நோக்கங்கள் மட்டும் போதுமானதல்ல

Posted on November 14, 2025

Home Publications Posts நோக்கங்கள் மட்டும் போதுமானதல்ல

நோக்கங்கள் மட்டும் போதுமானதல்ல

னுதின வேததியானம்: நோக்கங்கள் மட்டும் போதுமானதல்ல

வேத தியானக் குறிப்பு: 2 சாமுவேல் 6:6,7 

      இயேசு கிறிஸ்து, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; (யோவான் 14 : 6) என்று கூறினார். இது, கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும், அதை நம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்துவது கடினம். நாம் அநேக நேரம் நம்முடைய நல்ல நோக்கங்கள் நல்ல முறையில் மதிப்பிடப்பட்டு கணக்கில் கொள்ளப்படும் என்று நினைக்க விரும்புகிறோம். அதாவது, நம்முடைய இருதயம் சரியான இடத்தில் இருக்குமானால், தேவன் நம்மை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறோம். ஆனால், வெறும் நம்முடைய நல்ல நோக்கங்கள் மட்டும் எப்பொழுதுமே நம்மை தேவனுடைய வழிகளோடு ஒத்துப் போக வைப்பதற்கு போதுமானது அல்ல என்று வேதாகமம் நமக்கு காட்டுகிறது. 

      2 சாமுவேல், 6 ஆம் அதிகாரத்தில் உள்ள ஊசாவை எடுத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி சுமந்து செல்லப்பட்டது, அந்த நிலையில் மாடுகள் தடுமாறின போது, ஊசா பெட்டியை நிலைநிறுத்த அவனுடைய கையை நீட்டினான். அது, தீங்கற்றதாகவும் மேலும் கனத்துக்குரிய ஒன்றாகவும் தெரிகிறது, இல்லையா? ஆனால், தேவன் அவனை அங்கேயே அடித்து விட்டார். ஊசா, தூன்மார்க்கானாக இருந்ததால் அல்ல, ஆனால், அவன் தேவனுடைய கட்டளைக்கு புறம்பாகச் செயல்பட்டதால் தேவன் அவனை அடித்தார். அவனுடைய இருதயம் நல்லதையே நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவனுடைய கைகள் தேவனுடைய வழியை விட முந்திச் சென்று செயல்பட்டன.   

    இந்த சம்பவம் என்னை கொஞ்சம் உலுக்கியது. அது, தேவனுடைய வார்த்தையைவிட நம்முடைய உணர்வுகளை நம்புவது எவ்வளவு எளிதானது என்பதை நினைவூட்டுகிறது. இதை தான் பிசாசு விரும்புகிறான். அவன், நாம்உண்மையில் சரியானதுமீது நம்பிக்கை வைப்பதை விட சரி என்று தோன்றுவதுமீது நம்பிக்கை வைப்பதையே விரும்புகிறான். ஆனால், வேதாகமம் கூறுவது போல, நம்முடைய இருதயம் ஏற்கனவே பாவத்தினால் தீட்டுப்பட்டு இருக்கிறது. எனவே, நாம் எவ்வளவு உண்மையாக இருந்தாலும், உடைந்து போன இருதயத்திலிருந்து பிறக்கும் எதுவும் தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை உருவாக்க முடியாது. 

     அதனால் தான்  இயேசு கிறிஸ்து நமக்கு தேவையானவராய் இருக்கிறார். நம்முடைய நோக்கங்கள் நம்மைக் இரட்சிக்க முடியாது. அவருடைய இரத்தம் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும். நம்மால் சரி செய்ய முடியாத நம்முடைய குழப்பங்களில் அவரே உள்ளே நுழைந்து நாம் முன்பாக செல்லக்கூடிய புதிய வழியை உருவாக்குகிறார். ஏசாயா 45:2ல் தேவன் இப்படியாக வாக்குத்தத்தம் செய்கிறார், “நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்; வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து”. இது, அவர்,நான் உன்னை வழிநடத்துகிறேன், நீ என்னை பின்பற்றுஎன்று சொல்லும் அவருடைய குரலாகும். 

