செய்திமடல், அக்டோபர் 2021

Posted on October 22, 2021

Home Publications Posts செய்திமடல், அக்டோபர் 2021

செய்திமடல், அக்டோபர் 2021

அன்புள்ள திருச்சபையோரே,

நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இதுவரை உங்கள் அனைவரின் ஜெபத்திற்கும் ஊக்கத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியில் சந்திக்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள், ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் என்று கூறுகிறது. ஆகையால், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள், அவர் தாமே உங்களுக்கு முன்பாகச் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவராக.

இதுவரை, தேவபக்திக்கேற்ற உறவுகளில் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் விவாதித்து வருகிறோம். இந்த மாதத்தில், ஒவ்வொரு உறவிலும் காணப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சத்தை பற்றி நாம் பார்க்கப்போகிறோம், அதென்னவெனில், உறுதியாக இருப்பது, அதாவது நிலைவரமாக இருப்பது. நம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம், அனைவருடனும் சுமுகமான நிலைப்பாட்டை பராமரிக்க நாம் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். இது தேவபக்திக்கேற்றதல்ல. இயேசு கிறிஸ்து வேதத்தில் உள்ள அனைவரிடமும் நல்லவராக இல்லை. பல சமயங்களில், இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் ஒரு மனிதனாக வாழ்ந்தபோது பலரிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டார். உதாரணமாக, பரிசுத்த வேதாகமத்தில் ஒரு கெட்ட வார்த்தை என்று நாம் அழைக்கக்கூடிய ஒரு வார்த்தை, ‘மாறுபாடான சந்ததி.’ இந்த வார்த்தை தேவனின் மொழியில் பயன்படுத்தப்பட்டது. அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்திய மக்களுக்கு அவர் நல்லவராக இல்லை. அன்பின் வரையறையான இயேசு கிறிஸ்து, தேவனுடைய ஆலயத்தை ஜனங்கள் தவறாக பயன்படுத்தும்போது ஒரு சவுக்கை பயன்படுத்தினார். அவர்களுக்கு, அவர் தன்னை ஒரு அன்பான தேவனாக வெளிப்படுத்தாமல், எரிச்சலுள்ள தேவனாக வெளிப்படுத்தினார். எனவே, உறவில் எல்லோரிடமும் இனிமையாக இருப்பது தேவபக்திக்கேற்றதல்ல. ஒவ்வொரு உறவும் ஒரு நபரை நடுநிலையாக இருக்கவொட்டாமல், எப்போதும் ஒரு தீர்மானத்தை எடுக்க நம்மை நிர்பந்திக்கின்றது. கிறிஸ்துவுடனான உறவை நிலைநாட்ட நாம் இந்த உலக வழிபாடுகளுக்கு மரிக்க வேண்டிய காரணம் அதுதான். நாம் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. எனவே, இயேசு கிறிஸ்துவுடனான உறவில் இருக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்கள் பழைய உறவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும் அல்லது அவைகளுக்கு நீங்கள் மரிக்க வேண்டும்; இல்லையெனில், அவருடனான உறவு நிறுவப்படாது. இதற்கு மாறாக வணிக உறவுகளில் ஒரு முறை என்னவென்றால், பரிவர்த்தனை முடிந்தவுடன், அதே நேரத்தில் உறவும் முடிவடையும். அதேபோல், ஒரு பரிவர்த்தனையிலிருந்து நாம் பெறக்கூடிய நன்மைகளுக்காக ஒரு தற்காலிக தருணத்தில் நடுநிலையாக, மென்மையாக, சமரசமாக இருப்பதைப் பற்றியும் நாம் சிந்திக்கலாம். வணிக முறையின்படி அத்தகைய வாழ்க்கையை நடத்துவது உங்கள் வாழ்க்கையை அழிவுக்கு இட்டுச் செல்லும், மத்தேயு 16: 24-26 –ல் நாம் காணும் இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தின்படி, மத்தேயு 16: 24-26 24. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்25. தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். 26. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? எனவே, நாம் எதைப் பிடித்துக் கொள்ள விரும்புகிறோம், எதை விட்டுவிட வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்காலிக இன்பங்களை, அதாவது, உலக இன்பங்களைப் பெற நாம் தேவபக்தியையும் வேதத்தின் கொள்கைகளையும் விற்றுப்போடலாம், ஆனால் அது உதவியாக இருக்காது. வேதத்தின் கொள்கைகளையும் மற்றும் உலகத்திலிருந்து நாம் என்ன பெறுகிறோம் என்பதையும் பிரிக்கும் பொருட்டு ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான பிரிவின் கோட்டை நாம் வரைய வேண்டும். அதேபோல், நம்மிடம் எப்போதும் கோரப்படும் ஒரு தேர்வு இருக்கிறது, அதாவது, ஒரு உறவு முக்கியமா அல்லது எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டுமா. கடந்தகால உறவை விட்டுவிடுவது அல்லது விவாகரத்து செய்வது ஒரு புதிய உறவுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. நாம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பும் வரை, உறுதியான உறவை நாம் உருவாக்க முடியாது. உங்கள் வாழ்க்கையின் அன்பை திருமணம் செய்வதற்கு நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளீர்கள். ஒரு புதிய உறவு உங்கள் வாழ்க்கையில் நுழையும் போது, நீங்கள் முன்பு இருந்ததைப் போலவே இருக்க முடியாது. அதனால்தான் வேதம் சொல்கிறது, “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்.”

