செய்திமடல், ஆகஸ்ட் 2021

Posted on August 1, 2021

Home Publications Posts செய்திமடல், ஆகஸ்ட் 2021

செய்திமடல், ஆகஸ்ட் 2021

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் சமாதானமும் சந்தோஷமும் உங்களோடிருந்து உங்களை ஆளுகை செய்வதாக.

இந்த வாரத்தைக் காண்கிறதற்கு கர்த்தர் நமக்கு கிருபை செய்திருக்கிறார். நாம் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நடந்தாலும் அவர் நம்மை அழிவுக்கு நீக்கினபடியினால், அவரை நாம் ஆராதிப்பதே சரியானது மற்றும் தகுதியானது. உங்களை எகிப்திலிருந்து புறப்பட பண்ணின தேவனாகிய கர்த்தர் நானே என்று தம்முடைய நாமத்தை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.  எனவே, தேவனுக்கு நன்றி சொல்லும் அற்புதமான மற்றும் தெய்வீக பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையில் உள்ள குறைபாட்டைக் கண்டு, அவர்களின் கஷ்டங்களை குறித்து கர்த்தரிடத்தில் கேள்வி கேட்க முடிவு செய்த பலர் இந்த உலகத்தில் உள்ளனர். ஆயினும்கூட, கர்த்தரை துதிக்க தீர்மானித்த சிறுகூட்ட ஜனத்தை கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டு அழைத்திருக்கிறார். அதனால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தாங்கள் அக்கினியிலும் மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து செல்லும்போது, உருவாக்கினவரை துதித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்கள் கஷ்டமான சூழ்நிலைகளை தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க முடிந்தது. கர்த்தரை துதிப்பது ஒரு தேவபக்திக்கேற்ற செயலாகும், அது நம் வாழ்வை ஒரு ஆசீர்வாதமாக மாற்றி நம் வாழ்வில் வெளிப்படுகிறது. கர்த்தரை துதிப்பது நம்முடைய சுய பிரயோஜனத்துக்காகவே. நாம் கர்த்தரை துதிக்கும்போது, நம்முடைய சிந்திக்கும் செயல்முறை குணமாகும், மேலும் நம்முடைய மனது சரியான நிலையில் வேலை செய்யும். பல சமயங்களில், சில விஷயங்களைச் செய்வது தவறு என்று நமக்குத் தெரியும், ஆனாலும் நாம் அவற்றைச் செய்கிறோம். இதற்கு காரணம் நம் இருதயம் உணர்வற்றுப்போய்விட்டது. சத்தியத்தின் மீதான அன்பை வளர்க்க சிலர் போராடினார்கள். கர்த்தரை துதிப்பது நம்முடைய ஆத்துமாவை குணப்படுத்தும் தைலம் போன்றது மற்றும் சத்தியத்தை நேசிக்க அது நம்மை வழிநடத்தும்.

இதுவரை, உறவு என்ற தலைப்பின் கீழ் நான்கு முக்கிய அம்சங்களை நாங்கள் உள்ளடக்கியுள்ளோம்:

1.     மற்றவர் சொல்லும் எல்லாவற்றிற்கும் “ஆமாம்” என்று அவரை பிரியப்படுத்துவதற்காக சொல்வது தீமை.

2.     மற்ற நபருக்கு அஞ்சுவது உறவு அல்ல.

3.     உரையாடல்களின் முக்கியத்துவம். உரையாடல்களின் கீழ்,

·         வாதம் ஆரோக்கியமானதோ அல்லது தேவபக்திக்கேற்றதோ இல்லை.

·         மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதன் முக்கியத்துவம்.

·         மற்றவர்களுக்கு அவர்களின் குறைபாடுகளை உணர இடமும் நேரமும் அளித்தல்.

·         நியாயந்தீர்க்க  வேண்டாம்.

·         உரையாடலில் சீர்படுத்துதலின் முக்கியத்துவம்.

4.     உறவைச் சோதித்தறிதல்.

