அன்புள்ள திருச்சபையோரே,
இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இந்த மாதம், பலரையும் சந்திக்கும் பாக்கியத்தை தேவன் எனக்குக் கொடுத்தார், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நம்மை விட கடினமான சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்காக ஜெபியுங்கள். தேவனிடமிருந்து இதுவரை நாம் பெற்ற அனைத்து நன்மைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியில் சந்திக்கிறது என்று நம்புகிறேன். இதுவரையும் நீங்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் உங்கள் அனைவருக்குமாய் நன்றி சொல்லுகிறேன். இது ஒரு ஆசீர்வாதம். எனக்காக தொடர்ந்து ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன். என் தனிமையை மறந்து, ஊழியத்தில் கவனம் செலுத்த தேவன் எனக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார். நான் கற்றுக்கொண்ட ஒவ்வொரு நல்ல பாடத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் பாதத்தண்டையில் நான் கண்டறிந்த சத்தியத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இதுவரை, பின்வரும் தலைப்புகளை நாம் உறவின் கீழ் உள்ளடக்கியுள்ளோம்:
1) உறவில் இருக்கும் ஒருவரை பிரியப்படுத்துவதற்காக எப்போதும் “ஆமாம்” என்று சொல்வது தீமை.
2) உறவில் இருக்கும் ஒரு நபருக்கு பயப்படுவது உறவு அல்ல.
3) ஒரு உறவில் உரையாடல்களின் முக்கியத்துவம்.
4) உறவைச் சோதித்தறிதல் மற்றும்
5) புது சிருஷ்டி
இந்த செய்திமடலில், சோதித்தறிதலின் ஒரு வித்தியாசமான பக்கத்தை நாம் பார்க்கப்போகிறோம், அதாவது, ஒரு நபரின் பாவிப்பு அதாவது வெளியாற்றமான தோற்றங்கள் மற்றும் செயல்களை நேசிக்காமல் அவர்களின் குணத்தை நேசிப்பது.
வெளிப்புறமானபாவனையைஅல்லாமல்குணத்தைநேசிப்பது
முறிந்த உறவுகளில் நான் பார்க்கும் மிகப்பெரிய வஞ்சனைகளில் ஒன்று, அவர்கள் ஒரு நபரை அவரின் தொழிலின் அடிப்படையில் அதாவது அவர் செயல்புரியும் சடங்காச்சாரம் மற்றும் வெளிப்படுத்தும் முறைமையின் அடிப்படையில் தவறாக மதிப்பிடுவது. தொழில் அல்லது பாவிப்பு என்பது ஒரு புறம்பான அல்லது வெளிபுறமான தோற்றம், அது ஒரு வேலையாக அல்லது ஒரு வழக்கமாக இருக்கலாம் அல்லது ஒரு வேலைபுரியும் சூழ்நிலை மற்றும் முறைமையாக இருக்கலாம். மக்கள் செயல்களின் அடிப்படையில் மற்றவர்களை மதிப்பிட கற்றுக்கொள்கிறார்கள். இந்த வஞ்சனை நமக்குள் தொடங்குகிறது. இயேசு கிறிஸ்து மற்ற மக்களுக்கு செய்த காரியங்களை நாம் விரும்பி, அதையே நம் வாழ்விலும் அவர் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஒன்றுமில்லாதவைகளிலிருந்து, தேவன் இஸ்ரவேலின் மீது ராஜாவாக ஏற்படுத்தின தாவீதின் வாழ்க்கையை நாம் பார்க்கும்போது, அத்தகைய கிரியையை நாமும் நம் வாழ்க்கையில் விரும்புகிறோம், மேலும் அவர் நம்மை ராஜாவாக்குவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நம் வாழ்வில் பெரிய மாற்றங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். நாம் தேவனை நேசிக்கவில்லை, ஆனால் அவருடைய கிரியை மற்றும் செயல்பாடுகளை விரும்புகிறோம்.
ஒரு உறவில், ஒரு நபரின் குணத்தை நேசிப்பது மற்றும் அவரது குணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். தொழில் அல்லது பாவிப்பு என்பது ஒரு நபர் அணியும் வெளிப்புற ஆடை, ஆனால் குணம் மட்டுமே வேஷம் தரியாத உண்மையான மனிதத்தன்மை. அதை எந்த மனிதனாலும் அல்லது கட்டுப்பாடலும் மாற்ற முடியாது. நம்மை படைத்தவரே அதை மாற்ற முடியும். தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் நாம் அணிய முடிவு செய்யும் வேஷம். இது நிஜம் அல்ல. ஒரு திரைப்படத்தைப் பார்த்து, அதே நிலைமை நம்மைச் சுற்றி நடக்கிறது என்று நம்புவது போலாகும். ஒரு நபர் நமக்கு ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் போது அல்லது நாம் விரும்பும் மற்றும் நம் விருப்பத்திற்கு ஏற்ற செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களின் நோக்கங்களைப் பார்க்க நாம் மறந்து விடுகிறோம். நாம் விளம்பர காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பல நேரங்களில், நாம் தோற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் மற்றும் மக்களின் உண்மையான குணாதிசயத்தை கண்டறிய குறைவான முக்கியத்துவம் மற்றும் நேரம் கொடுக்கிறோம். சமீபத்தில், என் மகள்களில் ஒருவர் ‘சூப்பர் மினி கூலர்’ என்ற குளிரூட்டியை வாங்கினாள். அவள் ஒரு விளம்பரத்தைப் பார்த்தாள், அது உண்மை என்று நம்பினாள். விளம்பரத்தில், குளிரூட்டியில் இருந்து வெகு தொலைவில் இருந்த ஒருவர் நடுங்கிக் கொண்டிருந்தார், ஆனால், உண்மையில், குளிரூட்டியை நமக்கு மிக அருகில் வைத்திருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. இது மிகவும் எளிமையான மற்றும் மிகவும் வேதனையான ஏமாற்றமாகும். ஆங்கிலத்தில், “ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்” என்ற பழமொழி உள்ளது. உலகமும் பிசாசும் நமக்குப் பிரியமான விஷயங்களை நமக்குக் கொடுப்பதால், அவை ஒரு ஆசீர்வாதம் என்று சொல்ல நாம் ஆசைப்படுகிறோம். அதனால்தான் மற்றவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் நாம் மட்டுமே வாழ்க்கையில் போராடுகிறோம் என்றும் நாம் நம்புகிறோம். பரிசேயர்களின் வாழ்க்கை முறை இதற்கு ஒரு நல்ல உதாரணம்; அவர்கள் தங்கள் தொழிலால், சடங்காச்சாரங்களினால் தேவபக்தியுள்ளவர்களாய் இருக்க விரும்பினார்கள் ஆனால் குணத்தால் அல்ல. அவர்கள் மற்றவர்களால் பார்க்கப்பட வேண்டும் என்று ஜெபம் செய்தார்களே தவிர, தேவனின் மீதான அன்பினாலோ அல்லது பயபக்தியினாலோ அல்ல. அதேபோல, இயேசு கிறிஸ்துவுக்காக சில விஷயங்களைச் நாம் செய்வதற்கான ஒரு உள்நோக்கம் நமக்குள் உள்ளது. இயேசு கிறிஸ்து நம் செயல்களை எதிர்பார்க்கவில்லை, ஆனால் நம் அன்பை எதிர்பார்க்கிறார். நாம் ஏன் ஏதாவது ஒரு காரியத்தை செய்கிறோம்? அதை நாம் யாருடைய பலத்துடன் செய்கிறோம்? நாம் யாருடைய வழிமுறையை ஏற்றுக்கொண்டோம்? இந்த மூன்று முக்கியமான கேள்விகள் குணத்தை தீர்மானிக்கப் போகின்றன. நீங்கள் தேவனை பிரியப்படுத்தி அவருடைய மணவாட்டியாக இருக்க விரும்பினால், இந்தக் கேள்விகளை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பயன்படுத்த வேண்டும். தேவன் மேல் அன்பு கூறுவதற்கு பதிலாக, ஒரு நல்ல கிறிஸ்தவனின் கடமைகளைச் செய்ய கற்றுக்கொள்கிறோம்; இதன் விளைவாக, நாம் ஒரு தொழிலின் வேஷம் தரிக்கத் தொடங்கிவிட்டோம். எனவே, கிறிஸ்தவம் வெறுமனே ஒரு தொழிலாக வெளியரங்கமான கடமை சடங்காச்சாரமாக மாறிவிட்டது.