பட்சமாயிருத்தல்

நம் தேவன் எரிச்சலுள்ள தேவன் என்று என்பதை நாம் அறிவோம். எனவே, நாம் அவருடைய பட்சத்தில் நில்லாதபோது, நாம் அவரை கோபமூட்டுகிறோம்.

2 நாளாகமம் 19: 1-3 இல், 1. யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான். 2. அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. 3. ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான். இங்கே, கர்த்தருடைய கோபம் ராஜாவாகிய யோசபாத்தின் மீது இருந்ததை நாம் காணலாம். அவன் தவறான பட்சத்தை தேர்ந்தெடுத்தான். கர்த்தரே நம் சரீரத்தின் தலையாயிருக்கிறார், எனவே கர்த்தர் வெறுக்கும் ஒருவருடன் நீங்கள் நல்லவராக இருக்க முடியாது. இது எளிதானது; ஒன்று நீங்கள் தேவனோடு இருக்கலாம் அல்லது உங்கள் உலக ஐக்கியங்களுடன் சுகமாகவும் நன்றாகவும் இருக்கலாம். அது ஒருபோதும் இரண்டுமாக இருக்க முடியாது. அந்த காரணத்தினால் சங்கீதம் 1 ல், சில சூழ்நிலைகளில் நிற்கவோ, உட்காரவோ, நடக்கவோ கூடாது என்று தேவனுடைய வார்த்தை நமக்கு அறிவுறுத்துகிறது. லூக்கா 18 வது அதிகாரத்தில் ஒரு ஐசுவரியமுள்ள தலைவன் ஒருவனை பார்க்கிறோம். அவனது ஐசுவரியத்தின் மீது அவனுக்கு இருந்த பட்சத்தால் தேவனுடன் உறவு கொள்ள வேண்டும் என்ற அவனுடைய ஆசையை அவனால் அடைய முடியவில்லை. யாத்திராகமம் 20: 1-5 இல், 1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: 2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். எனவே, இந்த பத்தியில் நாம் விவாதிக்கும் முக்கியமான கொள்கை என்னவென்றால் அது ஒரு போர் அல்லது யுத்தம் நடக்கும்போது நாம் ஒரு பக்கத்தை சார்ந்து ஒருதலைபட்சமாயிருப்பது. சண்டை வரும்போது, நாம் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவனுக்கும் உலக இன்பங்களுக்கும் இடையிலான சண்டையில், நீங்கள் இரு தரப்பிற்கும் நல்லவராக இருக்க முடியாது. நாம் நடுநிலையாக இருக்கவோ அல்லது சமரசம் செய்யவோ முடியாது, “தேவனுடைய காரியங்களைப் பொறுத்தவரை, நான் மிகவும் கவனமாக இருப்பேன், நான் உலகத்தை அதில் ஒன்றுசேர்க்க மாட்டேன்; மேலும், உலக விஷயங்களில், நான் அவைகளை தேவனிடமிருந்து விலக்கி வைப்பேன். நான் தேவனை அவைகளுடன் ஒன்றுசேர்க்க மாட்டேன், கர்த்தரின் நாமத்தை வீணாக பயன்படுத்த மாட்டேன்.” என்று நாம் கூற முடியாது. இதுபோன்ற இரட்டை குடியுரிமை நம்மிடம் இருக்க முடியாது. லூக்கா 11:23 ல்இது நன்றாக விளக்கப்பட்டுள்ளது, 23. என்னோடேஇராதவன்எனக்குவிரோதியாயிருக்கிறான், என்னோடேசேர்க்காதவன்சிதறடிக்கிறான். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகளாக இருந்தால், நீங்கள் ஒளியின் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; இல்லையெனில், நீங்கள் இருளின் பிள்ளைகளாய் இருப்பீர்கள். எனவே, பரிசுத்த ஆவியின் கனிகளை வெளிப்படுத்தாத ஒரு உறவுக்கு “இல்லை” என்று கூறி சரியான தேர்வு செய்யுங்கள்.

