வாராந்திர வேத தியானம்: உங்களுடைய குடும்பம் யார்?
வேத தியானம் : நியாதிபதிகள் 15 : 10 -13.
12.அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.
13.அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
அன்புள்ள திருச்சபையே,
நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் விலையேரப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள். நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன் – உங்களுடைய சொந்த குடும்பத்தினரால் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களினால் எப்போதாகிலும் கட்டுண்டவர்களாக, தவறாக புரிந்து கொள்ளபட்டவர்களாக அல்லது தள்ளபட்டவர்களாக உணர்ந்திருக்கிறீர்களா? இப்படிபட்ட அனுபவம் உங்களுக்கு மாத்திரம் நிகழவில்லை. சில மிக ஆழமான போராட்டங்கள் நம்முடைய அந்நியர்களிடமிருந்து அல்ல, நம்முடைய சொந்த வட்டத்திற்குள் இருக்கும் மக்களிடம் இருந்தே வருகின்றன என்பதை வேதாகமம் நமக்குத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகிறது.
இதை நாம் கல்தேயர்களுக்கு பின்னாக செயல்பட்ட ஆவியினூடாக தெளிவாகக் காண்கிறோம். வேதாகமத்தில், கல்தேயர்கள் வெறும் ஆளுகை செய்கிறவர்களாக மட்டுமல்ல, அவர்கள் தேவ ஞானத்தைப் போலத் தோன்றும் போலியான ஞானத்தை உடையவர்களாக, தேவனுடைய சத்தியத்தையும் சித்தத்தையும் விட்டு விலகி வழிதவறச் செய்யும் ஞானத்தையுடைய அமைப்பாக இருக்கிறார்கள் — அவர்கள் கற்றறிந்தவர்களாகவும், ஆவிக்குரியவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் தோன்றினார்கள். அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய நடத்துதலுக்கு அப்பாற்ப்பட்டு செயல்பட்டார்கள். அவர்களுடைய ஆதிக்கத்தை வன்முறையால் மட்டுமல்லாமல் மறைமுக ஊடுருவலின் மூலமாகவும் உருவாக்கிக் கொண்டார்கள். விசுவாசங்களையும் மற்றும் அடையாளங்களையும் மெதுவாக மாற்றி அமைத்து, தேவனாகிய கர்த்தருடைய மக்களின் உள்இருதயங்களை பெலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்பட்டார்கள். எந்தப் போராட்டங்களும் இல்லாமல் பாபிலோன் திடீரென வீழ்ந்து போனது; வெளிப்படையாகத் தெரியும் எதிர்ப்பைவிட, மறைந்துள்ள கையாளுதலும் சூழ்ச்சியின் வஞ்சகமும் மிகவும் ஆபத்தானவை என்பதை அது வெளிப்படுத்துகிறது.
சிம்சோனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவருடைய வாழ்க்கையானது வல்லமையான ஜெயங்களினாலும் மற்றும் வேதனையூட்டும் தீர்மானங்களினாலும் அடையாளப்பட்டிருக்கிறது. அவர் தவறான உறவுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டபோது, அந்த தீர்மானங்களின் விளைவுகள் அவருக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியிருந்த மக்களுக்கும் ஏற்ப்பட்டன. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால்: பெலிஸ்தியர்கள் சிம்சோனை கட்டுப்படுத்த விரும்பியபோது, அவர்கள் முதலில் அவரை நேரடியாகத் தாக்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய சொந்த ஜனமான யூதமக்களுக்கு அவர்கள் நெருக்கடியைக் கொடுத்தார்கள். பெலிஸ்தியர்களின் ஆட்சிக்கும் மற்றும் பயத்திற்கும் கீழ்ப்பட்டு நடந்த யூதமக்கள், சிம்சோனைக் கட்டி, எதிரியிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார்கள் .
நாம் சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. உண்மையான குடும்பம் என்பது நம்முடைய சுகமான நேரத்தில் நம்மோடு இருப்பது அல்ல எதிரிகளினால் நெருக்கடி எழும்பும்போது நம்முடன் நிற்கிறவர்களே. பயம், மாம்சம் அல்லது உலகத்தினுடைய ஆளுகைகள் மக்களுக்குள் இருக்கின்ற வேளையில் சூழ்நிலைகள் அமைதியாக இருக்கும் போதும் அவர்கள் உங்களிடம் அன்பாகப் பேசக்கூடும். ஆனால் நெருக்கப்படுகிற சூழ்நிலையில் வரும்போது, அவர்கள் விசுவாசத்தை விட பாதுகாப்பைத் தேர்ந்தெடுத்து உங்களை எதிரியின் கைகளில் ஒப்படைக்கக்கூடும். இதே மாதிரியான நிகழ்வுகளை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் காண்கிறோம். இயேசு கிறிஸ்து கூட காட்டிக் கொடுக்கப்பட்டார் – அந்நியரால் அல்ல, பன்னிரண்டு பேரில் ஒருவரான யூதாஸால். அவருடன் நெருக்கமாக நடந்த ஒருவன். அவன் பார்வைக்கு உண்மையுள்ளவராகவும் அவருடன் நெருங்கிய உறவில் இருப்பவனாக தன்னைக் காட்டிக்கொண்டான் ஆனால், மெய்யாக அவனுடைய விசுவாசம் மற்றவர்களுடைய பார்வைக்காக மாத்திரமே இருந்தது .
இங்கு உங்கள் மேல் கரிசனையின் நிமித்தம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் விரும்புகிறேன் : நீங்கள் எப்போதாவது துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அடக்குமுறையில் வாழ்ந்ததாக உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தவர்களால்— உணர்வுப்பூர்வமான, ஆவிக்குரிய வாழக்கையில் அல்லது உறவுகளில்— உங்கள் எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி: நமக்கு முன்னே போய், கோணலான பாதைகளைச் செவ்வையாக்குகிற கர்த்தர் நம்மோடு சேர்ந்து நடக்க நம்மை அழைக்கிறார். அவர் இந்தப் போராட்டங்களை நாம் தனித்து போராடுவதற்க்கு நம்மிடம் கேட்கவில்லை. நாம் அவரோடு நடக்கும்போது, அவர் நமக்காக யுத்தம்பண்ணுவார்.
ஆனால் அவர் நம்மை ஞானமான தீர்மானங்களை எடுக்கவும் அழைக்கிறார். நாம் நம்முடைய நேரத்தையும் பெலனையும் சரியான குடும்பத்தையும் கண்டறிந்து அவர்களிடத்தில் முதலீடு செய்ய வேண்டும்— சவால்களும், அச்சுறுத்தல்களும், நெருக்கங்கள் வரும் போது நம்மோடு உறுதியாக நிற்கிறவர்களே சரியான குடும்பம் மற்றும் அவர்களே ஒரு ஆவிக்குரிய குடும்பமாயும் இருக்கிறார்கள். குடும்பம் என்பது நாம் தவறுகள் செய்யும் போது நம்மை புறக்கணிக்காமல், அந்த தவறுகளினுடைய விளைவுகளின் வழியாக நம்மோடு நடந்து, அன்பினால் சத்தியத்தை போதித்து, மேலும் சிறந்த தீர்மானங்களை எடுத்து அதில் வளர உதவி செய்கிறவர்கள்.
ஒரு உண்மையைக் உங்களுக்குச் சொல்கிறேன். சரியான தேர்வுகளை செய்ய உண்மையாகவே விரும்புகிற அநேக மக்கள் இன்றும் இருக்கிறார்கள்—ஆனால் அவர்களுடைய போராட்டதிற்க்கான காரணம் சுதந்திரத்தையும் விசுவாசத்தையும் வளர்க்கும் ஆரோக்கியமான, தேவபக்தியுள்ள குடும்பத்தை அவர்கள் ஒருபோதும் அனுபவிக்கத்தவறியதே.
ஆகையால், அன்பான சபையினரே, இதை நீங்கள் வாசிக்கும் போது இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பாருங்கள் :நம்முடைய நெருக்கத்தில் நம்மைச் சார்ந்தவர்களை எதிரிகளின் கைக்கு ஒப்புக்கொடுக்கிறோமா? அல்லது இயேசு கிறிஸ்துவின் ஆளுகையின் கீழ் ஒன்றாய் நின்று, ஜெபித்து, போதித்து, அவருடைய மீட்புக்காக அவர்களோடு இணைந்து போராடும் குடும்பமாகக் காணப்படுகிறோமா?
நாம் சரியானதைத் தேர்ந்தெடுக்க தேவன் நமக்கு உதவுவாராக—அவருடைய இருதயத்தை பிரதிபலிக்கும் குடும்பமாக நம்மை இருக்கச் செய்வாராக.
இன்றைய சிந்தனைக்கு:
இன்று நமக்கு நினைவூட்டப்படுவது என்னவென்றால், வாழ்க்கையின் மிகப்பெரிய போராட்டங்கள் சில நேரங்களில் அந்நியர்களிடமிருந்து அல்ல, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்தே வருகின்றன. பயமும் சமரசமும் நம்மோடு பழக்கமானவர்களைக் கூட தற்காலிக பாதுகாப்பிற்காக தேவனுடைய நோக்கங்களை விட்டுக்கொடுக்கச் செய்யும் என்பதை வேதம் நமக்கு காட்டுகிறது. சிம்சோனைப் போலவே, நம்முடைய பெலன் எதிரிகளால் மட்டுமல்ல, நாம் நம்பத் தேர்ந்தெடுக்கும் உறவுகளாலும் சோதிக்கப்படுகிறது. ஆனாலும் நாம் கீழ்படிதலோடு நடக்கும்போது தேவனாகிய கர்த்தர் நமக்கு முன்னே போய், கோணலானவைகளை செவ்வையாக்கி நமக்காக யுத்தம்பண்ணுகிறவராய் இருக்கிறார், துரோகம் நேர்ந்தாலும், இயேசு கிறிஸ்து அதை புரிந்துகொள்கிறார்; ஏனெனில் அவரும் தம்முடன் நெருக்கமாக நடந்த ஒருவரால் ஒப்புக்கொடுப்பட்டார். இந்த சத்தியம், பயத்தினால் அல்ல, விசுவாசத்தில் உறுதியாக நிற்கும் ஒரு ஆவிக்குறிய குடும்பத்தை நாம் தேடவும், அத்தகைய குடும்பமாக நாம் மாறவும் அழைக்கிறது. இன்று, கிறிஸ்துவின் இருதயத்தை பிரதிபலிக்கும் விசுவாசம், ஞானம் மற்றும் அன்பை நாம் தேர்ந்தெடுப்போமாக.
ஜெபம்:
பரலோகத்தில் இருக்கும் எங்களுடைய பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நான் உமக்கு முன்பாக வருகிறேன். முதலாவதாக, என்னைப் பாதுகாத்ததற்கும், நான் தவறான தேர்வுகளைச் செய்து அதன் விளைவுகளுடன் போராடும்போது என்னைத் கைவிடாததற்கும் நன்றி செலுத்துகிறேன். அநேக முறை, நான் இந்த உலகத்தினுடைய கொள்கைகளைப் பின்பற்றினேன், என்னுடைய குடும்பம் மாறும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் வேதத்தில் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு தெளிவான மற்றும் சரியான கொள்கைகளை நீர் கொடுத்திருக்கிறீர். உலகத்தின் கொள்கைகளிலிருந்து என்னுடைய இருதயத்தை விடுவித்து, உம்முடைய வார்த்தையில் உள்ள கொள்கைகளின்படி வாழ எனக்கு உதவி செய்யும். நீரே எங்களுடைய உண்மையான குடும்பம், எப்போதும் என்னை உண்மையான ஐக்கியத்திற்குள் நடத்துவதற்கு வல்லவராய் இருக்கிறீர். ஆயினும், என்னுடைய வசதிக்காக உம்முடைய வழிநடத்துதலை நான் பலமுறை விட்டு விலகியிருக்கிறேன். உம்முடைய அன்பான எச்சரிக்கைகளுக்கும் சீர்திருத்தங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து, விசுவாசமுள்ள மக்களுடன் நடந்து, பிசாசுக்கும் எல்லா தீமைக்கும் எதிரான போராட்டத்தில் பெலப்படுத்தப்படுவதன் மூலம் சரியான தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமேன்.
