செய்திமடல், ஜூலை 2021 PART 2

Posted on July 15, 2021

Home Publications Posts செய்திமடல், ஜூலை 2021 PART 2

செய்திமடல், ஜூலை 2021 PART 2

அன்புள்ள திருச்சபையோரே,

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

தேவனை ஆராதிக்கவும் ஐக்கியத்தில் மகிழவும் நம் வாழ்வில் அவர் அளித்த வாய்ப்பிற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்ற நல்ல ஈவுகளை எண்ணி, அதற்காக நன்றி செலுத்துவது முக்கியம். அவருடைய நாமத்தை நாம் துதிப்பதற்காக அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாக இருக்கிறோம். எனவே, அவருடைய நாமத்தையும், அவருடைய வழியையும், அவருடைய சத்தியத்தையும் அறிந்து கொள்வதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். பலமுறை, அவரை அறிந்துகொள்வது எவ்வளவு பாக்கியம் என்பதை நாம் உணராமலிருக்கிறோம். ஆகவே, தேவனில் களிகூரவும், மற்றவர்கள் கர்த்தரிடத்தில் வளர உதவவும் நான் திருச்சபையை ஊக்குவிக்கிறேன்.

இதுவரை, உறவு என்ற தலைப்பில் மூன்று முக்கியமான விஷயங்களை நாம் விவரித்தோம். இவை,

1.       மற்றவர் சொல்லும் எல்லாவற்றிற்கும் “ஆமாம்” என்று அவரை பிரியப்படுத்துவதற்காக சொல்வது தீமை.

2.       மற்ற நபருக்கு அஞ்சுவது உறவு அல்ல.

3.       உரையாடல்களின் முக்கியத்துவம். உரையாடல்களின் கீழ்,

a.       வாதம் ஆரோக்கியமானதோ அல்லது தேவபக்திக்கேற்றதோ இல்லை.

b.       மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதன் முக்கியத்துவம்.

c.       மற்றவர்களுக்கு அவர்களின் குறைபாடுகளை உணர இடமும் நேரமும் அளித்தல்.

d.       நியாயந்தீர்க்க  வேண்டாம்.

e.       உரையாடலில் சீர்படுத்துதலின் முக்கியத்துவம்.

இந்த செய்திமடலில் நாம் ஒரு உறவின் நான்காவது முக்கியமான அம்சத்தைப் பார்க்கப் போகிறோம், அதாவது, ‘உறவைச் சோதித்தறிதல்.’ பல முறை, உறவுகளை தேர்ந்தெடுப்பதில் தவறான முடிவை எடுக்கிறோம் ஏனென்றால் தேவனின் வார்த்தைக்கு எதிரான பழக்கத்தை நாம் வளர்த்துக் கொண்டுள்ளோம்,. ஒவ்வொரு உறவிற்கும் ஒரு சோதனை தேவை, எனவே ஒரு உறவை சோதித்தறியாமல் நல்லது அல்லது கெட்டது என்று தீர்ப்போமானால், அந்த முடிவை நம் மாம்சத்தில் எடுக்கிறோம்.