இதைப் பற்றி வேதத்தில் நிறைய சாட்சிகளைப் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில், யூதாஸ்காரியோத்து, இயேசு கிறிஸ்துவுடனும் மற்றும் அவரை கொல்ல முயன்ற ஜனங்களுடனும் நட்பாக இருக்க முயன்றான். அவன் இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்தாலும், அவனை காப்பாற்ற முடியவில்லை. ஒரு நபரின் அவதூறு கூறும் குணத்தை நீங்கள் கண்டபின்னும்,, அவனுடன்/அவளுடன் இயல்பாக இருக்க முயற்சிக்கும்போது, தேவன் உங்களுக்கான சூழ்நிலைகளை மாற்றுவார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அது இயேசு கிறிஸ்துவின் வழிகளை நிராகரிப்பதாகும். 2 தீமோத்தேயு 3: 1-7 இல், 1. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 7. எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். அவர்களுடைய கெட்ட கனிகளை நீங்கள் பார்க்கும்போது அவர்களிடம் நல்லவர்களாக இருக்க முயற்சிக்காதீர்கள், ஆனால் அவர்களிடமிருந்து தப்பி ஓடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஊடுருவி உங்களை அழித்துவிடுவார்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் என்று வேதம் சொல்லுகிறது. இருப்பினும், மாம்சத்தின் கிரியைகள் கொண்ட ஜனங்கள் என்று வரும்போது, நாம் அவர்களை விட்டு விலக வேண்டும். அவர்கள் மாற்றப்படும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. ஆகையால், ஒரு உறவை தொடங்குவதற்கு முன், தேவனை வெறுக்கும் ஒரு தீமையின் ஆவி அவர்களிடத்தில் இல்லாமல் நல்ல ஆவி அவர்களிடத்தில் இருக்கிறதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்காக வருந்துவது மற்றும் ஒரு மாற்றத்தை அல்லது தீர்வை எதிர்பார்த்து பொறுத்துக்கொண்டு அவர்களுக்காக காத்திருப்பது சரியான வழி அல்ல. லோத்து, அதே தவறை செய்தான். அவன் சோதோம் மற்றும் கொமோரா மக்களுடன் உடன்படவில்லை ஆனால் அவர்களுடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை. தேவனால் வெறுக்கப்பட்ட இடத்திலிருந்து அவன் வெளியேறுவதை தாமதப்படுத்தினான். இதன் விளைவாக, அவனது தலைமுறைகளில் இருள் புகுந்தது. அவனது தலைமுறை அருவருப்பானது. எனவே, தேவன் வெறுக்கும் விஷயங்களுக்கு “இல்லை” என்று கூறி சரியான முடிவை எடுக்கவும். சமரசம் செய்யாதீர்கள்.

சமரசமின்மை

நாம் தப்பி ஓட விரும்பியும் நம்மால் முடியாத சில சூழ்நிலைகளை நாம் சந்தித்திருக்கலாம். நாம் விரும்பினாலும் உடைக்க முடியாத சில உறவுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு மனைவி, கணவர், குழந்தைகள் மற்றும் பெற்றோருடனான உறவு. அந்த சூழ்நிலைகளில், உறவு சரியில்லை என்று நமக்கு தெரிந்தாலும், அதை எப்படி கையாள்வது என்று நமக்கு தெரியாததால், நாம் சமரசம் செய்து கொள்கிறோம். கிறிஸ்துவில் உள்ள அன்பான சகோதர சகோதரிகளே, எந்த சூழ்நிலையிலும் எந்த விலைகொடுத்தாலும், நாம் கொள்கைகளை சமரசம் செய்ய முடியாது. அதை எப்படி கையாள வேண்டும் என்று வேதம் நமக்கு வழிகாட்டுகிறது. உதாரணமாக, தந்தை – மகன் உறவை இழந்த மகனை பற்றிய உவமையில் இது விளக்கப்பட்டுள்ளது. தகப்பனுடனான உறவில் இளையமகன் மகிழ்ச்சியாக இல்லாதபோது, மகன் தன்னை விட்டு போய் துன்பப்படுவதை அவர் தடுக்கவில்லை. ஒரு உறவு தொடர்பாக மக்கள் செயல்படுத்தும் தவறான கொள்கையால் பலரின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. பல பெற்றோர்கள் எந்த வகையிலும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு துன்பத்தை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கின்றனர். இந்த மனநிலை குழந்தைகளின் சிந்தனை முறையை அழிக்கும். உபாகமம் 8 வது அதிகாரத்தில், தேவன் துன்பம் என்று நாம் அழைக்கும் 4 வகையான வலிகளைப் பற்றி பேசுகிறார்: 1. பசி, 2. வனாந்திரம், 3. தாழ்மை மற்றும் 4. சோதிக்கப்படுதல். தேவன் இஸ்ரவேலை மிகவும் நேசித்தார், அதனால் தேவையற்ற விஷயங்களை அவர்களிடம் இருந்து அழிக்க இந்த விஷயங்களை அனுமதித்தார். லோத்தின் மனைவியின் விஷயத்தில், அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனையை அவளால் பிடித்து கொள்ள முடியவில்லை. சோதோம் மற்றும் கொமோரா மக்கள் இந்த எச்சரிக்கை செய்தியை அறிந்திருக்கவில்லை, ஆனால் அதை அறிந்துகொள்ள அவளுக்கு கிருபை அருளப்பட்டிருந்தது. இருப்பினும், கடினமான காலங்களில் கூட சோதோம் மற்றும் கொமோராவுடனான அவளது தொடர்பு அழிக்கப்படுவதற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. மறுபுறம், தாவீது தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபோது, தேவனின் கைகளில் விழுந்து சரியான முடிவை எடுத்தான். ஆகையால், உங்கள் குழந்தைகளின் விருப்பங்களின் விளைவுகளிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்காதீர்கள், ஆனால் அவர்களுடைய வலியின் நேரத்தில் அவர்களிடம் அன்பான ஆறுதலையும் பலத்தையும் தாருங்கள். உண்மையில், வனாந்திரமும் கடினமான காலமும் அவர்களை மிகவும் கடினமாக உடைக்கும், ஆனால் இந்த விஷயங்கள் அவர்களின் நற்குணத்தை அவர்களில் உருவாக்கும். திக்கற்ற மகன் தன் தந்தையின் அன்பின் மதிப்பை அவன் கஷ்டப்பட்டபோதுதான் புரிந்துகொண்டான். அதனால்தான் தேவன் தேவனையும் அவருடைய கட்டளைகளையும் மறந்த போதெல்லாம் அவர் தனது ஜனங்களை எதிரிகளின் கைகளில் விற்றுப்போட்டார். ரோமர் 5: 3-5 இல், 3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம்பொறுமையையும், பொறுமைபரீட்சையையும், பரீட்சைநம்பிக்கையையும்உண்டாக்குகிறதென்றுநாங்கள்அறிந்து, 4. உபத்திரவங்களிலேயும்மேன்மைபாராட்டுகிறோம். 5. மேலும்நமக்குஅருளப்பட்டபரிசுத்தஆவியினாலேதேவஅன்புநம்முடையஇருதயங்களில்ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்தநம்பிக்கைநம்மைவெட்கப்படுத்தாது. இந்த பகுதியில், பவுல் மூலம், தேவன் ஒவ்வொரு உபத்திரவமும் ஒருவரின் குணத்தை உருவாக்கும் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் பரிசுத்த ஆவியும் தேவனுடைய அன்பும் நம் இருதயங்களில் ஊற்றப்படுகிறது. எனவே, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்ன? கெட்ட குமாரன் தனது பாவங்களின் விளைவுகளை அறுவடை செய்தபோது, அவன் திரும்பி வருவதற்காக தந்தை காத்திருந்தார். அவன் தந்தையிடம் திரும்பிய தருணத்தில், எல்லாம் அவனுக்கு மீட்டெடுக்கப்பட்டது. அதேபோல், ஒரு உறவு மீட்டெடுக்கப்படும் வரை காத்திருங்கள், இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கருவியாக இருக்க முடியும். அதுபோல, இயேசு கிறிஸ்து அவர் சொன்னதைச் செய்யும்படி அறிவுறுத்தும் வரை தனது தாயுடனான உறவை நிறுத்தி வைத்தார். சங்கீதம் 126: 4-6 இல் மகிழ்ச்சியை அறுவடை செய்வதைப் பற்றி நம் தேவனின் வாக்குத்தத்ததை பாருங்கள். சங்கீதம் 126: 4-6 4. கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும். 5. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். 6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். உங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது உங்கள் இருதயம் உடையலாம். அவர்களுடன் இருந்து, தொடர்ந்து அவர்களை நேசியுங்கள், மனந்திரும்பும் செய்திக்கு நேராக சமர்ப்பிக்க அவர்களை ஊக்குவியுங்கள். உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் காணும் ஒரு நாள் வரும். எனவே, உறவில் கேள்வி அல்லது சந்தேகம் இருக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? மறுசீரமைப்பு இல்லாமல் உறவின் கனிகளை உண்ண அனுமதிப்பதற்கு பதிலாக அது தீர்க்கப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும். உறவு குணமடைந்து மீட்கப்படாவிட்டால், கொள்கைகளுடன் சமரசம் செய்யாதீர்கள்.

