அன்புள்ள திருச்சபையோரே,
இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியிலும்ஆரோக்கியத்துடனும் சந்திக்கிறது என்று நம்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தை நிறுவுவதில் ஒரு ஐக்கியமாய் நீங்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்காகவும் மற்றும் ஜெபத்தினால் அளித்த ஆதரவிற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், தேவனிடமிருந்து பெற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வலிமை ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, நமது வேதாகம ஆய்வு கூடுகையிலும், சபை கூடுகையிலும், வீட்டு கூடுகையிலும் பல வழிமுறைகளை அறிமுகப்படுத்த முயற்சித்தேன். ஆயினும்கூட, திருச்சபையார் தங்கள் பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாலும், இன்னும் தங்களின் வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தில் வளர முன்வரவில்லை. இது நாம் கவனம் செலுத்தவேண்டிய சிவப்பு எச்சரிக்கை. மத்தேயு 25:14 – 30 இல் பிதாவின் சித்தத்தின்படி ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பற்றிய உவமையைக் காண்கிறோம். அதைப் பெருக்கப் பயன்படுத்தியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், ஆனால் தனது தாலந்துகளை ஒளித்துவைத்தவன் அவனுக்கு கொடுக்கப்பட்டதை இழந்தான்.