவ்வையாய் இருப்பது என்பது நாம் எப்போதுமே தோல்வி அடைந்து, அடையவே முடியாத ஒரு இலக்கை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பதற்கே பிசாசினால் உட்படுத்தப்பட்ட ஒரு அளவுகோல் ஆகும். நாம் தேவனுடன் சேர்ந்து இயங்குகிறோமா அல்லது குற்றமில்லாமல் செவ்வையாய் இருப்பதற்காக இயங்குகிறோமா என்பதை மட்டுமே தேவன் எப்போதும் ஆராய்ந்து பார்க்கிறார். நாம் அவருடன் சேர்ந்து இயங்கும் போது செவ்வையாய் இருக்க வேண்டும் என்ற பாரம் நம்முடையது அல்ல. நாம் சவால்களையும் கடினங்களையும் சந்திக்கும் போது, மற்றவர்கள் நம்மை எப்படி பார்த்து மதிப்பிடுகிறார்கள் என்பதை குறித்து கவலைப்படாமல், நாம் நம்முடைய குணாதிசயத்தை இந்த செயல்பாட்டின் மூலம் வளர்த்துக் கொள்ளுவதிலும் தேவனுக்கு முன்பாக உண்மையாய் இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோமானால், பெரும்பாலான பாரம் நம் மேல் இருந்து எடுக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் நாம் எத்தகைய பிரதிபலன்களை உற்பத்தி செய்கிறோம் என்று அல்லாமல் நம்முடைய குணாதிசயம் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. நாம் நம்முடைய கரங்களில் இருந்து மனுஷர்களுக்கென்று அல்லாமல், நம்முடைய ஆத்துமாவிலிருந்து மனப்பூர்வமாக தேவனுக்கென்று வேலை செய்யும் பழக்கத்திற்குள் வரவேண்டும். நமக்கு இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு நமக்கு முடிந்த அளவு சிறந்தவைகளை கொடுக்கிறோமோ? நாம் எல்லா நேரங்களிலும் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும், முழு அர்ப்பணிப்புடனும் இருக்கிறோமா? இதன் அடிப்படையிலேயே தேவன் நம்மை நியாயம் தீர்க்கிறார். இவைகளில் மட்டும் நாம் நம்முடைய கவனத்தை செலுத்துவோமானால் அவர் மற்றவைகளை பார்த்துக் கொள்வார்.

(2025 நவம்பர் மாதம் 29 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜெசிந்த் ஏஞ்சல் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சல் மற்றும் சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 

அறிவிப்புகள்:

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09  (சந்திப்பு ஐடி (Meeting ID) : 811 4423 5750.  கடவுச்சொல் (Password): 12345). 

  1. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்களுடன்    விசுவாசத்திலும்  மற்றும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். 
  • எங்களுடைய    ஊழியங்கள்    மற்றும்      கூடுகைகளை குறித்த  அறிவிப்புகளுக்கும்  மற்றும் தகவல் தொடர்புக்கும்  எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்: https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no 
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ளநீங்கள் விரும்பினால்,கீழேஉள்ள  இணைப்பை  உபயோகித்து   ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment.