தேவனுடைய நற்செய்தியின் மிகுந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளுதல்
நற்செய்தி என்பது வெறும் செய்திமட்டுமல்ல. அது நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாகும். இது நமக்கு கற்றுக்கொடுப்பதோடு நின்றுவிடாமல் மேலும் நம்மை விடுதலையடையச்செய்து ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் இன்னும் நெருங்கி சேர்க்கிறதாயிருக்கிறது. யோவான் 4: 28-30 ம் வசனங்களிலிருந்து சமாரிய ஸ்திரீயினுடைய நிகழ்வுகழ்வுகளை சிந்தித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்து அந்த சமாரிய ஸ்திரீயை சந்தித்த பிற்பாடு, அவள் பெற்ற அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற கட்டளைக்காகவோ எப்படிப்பட்ட அல்லது எடுத்துக்கூற வேண்டும் அதை என்ற விதத்தில் திட்டத்திற்க்காகவோ அவள் காத்திருக்கவில்லை. அவள் உடனடியாக அந்த நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதற்காக ஓடினாள் எல்லையில்லாத அவளுடைய மனமகிழ்ச்சியானது தொற்றுபோல மற்றவர்களுக்குள்ளும் பரவக்கூடியதாக இருந்தது. இந்தவிதமாகவே ஒரு நற்செய்தியானது இயங்குகிறது அதை நமக்கென்று மட்டும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடத்திலும் பகிர்ந்துகொள்வதற்க்காகவே கொடுக்கப்பட்டுள்ளது.
அவளுடைய செய்கையை கவனித்துப்பாருங்கள்: அவள் அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்கு தனிப்பட்ட நுட்பங்கள் அல்லது திறமைகளை வளர்க்கவில்லை. நற்செய்தியை ஒருவர் ஏற்றுக்கொள்வதென்பது தேவனாகிய கர்த்தருடைய செயலேயன்றி அதை தன்னுடைய வேலையாக எண்ணி அவள் கவலைப்படவுமில்லை. அவள் மிகவும் சாதாரணமாக எளிமையுடன் கூடிய நம்பிக்கையான விசுவாசத்தின் மூலமாக அதை செய்தாள் தேவனிடத்திலிருந்து நற்செய்தியை நாம் பெற்றுக்கொள்ளும்போது அது நம்மை மீட்டுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உள்ளான மனிதன் மறுரூபமாக்கப்படுவதன் மூலம் நமக்குள்ளிருக்கும் இயேசு கிறிஸ்துவை வெளியரங்கமாக பிரதிபலிக்கக் கூடிய குணாதிசயங்களை நமக்குள்ளாக உருவாக்குகிறது.
இயேசு கிறிஸ்து ,தேவனை விசுவாசிக்கிறவனுக்குள்ளாக ஜீவ தண்ணீரின் ஊற்றானது இருக்கிறது என்று யோவான் 4 -14 ம் வசனத்தில் கூறுகிறார். இந்த ஜீவ தண்ணீரின் ஊற்றானது உள்ளிருந்து வெளிப்புறமாக பாய்ந்து செல்லும் ஆகையால் அதை நமக்குள்ளாக தேக்கி வைக்க முற்படும் பொழுது அது ஒரு நீரூற்றினை அடைத்து வைப்பது போன்ற தீங்கிற்கு ஒப்பானதாகும்.
லோத்துவை நினைவில் கொள்ளுங்கள் அவன் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதை பார்த்தும் அதைபற்றி வெளியே பேசாமல் சோதோமில் அமைதியாக வாழ்ந்துவந்தான் அதைப்பற்றி அவன் பேச முன்வராத காரணத்தினால் அவன் பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது அதுபோலவே தேவனாகிய கர்த்தரின் மூலமாக நமக்கு கொடுக்கப்பட்டதை மற்றவர்களுடன் பகிரவில்லையானால் அதை நாமும் இழக்க நேரிடும்.
மத்தேயு 25:14 – 30 ல் இயேசு கிறிஸ்து, இதை பற்றி தெளிவாக கூறுவது என்னவென்றால், தேவனாகிய கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்டதை கொண்டு நாம் பெருக்கமடைய செய்யும் போழுது அது இன்னும் கொடுக்கப்படும். அப்படியல்லாமல் அதை மறைத்து வைப்போமேயானால் நம்மிடத்திலுள்ள கொஞ்சமும் எடுத்துக்கொள்ளப்படும். நற்செய்தியானது பெரும்பாலும் “விலையேறப்பெற்றது” என்று உலகத்தால் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் அது மிகவும் வல்லமையுள்ளதாகும். அந்த சமாரிய ஸ்திரீனுடைய எளிமையுள்ள சாட்சியானது மற்றவர்களையும் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியது – இது நம்முடைய மனமகிழ்ச்சியை பகிர்தலினுடைய முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகிறது.
