செய்திமடல், ஜூன் 2022

Posted on June 1, 2022

Home Publications Posts செய்திமடல், ஜூன் 2022

செய்திமடல், ஜூன் 2022

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இந்த செய்திமடலைத் தொடங்குவதற்கு முன், தாமதத்திற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். என் குரலுக்காக தயவு கூர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மருத்துவரின் ஆலோசனையின்படி, கடுமையான ஓய்வு மற்றும் சில கட்டுப்பாடுகள் அதற்கு தேவைபடுகிறது. இல்லையெனில், பிரச்சனையை சரிசெய்ய நான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதன் காரணமாக, தொலைபேசி மூலம் ஆலோசனை மற்றும் பிரார்த்தனை செய்ய என்னால் முடியாமல் போகலாம். எனவே, எனது குரல் குணமடையும் வரை என்னுடன் பொறுத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய இந்த சூழ்நிலைகளால், நான் நேர்முகமான கூடுகைகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கிறேன், அதிகமாக பேசுவதைத் தவிர்க்க எனது கைபேசியிலிருந்து என்னை விலக்கி வைத்திருக்கிறேன்.

இந்த நாட்களில், உறவின் மறுசீரமைப்பைப் பற்றி எழுத நான் பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டேன், எனவே இதுவே இந்த செய்திமடலின் தலைப்பாக இருக்கும். இதை, முந்தைய மாதம் நாம் விவாதித்த ‘நம்பிக்கையை சம்பாதித்தல்‘ என்கிற தலைப்போடு குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்த செய்திமடலில், உறவை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிப்போம். இந்த விவாதத்தை தொடங்குவதற்கு முன், நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பல சூழ்நிலைகளில், நாம் நமது உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தாலும், நாம் எப்படி எங்கிருந்து விழுந்தோமென்று நமக்கே தெரியாமல் அதில் தோல்வியடைந்தோம். நாம் முயற்சி செய்தோம் ஆனால் வெற்றிபெறவில்லை. மறுசீரமைப்பின் உண்மையான செயல்முறையை நாம் புரிந்து கொள்ளும்போது இது ஏன் நிகழ்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மறுசீரமைப்பின் அடிப்படைகள்:

மறுசீரமைப்புச் செயல்பாட்டில், அதற்கான நமது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் அதை அடைவதற்கும் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன. அதில் முதல் முக்கியமான சத்தியம் என்னவென்றால் ‘மன்னிக்கவும்’ என்கிற வார்த்தையை உச்சரிப்பது மட்டும் ஒரு உறவை குணப்படுத்தாது என்பதை  நாம் உறுதியாகப் புரிந்துகொண்டு மனதில் பதிக்க வேண்டும்.  நாம் அதைவிட அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். பல உறவுகள் போராடுகின்றன. சில சமயங்களில், உறவுகளை ஒழுங்காக மீட்டெடுக்க மக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதில் சிரமப்படுவதால் அவை அழிக்கப்படுகின்றன. சில சமயங்களில், நம்முடன் எந்த விதமான உறவும் இல்லாத ஒருவருக்கு நாம் செய்தது தவறாகவோ அல்லது தவறில்லாமலோ இருக்கலாம் என்று உணரும்போது, அந்த சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவிப்பது அல்லது மன்னிப்பு கேட்பது போதுமானது. இதை ஒரு உவமையின் மூலம் விளக்குகிறேன். நாம் வேறொருவரின் கால்விரல்களைத் மிதித்துவிட்டால் அல்லது நம் உடைமைகள் யாரேனும் ஒருவர் மேல் தவறி விழுந்து விட்டால், இதுபோன்ற சூழ்நிலைகளில், நமக்கும் அந்த அந்நியருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாததால், வருத்தம் தெரிவிப்பது அல்லது மன்னிப்பு கேட்பது போதுமானது. அதற்கு மேல் நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு உறவில் ஏற்படும் தீங்குகளுக்கு, ‘மன்னிக்கவும்’ என்ற வார்த்தைக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும். உண்மையில், மன்னிப்பு கேட்பது ஒரு உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு நல்ல தொடக்கமாகும், மேலும் நாம் மன்னிப்பு கேட்கும்போது அது மறுசீரமைப்பின் வாசல்களைத் திறந்து. நாம் மறுசீரமைப்பிற்குள் நுழைந்து அதை சுதந்தரிக்க வகை செய்கிறது. மன்னிப்பு கேட்டுவிட்டபோதும், இன்னும் ஏன் ஒரு உறவு கசப்பாக இருக்கிறது என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். வருத்தமளிக்கக்கூடியது என்னவென்றால் மறுசீரமைப்பின் மிக முக்கியமான மூலைகல் என்பது, வெறும் ‘மன்னிக்கவும்’ என்று சொல்லுவது மட்டுமல்ல, மாறாக அது அன்பையும் நம்பிக்கையையும் சம்பாதிக்க ஒரு மனமார்ந்த அர்ப்பணிப்பின் செயல்முறை மூலம் மீட்டெடுப்பது என்பதை பலர் புரிந்து கொள்ளாதது தான். துரதிர்ஷ்டவசமாக, நாம் அனைவரும் விரைவான தீர்வுகளை விரும்புவதால், உறவுகளில் நமது தவறுகளைப் போக்க ‘மன்னிக்கவும்’ என்று மட்டும் சொல்ல பழகியுள்ளோம். ஒருவேளை, மன்னிப்பு கேட்பதன் மூலம் நாம் நமது வருத்தத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் அது ஒரு உறவை திறம்பட குணப்படுத்தாது. எனவே, உங்களுக்காக நான் அமைக்க விரும்பும் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான சத்தியம் என்னவென்றால், ஒரு உறவை மீட்டெடுப்பதற்கு அல்லது குணப்படுத்துவதற்கு மன்னிப்பு கேட்பதை விட மேலான ஒன்று தேவைப்படுகிறது.