        எனவே, உங்களுடைய நல்ல நோக்கங்கள் உங்களுடைய சாக்கு போக்காக மாற விடாதீர்கள். மாறாக, இயேசு கிறிஸ்துவின் மீது உங்கள் கண்களை வைத்திருங்கள்அவருடைய வழிகள் நமக்கு இயல்பாகத் தோன்றும் காரியங்களை ஊடுருவி வெட்டி சென்று அதற்கு மாறியதாய் தோன்றினாலும் அவைகளை பின்பற்றுங்கள். உண்மையான மகிழச்சி அங்குதான் தொடங்குகிறது. அது, சரியாகச் செய்வதன் மூலம் வரும் தற்காலிகமான மகிழ்ச்சி அல்லமால் இரட்சிப்பின் மூலம் வரும் ஆழமான நிலைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சியே ஆகும். 

இன்றைய சிந்தனைக்கு

     என்னுடைய நோக்கங்கள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினாலும் ஆவியினாலும் வழிநடத்தப்படுகின்றதா? என்னுடைய செயல்கள் என் சொந்த பகுத்தறிவிலிருந்து வராமல் அவருடைய சத்தியத்திலிருந்து வருகிறதா?  நான் ஒரு விஷயத்தை சரியாய் செய்வதில் திருப்தியடைகிறேனா அல்லது என்னை அவரிடம் அர்ப்பணித்து அவருக்காகக் காத்திருப்பதில் திருப்தி அடைகிறேனா? 

ஜெபம் 

      பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்முடைய இரக்கத்திர்க்காக உம்முடைய கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக வருகிறேன். என்னுடைய சொந்த நோக்கங்களை விட உம்முடைய வழியை முதன்மை படுத்துவதற்கு எனக்கு உதவி செய்யும். நான் உம்முடைய குணாதிசயத்தை பிரதிபலிப்பதன் மூலம் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக உம்முடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக. தேவனே, உம்மை பிரியப்படுத்துவதற்கு என்னுடைய விருப்பங்கள் மட்டும் போதுமானவை அல்ல என்பதை நான் அரிந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் வழியைத் தேடவும், என்னுடைய நோக்கங்களை ஒரு காரணமாகப் பயன்படுத்தாமல் இருக்கவும் எனக்கு கிருபை செய்வீராக. குயவனின் கையில் களிமண்ணைப் போல நான் என்னை உம்மிடத்தில் கீழ்ப்படுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். 

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது

நம்முடைய புரிந்து கொள்ளுதலிலும் அறிவிலும் இருந்து வரும் நம்முடைய மிக சிறந்த நோக்கங்களும் தேவனுடைய இருதயத்திலிருந்து தவறி இருக்க முடியும். நன்மையானதை மனதில் கொண்டு செயல்படுவதும் கீழ்படிதலில் நடப்பதும் ஒன்று அல்ல என்பதை ஊசியாவின் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்து, நம்முடைய நல்ல நோக்கங்களினால் மட்டும் அல்லாமல் நம்முடைய ஒவ்வொரு படிகளும் அவரிடத்தில் சரணடைக்கப்பட்டதாய் இருந்து அவருடைய வழிகளை பின்பற்ற நம்மை அழைக்கிறார்.

(2025 நவம்பர் மாதம் 15 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது) 

அறிவிப்புகள்: 

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09  (சந்திப்பு ஐடி (Meeting ID) : 811 4423 5750.  கடவுச்சொல் (Password): 12345). 

  1. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.  உங்களுடன்    விசுவாசத்திலும்  மற்றும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். 
  • எங்களுடைய ஊழியங்கள்  மற்றும்  கூடுகைகளை குறித்த  அறிவிப்புகளுக்கும்    மற்றும் தகவல் தொடர்புக்கும்  எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்:  https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், கீழே உள்ள  இணைப்பு உபயோகித்து ஏற்பாடு செய்யுங்கள்.                    https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment.

Click Here to Download as PDF-> Tamil