தேவனின் சித்தத்தை அறிவது

ஒரு உறவைப் பற்றி தேவனின் சித்தத்தை அறிய பல முறை நமக்கு மிகுந்த தாகம் இருக்கிறது. அதன்படியே, சத்தியத்தை உணர தேவனும் நமக்கு உணர்வளிக்கிறார், மற்றும் அதை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார், ஆனால் அதைக் காண நாம் குருடர்களாக இருக்கிறோம். நம் அறிவு நம்மை வஞ்சித்து, உணர்ந்து கொள்வதற்குப் பதிலாக ‘அறிவை’ நோக்கி நம்மை வழிநடத்துவதால் நம்மால் அதைப் பார்க்க முடியவில்லை. ஆகவே, தேவனின் சித்தத்தை நம் மனந்திரும்புதலால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நம்முடைய கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால உறவுகளைப் புரிந்துகொள்ள தேவனின் சித்தம் மிக முக்கியமானது. கடந்த காலத்திலிருந்து ஒரு உறவு நம் வாழ்வில் தொடர வேண்டுமா என்பதை பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதேபோல், நமது கடந்த கால நினைவுகள் அல்லது அனுபவங்கள் தற்போதைய உறவுகளையும் முடிவுகளையும் பாதிக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். கடந்த காலம் நம்மை நம்முடைய நிகழ்காலத்தை சோதித்தறிவதற்கு கண்களை மறைகின்றதா என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். அடுத்து, ஒரு உறவின் தற்போதைய தரத்தையும் மற்றும் எதிர்காலத்தையும் நாம் தீர்மானிக்க வேண்டும். தற்போதைய உறவு நம் தியாகங்களுக்கு தகுதியானதா, அது தேவனுடனான சரியான நிலையில் இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மேலும், ஒரு உறவை தொடர்கிறதுக்கு அது தகுதியானதா என்பதையும், அதன் எதிர்காலம் எத்தன்மையுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பகுப்பாய்வு செய்யும் போது, உறவில் உள்ள நபரின் கிரியைகள், சொற்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் நாம் பெரும்பாலும் முடிவுகளுக்கு வருகிறோம். எனவே, மேலோட்டமான வெளிப்பாடுகள் மற்றும் வெளியரங்கமான தோற்றங்களின் அடிப்படையில் நாம் நிதானித்து முடிவுகள் எடுக்கின்றோம், நோக்கங்களின் அடிப்படையில் அல்ல. இது சோதித்தறிதலின் தவறான முறையாகும்; எனவே, இது தவறான முடிவுகளை அளிக்கிறது. இதற்கு வேதாகமம் ஒரு தீர்வை அளிக்கிறது, அதாவது, மனந்திரும்புதல், இதன் மூலம் தேவன் நமக்கு சத்தியத்தை வெளிப்படுத்துவார். இது குறித்து, 1 யோவான் 4: 1-ல் ஒவ்வொரு ஆவியையும் சோதித்தறிய நமக்கு ஒரு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது, “பிரியமானவர்களே, உலகத்தில்அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள்தோன்றியிருப்பதினால், நீங்கள்எல்லாஆவிகளையும்நம்பாமல், அந்தஆவிகள்தேவனாலுண்டானவைகளோஎன்றுசோதித்தறியுங்கள்.” நமது கடந்த காலத்தை பரிசோதனை செய்யும் போது, பெரும்பாலும், நம்முடைய கடந்த கால அனுபவங்களை நாம் நம்புகிறோம், அதன் அடிப்படையில் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர நாம் பிடிவாதமாக இருக்கிறோம். கடந்த காலத்தில், ஒரு உறவு சீராக அல்லது கடினமானதாக இருந்திருக்கலாம், மக்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொண்டிருந்திருக்கலாம், மேலும் ஒரு உறவு சில நினைவுகளையும் அனுபவங்களையும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ உருவாக்கியிருக்கலாம். இருப்பினும், ஒரு உறவு எப்போதும் ஒரே மாதிரியைப் பின்பற்றும் என்று அர்த்தமல்ல. ஒரு நல்ல உறவு கசப்பானதாகக்கூட மாறும். நிலைமை மாறும்போது மற்றும் அந்த உறவு நமக்கு எதிரான ஆயுதமாக மாறும்போது கூட, கடந்த காலத்திலிருந்த அந்த உறவின் சில நல்ல நினைவுகள் நம்மைப் மதிமயங்க செய்து, மேலும் அது நிகழ்காலத்தின் ஆயுதத்தை உணர அனுமதிப்பதில்லை. உறவு தோல்வியடையும் போதும் நமது கடந்தகால அனுபவங்கள் நம்மை சமரசம் செய்ய வைக்கின்றன. மறுபுறம், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலமும் கசப்பானதாக இருக்கும் என்று நாம் தீர்மானிக்கிறோம், மேலும் இது எதிர்கால உறவின் சாத்தியமான நன்மைகளை ருசிப்பதற்கும் கடவுளின் சித்தத்தை உணர்ந்து கொள்வதற்கும் நம்மைத் தடுக்கிறது. மனந்திரும்புதலின் மூலம், கடந்த காலத்தை நம்புவதின் வஞ்சகத்திலிருந்து நாம் விடுவிக்கப்படுவோம், மற்றும் சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதையும் நாம் காணமுடியும். அடுத்து, ஒரு உறவின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்க, ஒரு மனிதனின் இருதயத்தில் இருப்பதை தேவனால் மட்டுமே பார்க்க முடியும். மனிதனால் முகத்தையும் தற்காலிக விஷயங்களையும் மட்டுமே பார்க்க முடியும். அவன் மற்றவர்களின் உண்மையான தன்மையையோ நோக்கங்களையோ புரிந்து கொள்ள முடியாது. தற்போது ஒரு உறவு இனிமையானதாகத் தோன்றுவதால், எதிர்காலத்திலும் அது அப்படியே இருக்கும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. ஒரு மனிதன் இதை அறிந்துகொள்ள, உறவை சோதனைக்குட்படுத்த வேண்டும். சோதித்தறிவதன் மூலம் மட்டுமே, ஒரு உறவின் எதிர்காலத்தைப் புரிந்து கொள்ள முடியும். சரியான கண்ணோட்டத்தில் உறவைப் பார்க்க சோதனை உதவும். உறவு சரியான திசையில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கான உணர்திறனை இது நமக்குத் தரும், இதுவே விசுவாசம். சோதனையின் மூலம், அக்கினியானது தங்கத்தையும் குப்பையையும் வெளிப்படுத்தும், மேலும் எதிர்காலத்திற்கு அது நம்மை தயார்படுத்தும். இதனால், கடந்த காலத்தின் வஞ்சகம் நம்மில் அகற்றப்படும், மேலும் நிகழ்காலத்திற்கான தேவனின் வழிகாட்டுதலைப் புரிந்துகொள்வதில் நாம் உணர்திறன் அடைவோம். இவ்வாறு, நீங்கள் மனந்திரும்புதலுக்காக ஜெபிக்கும்போது, அவர் கல்லான இருதயத்தை அகற்றி உங்களை விடுவிப்பார், மேலும் சத்தியத்தை உங்களுக்கு புரிய வைப்பார்.