மறுசீரமைப்பின் செயல்பாட்டு முறை:

ஒரு உறவை மீட்டெடுக்க, இரண்டு முக்கியமான விஷயங்களைத் மற்றவருடன் தொடர்புகொள்வதற்கான அல்லது தெரியப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாம் எப்போதும் தேட வேண்டும். அது:

1.      நாம் காயப்படுத்திய நபரின் காயமும் வலியும் நம்முடையதாக மாற வேண்டும், மேலும்

2.      மறுசீரமைப்பிற்காக எல்லாவற்றையும் விட்டுவிட நாம் தயாராக இருக்க வேண்டும்.

1. மற்றவர்களின் வலியில் நாமும் பகிர்ந்துகொள்வது, உண்மையிலேயே உறவை மீட்டெடுப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும். அதுமட்டுமல்லாமல், நாம் மற்றவர்களின் வலியைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு ஆவிக்குரிய மாற்றம் ஏற்படுகிறது, இது தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில் மிக முக்கியமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் முக்கியமான கட்டளைகளில் ஒன்றை பிலிப்பியர் 2:3,4ல்பார்க்கலாம் 3. ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். 4. அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. எனவே, இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம், இருளிலிருந்து ஒளியின் அற்புதமான பக்கத்திற்கு மாறுகிறோம். நினைவில் கொள்ளுங்கள், நாம் மற்றவர்களை காயப்படுத்தும்போது, அவர்களுக்கும் இரட்சகராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவை மறைமுகமாக காயப்படுத்துகிறோம், ஆனால் நாம் ஒளியினிடத்திற்கு திரும்பும்போது, பரலோகத்திலே மகிழ்ச்சி உண்டாக நாம் காரணமாயிருக்கிறோம் ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் மனதிரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். இது நமது பூமிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கங்களைக் கொண்டுள்ளது. இது நிகழும்போது, தேவன் தம்முடைய கோபத்தோடு நம்மிடம் அணுகுவதை நிறுத்திவிட்டு, அவருடைய அன்பினால் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவார். மேலும், ஏசாயா 45: 2 & 4ல் வாக்களிக்கப்பட்டபடி தேவனுடைய உதவியை நாம் பார்ப்போம் 2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். 4. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; இயேசு கிறிஸ்துவிடம் நாம் இணைக்கப்பட்டவுடன், இயேசு கிறிஸ்துவின் வழி பாரமானதல்ல என்பதால், மறுசீரமைப்பின் பணி எளிதாகவும் இலகுவாகவும் நமக்கு மாறும் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. மேலும், மற்றொரு முக்கியமான நிகழும் மாற்றம், நீங்கள் ஒளியினிடத்திற்கு வந்தவுடன், நீங்கள் கசப்பான கனிகளை தர முடியாது, நல்ல கனிகளை மட்டுமே கொடுக்க முடியும். நாம் காயப்படுத்திய மக்கள், நமது மாற்றத்தை வார்த்தைகளால் அல்ல, மாறாக நமது ஆவியின் கனிகளால் உணர்வார்கள், நமது மாற்றத்தின் மூலம் அது தானாகவே நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி ஆழ்மனதிலிருந்து வெளிப்படும். நமது மாற்றத்தை நமது புதிய குணம் மற்றும் புதிய பழக்கமாக அவர்கள் காண்பார்கள். இந்த இரண்டு விஷயங்கள் நடக்கும்போது, நாம் மறுசீரமைப்புக்குள் நுழைகிறோம். இருப்பினும், இது முடிவல்ல என்பதை வலியுறுத்துவது மிக முக்கியமானது. ஏனென்றால்,