நாம் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

பல சமயங்களில், நாம் இந்தக் கேள்வியைக் கேட்டு ஏமாற்றம் அடைகிறோம். எனினும், நீங்கள் ஒரு முக்கியமான அம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏசாயா 40:31 இல், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். தீர்ப்பளிக்கும் நேரத்தை தேவன் தீர்மானிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அவரே நியாயாதிபதி, எதையும் தீர்ப்புக்கு கொண்டு வருவது அவரது பொறுப்பு. நாம் எடுக்கும் சிறிய அல்லது பெரிய முடிவாக இருந்தாலும், நாம் அதை தேவனிடம் விளக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். ரோமர் 8: 1 இல், 1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. நீங்கள் ஆவியால் வழிநடத்தப்பட்டால், ஆக்கினைத்தீர்ப்பில்லை, ஏனென்றால் அது உங்கள் முடிவு அல்ல. ஆனால், உங்கள் கடந்தகால அனுபவம் அல்லது ஒருவரின் கருத்து அல்லது நீங்கள் பெற்ற அறிவின் அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவை எடுத்தால், நீங்கள் ஒரு தவறு செய்த குறைபாடுள்ளவராக தேவனால் கருதப்படுவீர்கள். இதற்குப் பின்னால் உள்ள காரணம், அவருடைய நீதியை நீங்கள் நம்பவில்லை என்பதே. பல ஜனங்கள், அவர்கள் தேவனுடைய வழியில் பல காரியங்களைச் செய்தாலும், அவர்கள் கர்த்தருக்காகக் காத்திருக்க முடியாததால் இன்னும் தீர்ப்பளிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம், சவுல் ராஜா, அவனால் தேவனின் நேரத்திற்காக காத்திருக்க முடியவில்லை, எனவே தாவீதிடம் தனது ராஜ்யத்தை இழந்தான். மேலும், யூதாஸ்காரியோத்து உயிர்த்தெழுதல் நாளுக்காக அவனால் காத்திருக்க முடியவில்லை, அதனால் அவனுடைய குற்றமனசாட்சி அவனை கொல்ல அவன் அனுமதித்தான்.

ஆகையால், கர்த்தருடைய நேரத்திற்காகக் காத்திருப்பது நம் இரட்சிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொல்லாதவர்களிடம் ஒரு வஞ்சகம் காணப்படுகிறது. தீர்ப்பு நாள் நெருங்கவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள் மற்றும் விஷயங்களை மற்றும் முடிவுகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள் அல்லது மெத்தனமாக கவனக்குறைவு அடைகிறார்கள். மனந்திரும்புவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, தீர்ப்பு வரப்போவதில்லை என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம்,, அனனியா மற்றும் சபிராவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில், அவர்கள் செய்த தவறுகளை விட்டு மனந்திரும்பவோ அல்லது உணரவோ அவர்களுக்கு நேரம் இல்லை. ஆகையால், தேவன் உங்கள் வாழ்க்கையில் அவருடைய தீர்ப்புகளை தாமதப்படுத்துவதன் மூலம் காட்டிய இரக்கங்களுக்காக நன்றி செலுத்துங்கள்.

தீர்ப்புக்காக நீட்டிக்கப்பட்ட நேரத்தைப் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பாவி மாறுவதற்காக அது கொடுக்கப்பட்டுள்ளது. தேவனின் தீர்ப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவனின் தீர்ப்பில், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பரலோக பிதாவின் வாழ்க்கையுடன் ஒப்பிடப்படும். அவருடைய பரிசுத்தத்திற்கு சமமாக இல்லாத அனைவரும் தீர்ப்பளிக்கப்படுவார்கள். எனவே, தீர்ப்பளிக்க அவர் தாமதிப்பது அவரது ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. அதனால்தான், மத்தேயு 7: 1 இல் “நியாயந்தீர்க்க வேண்டாம்” மற்றும் யாக்கோபு5: 8 இல் “முறுமுறுக்காதீர்கள்” போன்ற கட்டளைகள் நமக்கு இருக்கிறது. இவ்வாறு, நமக்கு எதிராக சில அநீதிகள் செய்யப்படும்போது ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க சிறந்த வழி, நம் தவறுகளைப் நாம் பார்த்து மனந்திரும்புவதாகும். மனந்திரும்புதல் நிச்சயமாக நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும். நினிவேயின் பிள்ளைகள் தீர்ப்பைப் பெற்றிருந்தாலும், அவர்களின் மனந்திரும்புதல் அவர்களை விடுவித்தது. எனவே, எந்த சூழ்நிலையிலும் மனந்திரும்புதலின் செய்தியை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்களை பார்ப்பதற்கு பதிலாக மற்றவர்களின் தவறுகளை நீங்கள் காணும்போது, உங்களுக்குத் தெரியாமல் மனந்திரும்பும் செய்தி உங்களிடமிருந்து திருடப்படும். எனவே, மனந்திரும்பும் செய்தியைப் பாதுகாக்க கவனமாக இருங்கள். எல்லா வகையான உறவுகளும் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கு இது முக்கிய காரணியாகும், அதாவது, எப்போதும் உங்கள் தவறுகள் மீது கவனமாய் இருங்கள் மற்றவர்களுடையவைகளின் மேல் அல்ல.

