இல்லை என்று சொல்ல மறந்துவிடுதல் – பொய்யான அடையாளத்தை விட, தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது.

Posted on January 3, 2026

Home Publications Posts இல்லை என்று சொல்ல மறந்துவிடுதல் – பொய்யான அடையாளத்தை விட, தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது.

இல்லை என்று சொல்ல மறந்துவிடுதல் – பொய்யான அடையாளத்தை விட, தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது.

வாராந்திர வேத தியானம்: இல்லை என்று சொல்ல மறந்துவிடுதல் – பொய்யான அடையாளத்தை விட, தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது.

வேத தியானக் குறிப்பு : எண்ணாகம் 13 & 14 அதிகாரங்கள்.

அன்புள்ள தேவனுடைய சபையே,

எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த புதிய ஆண்டிற்குள் நாம் அடி எடுத்து வைக்கும் போது, புதிய வாக்குத்தத்தங்கள், புதிய தொடக்கங்கள், கடந்த காலத்தின் வலி மற்றும் காயங்களைப் நாம் பின்னாக விட்டுச் செல்வதற்கான வழிகளைத் தேடுவது இயல்பானது தான். ஆனால், எண்ணாகமம் 13 மற்றும் 14 ஆம் அதிகாரங்களில் உள்ள சம்பவத்தை நோக்கிப் பார்த்தால், இந்த ஆண்டிற்குள் தெளிவுடனும் தைரியத்துடனும் நம்மை வழிநடத்தக்கூடிய ஒரு வல்லமையான பாடத்தை நாம் காண்கிறோம்.

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தமாக அளித்தார். ஆனால், அவர்களுடைய பெலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களை அவர் அனுப்பவில்லை. அவர்கள் அவரை முழுமையாக விசுவாசித்தால், அவர்கள் எவ்வாறாக இருக்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு அனுப்பினார். தேசத்தை சுற்றிப் பார்த்த வேவுக்காரர்களில் 10 பேர் தவறான அறிக்கையுடன் திரும்பினார்கள். அது, அந்த தேசத்தில் ஆசீர்வாதங்கள் இல்லை என்பதாலல்ல, ஆனால், தேவனாகிய கர்த்தருடைய கண்ணோட்டத்தோடு அவர்களுடைய சிந்தைகளும் இருதயங்களும் ஒத்திருக்காமல் இருந்ததே காரணம் ஆகும். தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைப் பற்றிக்கொள்வதற்கு பதிலாக, பயமானது தங்களுடைய நிஜத்தை வரையறுக்க அனுமதித்தார்கள்.

இதில், விஷயம் என்னவென்றால், சில நேரங்களில், நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் தவறான கேள்விகளுக்கு “இல்லை” என்று பதில் சொல்ல நாம் மறந்து விடுகிறோம். “நான் உண்மையிலேயே இதை செய்ய முடியுமா?” அல்லது “நான் உண்மையிலேயே போதுமானவனா/ போதுமானவளா?” — இத்தகைய கேள்விகளே நம்மை பயத்தில் சிக்கவைக்கின்றன. அந்த பத்து வேவுக்காரர்கள் போலவே, நாமும்   வாக்குத்தத்தங்களை நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, நம்முடைய குறைகளையே நோக்கிப் பார்க்கிறோம். பயத்தினாலும், நமக்கு முடி சூட்டப்பட்ட பெயர்களினாலும், உலகத்தின் பொய்களினாலும், மற்றும் சத்துரு நம் மீது வைத்த கட்டுப்பாடுகளினாலும் நாம் பொய்யான அடையாளத்துக்குள் வனையப்படும் படியாக நம்மை அனுமதித்திருக்கிறோம்.

ஆனால், நமக்கு நம்பிக்கை இருக்கிறது. நிஜமான நம்மை நாம் கண்டடைவதற்காக இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். நம்முடைய பயம், சந்தேகம், மற்றும் பொய்யான அடையாளத்தை விட்டு விடுதலையோடு அவருக்குள் நாம் மெய்யாக யாராக இருக்கிறோம் என்பதற்குள் நம்மை அழைக்கிறார். தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் கூடுமானவைகளா என்று கேட்பதற்கு பதிலாக, நாம், “என்னுடைய சிந்தனையானது அவருடைய சத்தியத்தோடு ஏன் பொருந்தி இருக்கவில்லை?” என்று கேட்டு அவருடைய புதுப்பிக்கும்
கிரியைய்க்கு ஒப்பு கொடுக்க வேண்டும்.