2.மறுசீரமைப்பு என்பது எப்போதும் ஒரு தியாகத்தின் மூலம் முத்தரிக்கப்படுகிறது. எபிரேயர் 9:22ன் படி 22. நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. மறுசீரமைப்பிற்கு ஒரு தியாகம் தேவைப்படுகிறது என்பதை நாம் இங்கே தெளிவாகக் காணலாம். மறுசீரமைப்பிற்காக எதையும் மற்றும் அனைத்தையும் விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். அனனியா, சப்பீரா போன்று ஒரு சிறிய பகுதியைக் கூட நாம் நமக்காக்கினால், அது பேரழிவில் முடிவடையும். எனவே, முழுமையான அர்ப்பணிப்பு அவசியம். இந்த தியாகங்கள் நமக்குள் மறைந்திருக்கும் தடைகளையும் கடின உள்ளத்தையும் கண்டுபிடிக்க உதவும். மற்ற எல்லா பொக்கிஷங்கள் மற்றும் உடைமைகளையும் விட ஒரு உறவை மதிப்புமிக்கதாகக் நாம் கருதினால், தியாகம் என்பது எளிதான காரியமாகிவிடும். மாறாக, நமது சுயம் அல்லது செல்வம் அல்லது பிற உடைமைகளை நாம் முக்கியமானதாகக் கருதினால், உறவை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிடும். மறுசீரமைப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் வந்த ஐஸ்வரியவானாகிய இளம் அதிபதியின் வாழ்க்கையில் இது தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஒவ்வொரு மீட்டெடுப்புக்கும், அதை சுதந்தரிக்க ஒரு வகையான விட்டுக்கொடுத்தல் தேவைப்படுகிறது.

ஒரு முக்கிய எச்சரிக்கை குறிப்பு:

அனுதாபம்/ சுய பரிதாபம் [மாறாக] பச்சாதாபம்/ இரக்கம்

என் முடிவுரைக்கு முன், நான் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுக்க விரும்புகிறேன். பச்சாதாபமும் இரக்கமுமே மீட்டெடுப்பதற்கான கருவியாகும், அனுதாபம் அல்ல. அனுதாபம் என்பது, ‘மற்றொருவரின் துரதிர்ஷ்டத்திற்காக நாம் கொள்ளுகின்ற பரிதாபம் மற்றும் துக்க உணர்வுகள்’ என வரையறுக்கப்படுகிறது. பச்சாதாபம் என்பது, ‘மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதில் நாம் பகிர்ந்துகொள்ளும் திறன், மற்றும் அவர்களுடன் சேர்ந்து துன்பப்படுதல்’ என வரையறுக்கப்படுகிறது. பல சூழ்நிலைகளில், உறவுகளின் மறுசீரமைப்பு மற்றும் மீட்பில் காணப்படும் ஒரு வஞ்சனையை நாம் அறிந்திருக்கவில்லை. அது சுய பரிதாபம் ஆகும். நாம் நமக்காக பரிதபிப்பதோ அல்லது மற்றவர்களுக்கு வெறும் அனுதாபம் மட்டும் காட்டுவதோ ஒரு உறவின் மறுசீரமைப்பிற்கு உதவாது, ஆனால் அதை அழித்துவிடும். இந்த விஷயத்தில் ஏசாவின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். எபிரேயர் 12: 12 – 17 இல், 12. ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, 13. முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். 14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. 15. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், 16. ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 17. ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். இங்கே, ஏசா ஒரு அசுத்தமான நபராக ஆனான், ஏனென்றால் அவன் மனந்திரும்புவதற்குப் பதிலாக அனுதாபத்தின் மூலம் மறுசீரமைப்பை அடைய முயன்றான். மறுசீரமைப்பைப் பெற அவன் அனுதாபத்தை ஒரு குறுக்குவழியாகப் பயன்படுத்த முயன்றான். துக்கத்தை வெளிப்படுத்துவதும், ஏராளமான கண்ணீருடன் கூட அனுதாபத்தைத் தூண்டுவதும் மனந்திரும்புவதற்கு வழிவகுக்காது. ஒரு உறவில் நாம் அனுபவிக்கும் தற்போதைய போராட்டமும் வலியும் நாம் செய்ததன் விளைவு. எனவே, சுயபச்சாதாபம் என்கிற தந்திரத்தை கையாளுவதற்கு பதிலாக, சிலுவையில் இருந்த திருடனைப் போல ஒரு புத்திசாலித்தனமான தேர்வை எடுங்கள், அது தேவனுடைய   இரக்கத்திற்காக மன்றாடுவது. அது அவருடைய இரக்கத்தை விளைவிக்கும், மற்றும் அது ஒரு திருத்தமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.

முடிவுரை:

வெறும் மன்னிப்பு கோருவதினால் தவறுகள் அல்லது உறவுச் சிக்கல்களை சரி செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் நிறுவுவதன் மூலம் நான் இந்த செய்திமடலை சுருக்கி முடிக்க விரும்புகிறேன். மறுசீரமைப்பை நாம் விரும்பினால், மற்றவர்களின் வலியில் பங்குகொள்வதன் மூலம் நாம் அதை வெளிப்படுத்த வேண்டும். நாம் காயப்படுத்திய ஒருவருடன் நம்முடைய உறவை குணப்படுத்தும் செயல்பாட்டில் நமக்கு இருக்கும் ஆர்வமும் உடந்தையும் நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் மூலமாக தூண்டப்பட வேண்டும். யாருடன் உறவை மீண்டும் சீர்பொருந்த விரும்புகிறோமோ அவரிடம் அந்த உறவு மற்றும் அதற்காக தியாகம் செய்ய நம்முடைய விருப்பமும் நமக்கு மிகவும் முன்னுரிமையானது என்பதை வெளிப்படுத்த வேண்டும். கூடுதலாக, சுய பரிதாபத்திற்கு இடமளிக்காமல், சாத்தானின் அனைத்து ஏமாற்றும் தந்திரங்களிலிருந்து உறவை மீட்டெடுப்பதற்கான நமது பணியை பாதுகாப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் சுய பரிதாபம் ஒரு உறவுக்கு உதவாது. நாம் நீண்ட காலத்திற்கு உறுதியுடன் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும், மறுசீரமைப்பிற்கான குறுக்குவழிகள் அல்லது எளிதான வழிகளைத் தேடக்கூடாது. இறுதியாக, அவருடைய இரக்கத்திற்காக நம் கண்கள் எப்போதும் அவரை நோக்கியிருக்கும்போது இவை அனைத்தும் சாத்தியமாகும்.

அவருடைய அன்பும், இரக்கமும், தயவும் உங்களை உலகில் உள்ள அனைத்து சீர்கேட்டுகும் பாதுகாத்து, சத்தியத்தின் மீதான அன்பில் நீங்கள் வளரவும், அவருடைய வழிகாட்டுதலுக்கு உணர்ச்சியடையவும் உங்களுக்கு உதவட்டும்.

கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.