இந்த வாரம், எந்தவொரு உறவிலும் உள்ள மற்றொரு முக்கியமான அம்சத்தை நாம் காணப்போகிறோம், அதாவது, ‘புதுசிருஷ்டி.’ பல முறை, நல்ல இனிமையான உணர்விற்கும் நல்ல உறவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள நாம் போராடுகிறோம். நல்ல உணர்வு அல்லது மனதுக்கு இனிமையாக தோன்றுவது என்பது இச்சை, இது நீண்ட காலம் நீடிக்காது. நல்ல அல்லது இனிமையான உணர்வுக்கு நாம் அடிமையாயிருந்தால் அது நம்மை அழிக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம், ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள லோத்து. அவன் தன் கண்களை ஏறெடுத்து பார்த்து, தேவனின் தோட்டம் என்று தான் உணர்ந்த ஒரு இடத்தை தன்னுடைய இருப்பிடமாக தேர்வு செய்தான். லோத்து தேவனிடமிருந்து விலகிச் செல்ல விரும்பவில்லை என்பதை நான் இங்கு முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். பாவத்தின் இன்பத்தை அனுபவிக்க அவன் தன் இதயத்தை அமைக்கவில்லை. அவன் ஒரு நீதிமான், ஆனாலும் அவன் தன்னுடைய உணர்வுகளுக்கு அடிபணிந்தான். அவன் தீயவன் அல்ல என்றாலும், அவன் தனது உணர்வுகளின் அடிப்படையில் மனதிற்கு இனிமையாக தோன்றிய ஒரு முடிவை எடுத்தான். வாழ்க்கையில் ஒரு முக்கியமான உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதாவது, உலக அமைப்பு நம் ஆசைகளுக்கு ஏற்ப எல்லாவற்றையும் வைத்திருப்பது நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் என்று நம்ப வைக்கிறது. நிச்சயமாக இல்லை. மறுபுறம், அது நம்மை அழிக்கும். எபேசியர் 2: 3 இல், அவர்களுக்குள்ளேநாமெல்லாரும்முற்காலத்திலேநமதுமாம்சஇச்சையின்படியேநடந்து, நமதுமாம்சமும்மனசும்விரும்பினவைகளைச்செய்து, சுபாவத்தினாலேமற்றவர்களைப்போலக்கோபாக்கினையின்பிள்ளைகளாயிருந்தோம். இங்கே, பவுல் மனதிற்கு இனிமையாக தோன்றுவது மற்றும் நல்ல உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுவது பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறார். தேவன் தான் சிருஷ்டிகர்த்தர்; அவரால் மட்டுமே ஒவ்வொரு நல்ல, மகிழ்ச்சியான, சந்தோஷமான மற்றும் அமைதியான வாழ்க்கையை உருவாக்க முடியும். நமக்கு நன்றாக இனிமையாக தோன்றுவதை வைத்து நாம் சத்தியத்தை மதிப்பிட முடியாது. நாம் அவ்வாறு செய்யும் தருணத்தில், நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாக மாறுகிறோம், எல்லா நல்ல விஷயங்களுக்கான கதவை அடைகிறோம் அல்லது அதை நிராகரிக்கிறோம். தேவன் ஒருவரே சிருஷ்டிகர். இந்த படைக்கப்பட்ட உலகில் நாம் அவருடைய வழியில் நடக்காவிட்டால், நாம் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க எந்த காரணமும் இருக்காது.

புதுசிருஷ்டி:

ஒரு உறவு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். இது உங்கள் பலவீனத்தில் உங்களுக்கு உதவ வேண்டும், மேலும் உழையான சேற்றிலிருந்து நீங்கள் வெளியே வர உங்களை வழிநடத்த வேண்டும். பலவீனத்தை கையாளுவதற்கு பதிலாக, உங்கள் தவறுகளை மறைப்பது தற்காலிகமாக ஒரு நல்ல உணர்வைத் தரும், ஆனால் இறுதியில் அது உங்கள் வாழ்க்கையை அழிக்கும்.  சில தவறுகளைச் செய்வது உங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் வழக்கமான சாக்காக போக்காக மாறக்கூடாது. நீங்கள் அதை வளர அனுமதித்தால், அது ஒரு பாவ சுவாபமாக மாறிவிட்டது என்பதை நீங்கள் உணரும் ஒரு நாள் வரும். எனவே, இந்த மனதிற்கு செவ்வையாய் தோன்றும் நல்ல உணர்வுகளுக்கு நீங்கள் ஈர்க்கப்படக்கூடாது. நீதிமொழிகள் 28:13ல் ஞானத்தின் வார்த்தைகள் இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தன்பாவங்களைமறைக்கிறவன்வாழ்வடையமாட்டான்; அவைகளைஅறிக்கைசெய்துவிட்டுவிடுகிறவனோஇரக்கம்பெறுவான். எனவே, நம் பாவங்களை வெளிப்படுத்தும் ஒரு நபரைத் தேடுவதற்கு நாம் உறவில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய தவறுகளை நாம் உணர முடியாத சில நேரங்கள் இருக்கும், எனவே நமக்கு உதவவும், இந்த உழையான சேற்றிலிருந்து நம்மை வெளியே கொண்டு வரவும் நமக்கு ஒரு நம்பகமான நபர் தேவை. உலகில் நமக்கு ஒரு பழமொழி உண்டு, “தேவையில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்.” இங்கே, முக்கியமான கேள்வி என்னவென்றால், உங்களுக்கு என்ன தேவை? இயேசு கிறிஸ்து கூறுகிறார், “உங்களுக்கு என்ன தேவை என்று நான் அறிந்திருக்கிறேன்.” சில சமயங்களில், அவர் தம்முடைய அன்பின் மூலமாகவும், மற்ற சமயங்களில் சீர்திருத்துதலின் கோலினாலும் நம்மை குணமாக்குவார். சீர்திருத்துதல் ஆரம்பத்தில் ஒரு உற்சாகமான உணர்வைக் கொடுக்காது, ஆனால் இறுதியில், அது ஒரு பெரிய பலனைத் தரும். ஒரு சிலர் மட்டுமே சீர்திருத்துதலின் பலனைக் காண தேவனின் கண்களில் தயவு பெறுகின்றனர். எனவே, நீங்கள் உண்மையிலேயே ஒரு உறவில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், நீங்கள் மறுரூபமாக்கப்படுவதற்கு உங்களுக்குத் உதவி, ஆறுதல், மற்றும் சீர்திருத்துதலை அளிக்கக்கூடிய நம்பகமான ஒரு நபரைத் தேடுங்கள்.

ஆதியாகமம் 24: 67 இல் அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான். இந்த உறவில் குணப்படுத்துதல் இருப்பதை நாம் காண்கிறோம். அவனது தாயின் மரணம் ஈசாக்கிற்கு வேதனையாக இருந்தது, எனவே தேவனின் பார்வையில் அவனை குணப்படுத்தவும் அவனது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரவும் ரெபெக்காள் என்கிற ஒரு துணையாளர் தேவைப்பட்டது. எனவே, ஒரு உறவு என்பது மற்றவரை அவரின் மேம்பாட்டுக்கு ஏதுவாக மாற்றுவதாகும். சிம்சோனின் மரணத்திற்கு காரணமான தெலீலாளை போன்று, நம்முடைய நலன்களுக்காக மற்றவரை மாற்ற முயற்சிக்கக்கூடாது. ஒரு உறவில், மற்ற நபரை மாற்றுவதற்கான அர்ப்பணிப்பு இல்லை என்றால் அது ஒரு உறவே கிடையாது. அதைத்தான் இயேசு கிறிஸ்து, 2 கொரிந்தியர் 5:17 இல் கூறுகிறார், இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. இங்கே, நாம் ஒரு உறவின் அறிகுறிகளைக் காண்கிறோம். நீங்கள் கிறிஸ்துவுடனான உறவில் இருந்தால், நிச்சயம் அந்த உறவு இனி உங்கள் பழைய வாழ்வில் இருக்க உங்களை அனுமதிக்காது. எனவே, ஒரு உறவின் நோக்கம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருப்பது மிகவும் முக்கியம். ஆதாமுக்கு தேவன் ஏற்ற துணையை உருவாக்கியதற்கு அதுவே காரணம். அவர் ஒரு நல்ல நபரைக் ஆதாமுக்கு கொண்டுவரவில்லை, ஆனால் ஏற்ற நபரைக் கொண்டு வந்தார். எனவே, உங்கள் வாழ்க்கை மேம்படுவதற்கு ஏதுவான மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஏற்ற ஒரு நபருடன் மட்டுமே நீங்கள் உறவில் இருக்க வேண்டும். சில நன்மைகளுக்காகவோ அல்லது சில வசதிகளுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ நண்பர்களாக இருப்பது அல்லது உறவை வைத்திருப்பது இச்சையாக கருதப்படுகிறது.

நீங்கள் எப்படி ஒரு புதுசிருஷ்டியாகமாறுவீர்கள்?