சோதித்தறிதல்என்றால் என்ன?

ஒரு அபிப்ராயத்தை உருவாக்குவதற்கு முன்பு நீங்கள் ஒரு ஆவியை சோதித்தறிய விரும்பினால், நீங்கள் அந்த உறவை தேவனிடத்தில் கொடுக்க வேண்டும். பின்னர் தேவன் அந்த உறவை சோதித்தறிவார். இந்த செயல்பாட்டில் மிகப்பெரிய வஞ்சகம் என்னவெனில் ஒரு உறவை சோதித்தறிய அனுமதிப்பதற்கு பதிலாக, உறவின் நல்ல பக்கத்தை நாம் பார்த்து ஏற்கனவே ஒரு அபிப்ராயத்தை உருவாக்குகிறோம். 1 கொரிந்தியர் 3: 13 ல் அவனவனுடையவேலைப்பாடுவெளியாகும்; நாளானதுஅதைவிளங்கப்பண்ணும். ஏனெனில்அதுஅக்கினியினாலேவெளிப்படுத்தப்படும்; அவனவனுடையவேலைப்பாடுஎத்தன்மையுள்ளதென்றுஅக்கினியானதுபரிசோதிக்கும்.” சோதித்தறிதலில் இரண்டு முக்கியமான அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, காலம். சோதனை நம்முடைய காலக்கெடு அல்லது எதிர்பார்ப்புகளைப் பின்பற்றாது. இரண்டாவதாக, அது வெளிப்படுத்தப்படும் விதம். தங்களுக்கு உண்டாயிருக்கும் சமாதானம், அவர்கள் காணும் அறிகுறிகள் மற்றும் தேவனின் ஊழியக்காரர்கள் மூலம் அவர்கள் பெற்ற தீர்க்கதரிசனங்கள் ஒரு உறவை அல்லது நபரைப் பற்றிய ஒரு அபிப்ராயத்தை உருவாக்க உதவும் என்று பலர் கருதுகிறார்கள். இது சரியான வழி அல்ல. சரியான வழி தேவனுக்காக காத்திருப்பதும், சோதனை நேரத்தை நிறைவேற்ற அனுமதிப்பதும் ஆகும். நீங்கள் தேவனிடம் ஒரு உறவைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், நீங்கள் சோதனை நேரத்திற்குள் கடந்து செல்ல மாட்டீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் அந்த உறவைப் பற்றிக்கொள்ள முயற்சிப்பீர்கள். எனவே ஒரு உறவைப் பிடித்துக்கொள்வதற்கு பதிலாக, சோதித்தறிய அனுமதியுங்கள், சோதனை நேரத்தை நிறுத்த வேண்டாம்; அதற்கு காத்திருப்பு தேவை. அக்கினியானது அதை சோதிக்கும். எனவே, ஒவ்வொரு உறவும் அக்கினிக்குட்படுத்த வேண்டும். இது உங்கள் இரட்சிப்பையும் உள்ளடக்கியது. சோதனை நேரங்களை பலர் வெறுக்கிறார்கள். ஆனால், இது ஒரு ஆசீர்வாதம், மேலும் இது பல கேள்விகளுக்கு விடை கொடுக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் குழப்பமான பகுதிகளை அம்பலப்படுத்தும். சோதனை என்பது மற்ற நபருக்கு அல்ல; அது உங்களுக்கானது. யாக்கோபு 1: 12-15-ல்சோதனையைச்சகிக்கிறமனுஷன்பாக்கியவான்; அவன்உத்தமனென்றுவிளங்கினபின்புகர்த்தர்தம்மிடத்தில்அன்புகூருகிறவர்களுக்குவாக்குத்தத்தம்பண்ணினஜீவகிரீடத்தைப்பெறுவான். 13. சோதிக்கப்படுகிறஎவனும், நான்தேவனால்சோதிக்கப்படுகிறேன்என்றுசொல்லாதிருப்பானாக; தேவன்பொல்லாங்கினால்சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும்அவர்சோதிக்கிறவருமல்ல. 14. அவனவன்தன்தன்சுயஇச்சையினாலேஇழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15. பின்புஇச்சையானதுகர்ப்பந்தரித்து, பாவத்தைப்பிறப்பிக்கும், பாவம்பூரணமாகும்போது, மரணத்தைப்பிறப்பிக்கும். எனவே, சோதனை என்பது உங்கள் பாவ சுவாபத்தை வெளிப்படுத்துவதே தவிர, மற்ற நபரைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்குவதற்கல்ல. அவர் மட்டுமே