நான் விவாகரத்து செய்யலாமா?

பல சமயங்களில், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் நாம் மிகவும் சிக்குண்டு, நாமே நீதிபதியின் பங்கை வகிக்கிறோம். மற்ற ஒருவர் தவறு செய்ததால், அது நம்மை நீதிபதியாக தகுதியளிக்காது. அவர்களிடமிருந்து கருத்து வேறுபட்டு மற்றும் தப்பி ஓட நமக்கு உரிமை உண்டு. யோசேப்பைப் போலவே, தாவீது தனக்கு எதிராக தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து தப்பி ஓடினான். எபேசியர் 5: 11, 12 இல், 11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். 12. அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. தீய செயல்களை செய்பவர்களை வெளிக்கொணர தேவனை அனுமதிப்பது மற்றும் அவர்களுடன் உடன்படாமல் கருத்துமாறுபாடை மட்டுமே நமக்கு அதிகபட்சமாக வெளிப்படுத்த உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பளிக்க நமக்கு அதிகாரம் அல்லது சலுகை வழங்கப்படவில்லை.

இறுதியாக, அன்புள்ள சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவுடனான உங்கள் உறவில் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அது சக மனிதர்களுடனான உறவுகளை உடைக்க வழிவகுக்கிறது. நாம் எல்லோருடனும் நன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை, நம்மால் முடியாது, ஆனால் எந்த உறவையும் அல்லது நபரையும் தீர்க்காதிருங்கள். அதற்கு பதிலாக, தேவன் அதை செய்ய அனுமதியுங்கள். ஒரு உறவை முறித்துக் கொள்வதும், ஒரு நபரைத் தீர்ப்பதும் தேவனுக்குரியது. எந்த சூழ்நிலையிலும், படைக்கப்பட்ட மனிதர்களான நமக்கு அவர் தனது மகிமையை அளிக்க மாட்டார். ஒரு உறவு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து செல்லும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் உங்கள் கவனத்தை மனந்திரும்புதலின் செய்தியின் மீது வைக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் செய்யும் தவறுகள் மீது அல்ல. நிச்சயமாக, அவர் உங்களுக்கு முன்னால் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவார். ஆகையால், தேவனின் பார்வையில் நீங்கள் தீமை செய்திருந்ததால் சோர்வடைய வேண்டாம், ஏனெனில் இயேசு கிறிஸ்து மாற்கு 2: 17 ல் கூறினார், 17. இயேசுஅதைக்கேட்டு: பிணியாளிகளுக்குவைத்தியன்வேண்டியதேயல்லாமல்சுகமுள்ளவர்களுக்குவேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையேமனந்திரும்புகிறதற்குஅழைக்கவந்தேன்என்றார். எனவே, மனந்திரும்புதலில் கவனம் செலுத்துங்கள், இதனால் சமாதானத்தின் தேவன் உங்கள் உறவில் மாற்றம் அல்லது தீர்ப்பைக் கொண்டுவருவார். நியாயத்தீர்ப்பு நாளில், மனந்திரும்புதல்தான் ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து நம்மை தப்பிக்க ஒரே வழி.

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களை வழிநடத்தி, ஒவ்வொரு நியாயத்தீர்ப்பிலிருந்து உங்களைக் காப்பாராக.