ஒரு உறவுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அந்த உறவின் காரணமாக விருப்பத்திற்கு மாறான பல வலிகள், போராட்டங்கள் மற்றும் சில மோசமான அனுபவங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும். உபாகமம் 8: 1-4இல் 1. நீங்கள்பிழைத்துப்பெருகி, கர்த்தர்உங்கள்பிதாக்களுக்குஆணையிட்டுக்கொடுத்ததேசத்திலேபிரவேசித்து, அதைச்சுதந்தரிக்கும்படிநான்இன்றுஉங்களுக்குவிதிக்கிறஎல்லாக்கட்டளைகளின்படியும்செய்யத்சாவதானமாயிருப்பீர்களாக. 2. உன்தேவனாகியகர்த்தர்உன்னைச்சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடையகட்டளைகளைநீகைக்கொள்வாயோகைக்கொள்ளமாட்டாயோஎன்றுஅவர்உன்னைச்சோதித்து, உன்இருதயத்திலுள்ளதைநீஅறியும்படிக்கும், உன்னைஇந்தநாற்பதுவருஷமளவும்வனாந்தரத்திலேநடத்திவந்தஎல்லாவழியையும்நினைப்பாயாக. 3. அவர்உன்னைச்சிறுமைப்படுத்தி, உன்னைப்பசியினால்வருத்தி, மனுஷன்அப்பத்தினால்மாத்திரம்அல்ல, கர்த்தருடையவாயிலிருந்துபுறப்படுகிறஒவ்வொருவார்த்தையினாலும்பிழைப்பான்என்பதைஉனக்குஉணர்த்தும்படிக்கு, நீயும்உன்பிதாக்களும்அறியாதிருந்தமன்னாவினால்உன்னைப்போஷித்தார். 4. இந்தநாற்பதுவருஷமும்உன்மேலிருந்தவஸ்திரம்பழையதாய்ப்போகவும்இல்லை, உன்கால்வீங்கவும்இல்லை. இந்த பகுதி தேவன் தமது ஜனத்துடன் மேற்கொண்ட பிரயாணத்தை பற்றியது. அவர் அவர்களைப் பாதுகாத்தார், குணப்படுத்தினார், அவர்களுக்கு உணவளித்தார், அவர்கள் விரும்பியதை அவர்களுக்குக் கொடுத்தார். அவ்வாறே, அவர் அவர்களுக்கு வனாந்தரத்தைக் கொடுத்தார், அவர்களை தாழ்த்தினார், அவர்களைச் சோதித்தார், அவர்களைப் பசிக்கு அனுமதித்தார். எனவே, ஒரு உறவு எப்போதும் இனிமையான உணர்வாக இருக்காது. அது பல ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்லும். இருப்பினும், இந்த ஏற்ற தாழ்வுகளில் தேவனின் செயலை பாருங்கள். அவர்கள் அறியாததை அறிந்து கொள்ள தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்களுடைய வஸ்திரம் பழையதாய்ப் போகவும், அவர்கள் கால்கள் வீங்கவும் அவர் அனுமதிக்கவில்லை. அவர் எப்போதும் அவர்களோடிருந்து, அவர்களுக்காக போரடினார். எனவே, நீங்கள் ஒரு உறவில் இருக்க முடிவு செய்தால், அந்த உறவு உங்களை மருரூபமாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையிருக்க கூடாது, மற்றும் உங்களுடன் உறவில் இருக்கும் நபர் உங்களுடைய வஸ்திரம் பழையதாய்ப் போகாமலும், உங்கள் கால்கள் வீங்காமல் பாதுகாப்பதையும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் பாதுகாப்பை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்; இது அவர்கள் உங்களுடன் உறவில் நிலைநிற்க உதவும். நீங்கள் பயன்படுத்தும் அளவீடு உங்களுக்கும் திரும்ப அளவிடப்படும். மற்றவர்களுக்காக உங்கள் விருப்பங்களை நீங்கள் தியாகம் செய்து அர்பணித்தால், தேவன் அதைப் பார்த்து மற்றவரை உங்கள் விருப்பங்களை பாதுகாக்க செய்வார்.