அக்கினியுண்டாக்குவார், மற்றும் தேவைப்பட்டால் அவரே சேதத்தை ஈடுசெய்வார். யாத்திராகமம் 22: 6 “அக்கினிஎழும்பி, முள்ளுகளில்பற்றி, தானியப்போரையாவது, விளைந்தபயிரையாவது, வயலிலுள்ளவேறேஎதையாவதுஎரித்துப்போட்டதேயானால், அக்கினியைக்கொளுத்தினவன்அக்கினிச்சேதத்திற்குஉத்தரவாதம்பண்ணவேண்டும்”. எனவே சோதனையின் சேதம் குறித்து கவலைப்பட வேண்டாம். உபாகமம் 8: 1-3-ல் நீங்கள்பிழைத்துப்பெருகி, கர்த்தர்உங்கள்பிதாக்களுக்குஆணையிட்டுக்கொடுத்ததேசத்திலேபிரவேசித்து, அதைச்சுதந்தரிக்கும்படிநான்இன்றுஉங்களுக்குவிதிக்கிறஎல்லாக்கட்டளைகளின்படியும்செய்யத்சாவதானமாயிருப்பீர்களாக. 2. உன்தேவனாகியகர்த்தர்உன்னைச்சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடையகட்டளைகளைநீகைக்கொள்வாயோகைக்கொள்ளமாட்டாயோஎன்றுஅவர்உன்னைச்சோதித்து, உன்இருதயத்திலுள்ளதைநீஅறியும்படிக்கும், உன்னைஇந்தநாற்பதுவருஷமளவும்வனாந்தரத்திலேநடத்திவந்தஎல்லாவழியையும்நினைப்பாயாக. 3. அவர்உன்னைச்சிறுமைப்படுத்தி, உன்னைப்பசியினால்வருத்தி, மனுஷன்அப்பத்தினால்மாத்திரம்அல்ல, கர்த்தருடையவாயிலிருந்துபுறப்படுகிறஒவ்வொருவார்த்தையினாலும்பிழைப்பான்என்பதைஉனக்குஉணர்த்தும்படிக்கு, நீயும்உன்பிதாக்களும்அறியாதிருந்தமன்னாவினால்உன்னைப்போஷித்தார்”. தேவனுடனான உறவு சோதனைக்கு உட்படுத்தப்படுவதை இங்கே காண்கிறோம். எல்லா உறவுகளும் சோதித்தறியப்பட வேண்டும், அந்த சோதனை உங்கள் தீய உந்துதல்களை வெளிப்படுத்தும் மற்றும் தீய உந்துதல்களை அழிக்க நீங்கள் அனுமதித்தால், இயேசு கிறிஸ்துவின் சமாதானம் வந்து அந்த உறவை ஆளுகிறது. சோதனை எப்போதும் ஒற்றுமையுடன் முடிவடைகிறது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நீங்கள் உங்கள் மாம்சத்தினாலே மற்ற நபரிடம் ஈர்க்கப்பட்டால், அப்படிப்பட்டது ஒரு உறவு இல்லை என்று நீங்கள் புரிந்து, மனதிரும்புதலினால் சரியான முடிவை எடுக்க திராணி உள்ளவர்களாக மாறுவீர்கள். சமீபத்தில், கணவனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு சகோதரிக்கு ஆலோசனை வழங்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கணவனுக்கு திருமணத்திற்கு மீறிய கூடுதல் உறவுகள் உள்ளது. எனவே, நான் அந்த சகோதரி மனந்திரும்பும்படி அறிவுரை வழங்கினேன், ஏனென்றால் அவள் கணவனாக நினைக்கும் நபர், சட்டபூர்வமாக கணவனாக இருந்தாலும், உண்மையில் அவளுடைய கணவன் அல்ல, ஏனெனில் அவர் ஒரு கணவரின் செயல்களைச் செய்யவில்லை. இரண்டாவதாக, திருமண விழா கணவன்-மனைவி உறவை உருவாக்குகிறது என்ற எண்ணத்தால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டுள்ள உடன்படிக்கைதான் அவர்களை ஒரு கணவன் மனைவியாக ஆக்குகிறது. அந்த உடன்படிக்கை உடைந்தவுடன், அது திருமண வாழ்க்கை என்று நீங்கள் சட்டப்பூர்வமாக நினைக்கலாம், ஆனால் அது இல்லை. எனவே, அந்த சகோதரி மனந்திரும்பியபோது, கணவரின் தவறுகள் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவளுடைய விக்கிரக வழிபாடு, அதாவது, அவளுடைய இருதயத்தின் பிடிவாதம் அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