யோசுவாவும் காலேபும் அந்த வேவுகாரர்கள் பார்த்த அதே பலவான்களையும் கோட்டைகளுடைய பட்டணங்களையும் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் காணப்படுகிறவைகளை விட தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை அவர்களுடைய பெலத்தின் மேல் அல்லாமல், ஏற்கனவே வெற்றியை வாக்குத்தத்தம் பண்ணினவரின் மேல் இருந்தது. நம்முடைய சிந்தனையை நாம் தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தோடு ஒன்று பொருத்தும் போது நாம் இனி பயத்தினால் அல்லாமல் விசுவாசத்தினால் வரையறுக்கப்படுவோம், மற்றும், பொய்களினால் அல்லாமல் இயேசு கிறிஸ்து நமக்குள் இருக்கும் நிஜத்தினால் வனையப்படுவோம்.

எனவே, இந்த புதிய வருடத்தின் கேள்வி இதுதான்: நம்முடைய பயங்களின் நிமித்தமான பொய்யான அறிக்கையோடு ஒத்துக்கொள்கிறோமா, அல்லது, இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக முழுமையாக ஜீவனோடு இருக்கும் நம்முடைய மெய்யான சுயத்தோடு இருக்கும் படியாக அவர் அழைக்கும் அடையாளத்துக்குள் தைரியமாக அடி எடுத்து வைப்போமா? வானத்தையும் பூமியையும் உருவாக்கினவர் இடத்தில் இருந்து வாக்குத்தத்தம் வந்தது என்பதை நாம் மறந்து நம்முடைய கட்டுப்பாடுகளுக்கும் குறைபாடுகளுக்கும் “இல்லை” என்று சொல்ல மறந்து விட்டோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் வாங்கபட்டும் மீட்கப்பட்டும் மற்றும் அனைத்தையும் தேவனாகிய கர்த்தருடைய மகிமைக்காக சுதந்தரித்துக் கொள்வதற்கு தகுதியாக்கப்பட்டு இருக்கிறோம்.

எனவே, நம்முடைய பயம், சந்தேகம், மற்றும் கட்டுப்பாடுகளுக்கு நாம் இல்லை என்று சொல்லி, தேவனாகிய கர்த்தருடைய ஐஸ்வர்யங்களுக்கு ஆம் என்று சொல்லும் வருடமாக இந்த வருடம் இருக்கட்டும். அவர் உங்களை எப்படி பார்க்கிறாரோ அவ்வாறே நீங்களும் உங்களை பாருங்கள்.

 

இன்றைய சிந்தனைக்கு

உங்களுடைய பயங்களையும் கட்டுப்பாடுகளையும் விட தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் பெரிதானவைகள் என்பதை இன்று நினைவு கூறுங்கள். எண்ணாகமம் 13 மற்றும் 14 இல் இருக்கும் அந்த பத்து வேவுகாரர்களைப் போல, சந்தேகமும் பொய்யான அடையாளங்களும் நாம் நம்மை எவ்வாறு காண்கிறோம் என்பதை வனைவதற்கு அனுமதிப்பது எளிதானதாகும். ஆனால், இயேசு கிறிஸ்து பயத்தை விட்டு நீங்கள் வெளியே வந்து அவருக்குள்ளாக நீங்கள் உண்மையாக யாராய் இருக்கிறீர்கள் என்பதை கண்டடையும்படியாக உங்களை அழைக்கிறார். யோசுவாவும் காலேபும் தங்களுடைய சொந்த பெலத்தை அல்லாமல் தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நம்பி அவருடைய வார்த்தையை தோற்றங்களை விட நம்ப தேர்ந்தெடுத்தனர். இந்த புதிய வருடத்தன்று பயம், சந்தேகம், மற்றும் கட்டுப்படுத்துபவைகளுக்கு இல்லை என்று சொல்லி உங்களுக்காக இயேசு கிறிஸ்து வைத்திருக்கும் முழுமையான ஜீவனுக்கு ஆம் என்று சொல்லுங்கள். நீங்கள் எதை உணர்கிறீர்கள் அல்லது இந்த உலகம் எதை சொல்லுகிறது என்பதை பொறுத்து வாழாமல் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைக்கும் அவருடைய வாக்குத்தத்தங்களின்படி வாழுங்கள்.