ஆகையால் நாம் நற்செய்தியை பெற்றுக்கொண்டு அதன் மூலம் மறுரூபமடைந்து அதனை விசுவாசத்துடன் மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்ளக்கடவோம் என்பதை நம் நினைவில் கொள்வோம். உங்களுடைய வாழ்க்கையின் மூலமாக தேவனாகிய கர்த்தர் அதை பெருக்குவார் என்று நம்பிக்கையாயிருங்கள் உங்களுடைய சந்தோஷம், ஜீவ தண்ணீரைப்போல பெருகி பாய்ந்து ஓடக்கடவது.
சிந்தனைக்கு:
இன்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்: தேவனாகிய கர்த்தர் எனக்கு கொடுத்த சந்தோஷத்தையும், வாழ்க்கையையும் தடுத்து வைத்திருக்கிறேனா? எது அவருடைய அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள என்னை தடுக்கிறது ? சில நேரங்களில் நம்முடைய பயம், தாழ்வுமனப்பான்மை, மற்றும் நான் அதற்கு தயாராக இல்லை” என்ற எண்ணங்களே ஆகும். ஆனால் அந்த சமாரிய ஸ்திரீயானவள் நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால்: எளிமையுள்ள விசுவாசம் மட்டுமே போதுமானது மற்றவைகளெல்லாம் தேவனாகிய கர்த்தரால் பார்த்துக்க்கொள்ளப்படும் என்பதே.
ஜெபம்:
பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்வதாவது நாங்கள் உம்மாலே மிகுதியாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தும் பல நேரங்களில் சுயநலமாக வாழ்ந்து உம்முடைய இராஜ்யத்தை விட்டு வழி விலகி செல்கிறவர்களாக இருக்கிறோம். நீர் என்னுடைய இருதயத்தில் ஊற்றிய ஜீவ தண்ணீருக்காக நன்றி செலுத்துகிறேன். நீர் எனக்கு கொடுத்த நற்செய்தியின் சந்தோஷத்தை நான் எந்த வித தயக்கமோ அல்லது பயமோ இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். எளிமையுள்ள ஒரு சாட்சியம் கூட உணர்வடையச்செய்வதாகவும் வாழ்வை மாற்றக்கூடியதாகவும் இருக்கும் என்று நான் அறிந்துக்கொள்ளவும் என்னுடைய வாழ்வில் உம்முடைய முடிவுகள் ஏதுவாயினும் அதை நம்புவதற்க்கு கற்றுத்தாரும். ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே தைரியத்தினாலும், அன்பினாலும் நிரப்பி அதனால் உம்முடைய ஆசீர்வாதமானது என் வழியாக மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கற்றுக்கொள்வதற்கு:
கிறிஸ்துவை அறிந்துகொள்வதின் சந்தோஷமானது உட்புறம் இருந்து வெளிப்புறமாக வழிந்தோடும் நீரூற்றுக்கு ஒப்பானது. தேவனாகிய கர்த்தரால் உங்களுக்கு கொடுக்கப்பட்டதை பகிர்ந்துகொள்ள வேண்டும் உங்களுடைய சாட்சி, உற்சாகம், அன்பு இவைகளே ஆகும். பூரணப்படுதலுக்காவோ அல்லது அனுமதிக்காகவோ காத்திருக்க வேண்டாம். உங்கள் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பி வழியக்கடவதாக அதை தேவனாகிய கர்த்தர் பெருக்கமடைய செய்வார் என்பதை நம்புங்கள்.
(அக்டோபர் மாதம் 09.10.2025 அன்று மத்தேயு11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜலஜாக்ஷி அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரர் டேவிட் மற்றும் சகோதரி அபிகேலால் மொழிபெயர்க்கப்பட்டது).
அறிவிப்புகள்:
1. எங்கள் வேததியானக் கட்டுரைகளை நீங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து பெற விரும்பினால், எங்களுடைய சிறு வினாத்தாளை நிரப்பவும். இந்த சிந்தனைகள் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. மேலும் அவை உங்கள் இன்பாக்ஸுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
2 உங்கள் சீஷத்துவப் பயணத்தில் ஆதரவு தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்கள் வாராந்திர சீஷத்துவ அமர்வுகளில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இணைப்பு:https://us06web.zoom.us/i/811442357507pwd=EsfuED6du4T 8YMjFdSXdpvWuPXpCOW.1 (சந்திப்பு ஐடி: 811 4423 5750.கடவுக்குறியீடு: 12345).
3. தனிப்பட்ட ஆலோசனைக்கு, தயக்கமின்றி எங்களைத் தொடர்பு கொள்ளவும் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் உங்களுடன் நடக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Click here to Download as PDF -> Tamil