நாம் மனந்திரும்பும் தருணத்தில், உறவில் உள்ள சிக்கல்களை உணர்ந்து கொள்வோம். சிக்கல்களை அறிந்த பிறகு, அவற்றை தேவனிடத்தில் சமர்ப்பியுங்கள், இதனால் அவர் உங்களை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும். அன்புள்ள திருச்சபையோரே, ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள், அதாவது, அவருடைய தேவத்துவம். எல்லாவற்றையும் ஒன்றுமில்லாததிலிருந்து உருவாக்கினார். லாசருவின் வாழ்க்கையில், இயேசு கிறிஸ்து அவரை நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழச் செய்தார், எனவே தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. ஏனெனில் அவரே சிருஷ்டிகர்த்தர்.

முடிவாக, எரேமியா 3: 1 ல், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காண்கிறோம். ஒருபுருஷன்தன்மனைவியைத்தள்ளிவிட, அவள்அவனிடத்திலிருந்துபுறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்குமனைவியானால், அவன்அவளிடத்தில்இனித்திரும்பப்போவானோ? அந்ததேசம்மிகவும்தீட்டுப்படுமல்லவோ? என்றுமனுஷர்சொல்லுவார்கள்; நீயோவென்றால்அநேகநேசரோடேவேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும்என்னிடத்திற்குத்திரும்பிவாஎன்றுகர்த்தர்சொல்லுகிறார்.” ஆகவே, நம்முடைய விருப்பத்தையும் எண்ணங்களையும் நம்மை ஆள அனுமதிக்காமல், நம்மை இரட்சிப்பதற்காக அவருடைய இரத்தத்தை சிந்திய மணவாளனின் கைகளில் நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தருடைய சமாதானமும் இரக்கமும் கிருபையும் உங்களோடு இருப்பதாக.

ஆசிர்வதிக்கப்பட்டிருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.