உறவில் நிலைத்திருப்பது:

உறவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் உறவில் நிலைத்திருக்க தங்களுடைய முயற்சிகளை எடுக்க வேண்டும். பிலிப்பியர் 3: 7 – 11இல் 7. ஆகிலும், எனக்குலாபமாயிருந்தவைகளெவைகளோஅவைகளைக்கிறிஸ்துவுக்காகநஷ்டமென்றுஎண்ணினேன். 8. அதுமாத்திரமல்ல, என்கர்த்தராகியகிறிஸ்துஇயேசுவைஅறிகிறஅறிவின்மேன்மைக்காகஎல்லாவற்றையும்நஷ்டமென்றுஎண்ணிக்கொண்டிருக்கிறேன். 9. நான்கிறிஸ்துவைஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால்வருகிறசுயநீதியைஉடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும்விசுவாசத்தினால்வருகிறதும்விசுவாசமூலமாய்தேவனால்உண்டாயிருக்கிறதுமானநீதியைஉடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள்இருக்கிறவனென்றுகாணப்படும்படிக்கும், 10. இப்படிநான்அவரையும்அவருடையஉயிர்த்தெழுதலின்வல்லமையையும், அவருடையபாடுகளின்ஐக்கியத்தையும்அறிகிறதற்கும், அவருடையமரணத்திற்கொப்பானமரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும்நான்மரித்தோரிலிருந்துஉயிரோடெழுந்திருப்பதற்குத்தகுதியாகும்படிக்கும், 11. அவருக்காகஎல்லாவற்றையும்நஷ்டமென்றுவிட்டேன்; குப்பையுமாகஎண்ணுகிறேன். கிறிஸ்துவுடனான உறவில் நிலைத்திருக்க பவுலின் அர்ப்பணிப்பை இங்கே காண்கிறோம். அதேபோல, இயேசு கிறிஸ்து நம்முடன் இருப்பதற்காக தமது மேன்மையான நிலையை விட்டிறங்கினார். அவர் தமது சுகத்தை விட்டுக்கொடுத்து தன்னை வெறுமையாக்கி, சிலுவையில் மரண பரியந்தம் தன்னைத் தாழ்த்தினார். ஒரு உறவில் இருக்க, ஒவ்வொரு நபரும் தங்கள் விலைமதிப்பற்ற ஈசாக்கை விட்டுக்கொடுக்க வேண்டும். ஒரு நபர் தன்னுடைய விலையேறப்பற்ற காரியங்களை  விட்டுக்கொடுக்க விருப்பமில்லாமல், ஒரு உறவுக்கான ஆசை மட்டும் பெற்றுஇருந்தால், அது பலனளிக்காது. மத்தேயு 19 வது அத்தியாயத்தில், மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன் என்று உரையாற்றப்பட்ட ஒருவனை நாம் அறிந்திருக்கிறோம். அவனுக்கு நித்திய ஜீவனுக்கான ஆசை இருந்தது. தேவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவன் தனது விருப்பத்திற்கு உறுதியளித்தான், ஆனால் அவன் தனது வாழ்க்கையின் விலையேறப்பற்ற பொக்கிஷங்களை விட்டுவிடத் தயாராக இல்லாததால் அவன் நித்திய வாழ்க்கையை இழந்தான். உறவில் நிலைத்திருக்க, நீங்கள் இழக்கவும் அர்பணிக்கவும் வேண்டும். ஒவ்வொரு உறவும் தியாகத்தை மற்றும் அர்ப்பணிப்பை விரும்புகிறது.

முடிவுரை:

ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பிரிவினை தேவை, அது ஒரு புதிய ஐக்கியத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு ஐக்கியமும் உங்கள் கடந்த காலத்திலிருந்து உங்களை விடுவித்து உங்களை புதியவர்களாக மாற்றும். I யோவான் 1: 6,7 இல் இயேசு கிறிஸ்து கூறுகிறார், 6. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். 7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். எனவே, உங்கள் விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை அர்ப்பணித்து நல்ல உறவைப் பேணுங்கள். ஊதாரியான கெட்டகுமரன் தனது தந்தையுடனான உறவை விலையேறப்பெற்ற விஷயங்களுக்காக வர்த்தகம் செய்தான். ஒரு நாள் வந்தது, அவன் கைவிட்ட உறவின் முக்கியத்துவத்தை அவனது வாழ்க்கையில் உணர்ந்தான். உங்கள் தனிமையிலிருந்து நீங்கள் விடுபட ஒரு நல்ல உறவை உருவாக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவராக.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.