 

ஜெபம்

பரலோகத்தில் இருக்கும் எங்களுடைய பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக நன்றியுள்ள இருதயங்களுடன் வருகிறோம். நாங்கள் உம்முடைய இரக்கத்திற்காகவும், கிருபைக்காகவும், மற்றும் நீர் எங்களை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் இந்த கடந்த வருடத்தில் பாதுகாத்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களை விசாரித்து எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் உண்மையாகவே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உம்முடைய மகிமையையும் நீர் எங்களுக்கு கொடுத்த இரட்சிப்பில் நாங்கள் களிகூறவும் நீர் எங்களை உம்முடைய அன்பினால் ஆறுதல் படுத்தி எங்களுடைய ஒவ்வொரு தேவையிலும் எங்களை வழிநடத்துவதற்கு உம்முடைய பரிசுத்த ஆவியானவரை கொடுத்தற்காக நன்றி. தேவனே, எங்களுடைய வாழ்க்கையில் நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை மறந்து விட்டு இந்த உலகத்தின் பொய்களை நம்பும் எங்களுடைய தீய பழக்க வழக்கத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்காக நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, எங்களை நீர் பெலப்படுத்தி உம்முடைய கிருபையை எங்களுக்கு அருளி எங்களைக் கண்டித்து உணர்த்தி உம்மோடு நெருக்கமாக இருக்க எங்களை வழி நடத்தும். இந்த ஜெபம் உம்முடைய பார்வையில் ஏற்புடையதாக இருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென்.

 

இந்த வாரம் கற்றுக்கொள்ள வேண்டியது

உங்களுடைய பயமோ அல்லது பொய்யான அடையாளங்களோ உங்களை வரையறுக்க அனுமதிப்பதை விட தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள். அவருக்குள் முழு ஜீவனோடு உங்களுடைய மெய்யான தன்மைக்குள் நீங்கள் அடி எடுத்து வைக்கும் படியாக இயேசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார். சந்தேகத்திற்கும் குறைபாடுகளுக்கும் இல்லை என்று சொல்லி அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற ஜீவனுக்கும் வெற்றிக்கும் ஆம் என்று சொல்லுங்கள்.

அறிவிப்புகள்:

1.உங்களுடைய சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை  தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ         கூடுகையில்          சேர         உங்களை          நாங்கள்    அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

  1. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
  2. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas
  3.  இனி வரும் எங்களுடைய தியான செய்திகளை நீங்கள் தொடர்ந்து பெற விரும்புவீர்கள் என்றால், உங்களுடைய பெயரையும் மின்னஞ்சல் ஐடி யையும் (email ID) எங்களுடைய தகவல் சேகரிக்கும் தரவுதளத்தில் புதுப்பித்து மேம்படுத்துவதற்காக உங்களுடைய உதவியை நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கிறோம்.இதற்காக, நீங்கள் நிரப்பும் படியாக ஒரு சிறிய கேள்வித்தாளை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். இதை நீங்கள் நிரப்பி அனுப்பியவுடன் ஒரு ஆறு மாத பதிவு திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். தமிழ், ஆங்கிலம், மற்றும்/ அல்லது தெலுங்கு மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் இந்த வெளியீடுகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒன்று அல்லது பல மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

    இந்த செயல்முறையை நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடியும் புதுப்பிப்போம். இந்த கேள்வித்தாளிற்கான இணைப்பை உங்களுடன் மின்னஞ்சல் மூலமாக வரும் சில நாட்களில் பகிர்ந்து கொள்ளுவோம். இதை எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த செயல்முறை மூலமாக கேள்வித்தாளை முடிப்பவர்களுக்கு மட்டுமே இனி வரும் தியான செய்திகள் அனுப்பப்படும் என்பதை தயவாக குறித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் விசுவாசத்திலும்  ஐக்கியத்திலும்  நடக்க   நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

Click Here to Download as PDF -> Tamil