இந்த வாரம் கற்றுக்கொள்ள வேண்டியது :
நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் நம்முடைய வெளிப்படையான எதிரிகளிடமிருந்து அல்ல, நம்முடைய நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் மக்களிடம் இருந்தே வருகின்றன. பயமும் சமரசமும், தேவனுடைய நோக்கத்தை கூட பொருட்படுத்தாமல், மக்களுடைய விசுவாசத்தை விட பாதுகாப்பைத் தேர்ந்தெடுக்கச்செய்கிறது. இயேசு கிறிஸ்து நம்மை ஞானமாக நடக்கவும், நெருக்கத்தின் மத்தியில் உறுதியாக நிற்கும் ஒரு ஆவிக்குரிய குடும்பத்துடன் நம்மைச் சூழ்ந்து கொள்ளவும் அழைக்கிறார். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இந்த வகையான குடும்பத்தை தேர்ந்தெடுத்து— தேவனாகிய கர்த்தருக்குள் ஒன்றுப்பட்டு ஜெபிக்கிற, மீட்டெடுக்கிற மற்றும் ஒன்றாக சேர்ந்து நிலையாக நின்று நெருக்கக்கூடிய குடும்பமாக இருக்க வேண்டும்.
(2026 ஜனவரி மாதம் 10 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
1.உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்காலை 6 மணிக்கு
(இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID): 8114423 5750. கடவுச்சொல் (Password): 12345).
2. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள்.
https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
3. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas
4. இனி வரும் எங்களுடைய தியான செய்திகளை நீங்கள் தொடர்ந்து பெற விரும்புவீர்கள் என்றால், உங்களுடைய பெயரையும் மின்னஞ்சல் ஐடி யையும் (email ID) எங்களுடைய தகவல் சேகரிக்கும் தரவுதளத்தில் புதுப்பித்து மேம்படுத்துவதற்காக உங்களுடைய உதவியை நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கிறோம்.
இதற்காக, நீங்கள் நிரப்பும் படியாக ஒரு சிறிய கேள்வித்தாளை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். இதை நீங்கள் நிரப்பி அனுப்பியவுடன் ஒரு ஆறு மாத பதிவு திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். தமிழ், ஆங்கிலம், மற்றும்/ அல்லது தெலுங்கு மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் இந்த வெளியீடுகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒன்று அல்லது பல மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த செயல்முறையை நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடியும் புதுப்பிப்போம். இந்த கேள்வித்தாளிற்கான இணைப்பை உங்களுடன் மின்னஞ்சல் மூலமாக அல்லது எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள பெற்றுக்கொள்ளலாம்
இணையதளத்திற்கக்கான இணைப்பு: https://hearmatthew1128.org/
கேள்வித்தாளிற்கானஇணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1CqDjh3ofH8KyqVfzTnG38kCZxAzOyp8MHecoFrY6lL4p3Q/viewform
இந்த செயல்முறை மூலமாக கேள்வித்தாளை முடிப்பவர்களுக்கு மட்டுமே இனி வரும் தியான செய்திகள் அனுப்பப்படும் என்பதை தயவாக குறித்துக் கொள்ளுங்கள்.
உங்களுடன் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
Click Here to Download as PDF -> Tamil