லூக்கா 10: 30-36 இல், நாம் மூன்று குணசாலிகளை காண்கிறோம். முதலாவது தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும் ஒரு ஆசாரியன். அன்பின் வரையறையான தேவனுக்கு ஊழியங்செய்தாலும், அவன் தேவ ஊழியத்தை ஒரு தொழிலாக செய்கிறான், அவனால் அன்பின் கனிகளை வெளிப்படுத்த முடியவில்லை. தேவனை நேசிக்கும் கடமைகளை ஒரு தொழிலாக அவனால் செய்ய முடிகிறது ஆனால் அன்பின் தன்மையை மற்றும் குணத்தை அவனால் பெற முடியவில்லை. அதனால்தான் பலர் தேவாலயத்தில் இருந்தாலும் உலகின் இன்பங்களால் சோதிக்கப்படுகிறார்கள். நீங்கள் அன்பின் குணாதிசயங்களை நேசிக்கிறீர்கள், அதாவது இயேசு கிறிஸ்து மீது அன்பு கூறுகிறீர்கள் என்றால், பரிசுத்தமாக இருக்க முயற்சி செய்வதற்கு பதிலாக நீங்கள் பரிசுத்தத்தை விரும்புவீர்கள். நீங்கள் ஒரு தொழிலின் வேஷத்தை அணியும்போது, ஒரு செயல்திறனின் விளைவை நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்கள், அதாவது ஒரு நன்மை பெறுவதற்காகக்காக ஒரு காரியத்தை செய்கிறீர்கள். நன்மைகளுக்காகவோ ஆறுதலுக்காகவோ அல்லது வசதிக்காகவோ நீங்கள் ஒருவரோடு கணவனாகவோ மனைவியாகவோ குழந்தைகளாகவோ உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ வாழ்ந்தால் அது உறவு அல்ல, தொழில். “சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு திருமண விழாவுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நான் இந்த உறவில் வாழ்கிறேன்” என்று அவர்கள் கூறும்போது, மனைவியிடம் அன்புகூர அவர்கள் தேவனோடு ஏற்கனவே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள் என்பதை பலரும் உணரவில்லை.
இரண்டாவது குணசாலி ஒரு லேவியன். லேவியர்கள் ஆரோனின் ஆசாரியர்களல்ல, ஆனால் அவர்களும் தேவாலயங்களில் சிறு பங்காக, தேவனுடைய சேவைகளை செய்தனர். தேவனின் சொந்த நோக்கத்திற்காக அவர்களும் மற்ற இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டனர். தேவன் அவர்களின் பாங்காய் சுதந்திரமாய் இருந்ததால் அவர்களுக்கு இஸ்ரவேலில் சொத்துரிமை எதுவும் இல்லை. ஆனாலும், தேவனின் அன்பான குணம் அவர்களிடம் இல்லை. தங்கள் கடமைகள், தலைப்பு மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை விவரம் ஆகியவற்றால் அவர்கள் அவருடைய (தேவனுடைய) ஜனங்கள் என்று நினைத்தார்கள். அதனால்தான் அவர்களால் தேவனின் இயல்பை, அதாவது அன்பை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே, இந்த இரண்டு குணாதிசயங்களும், நம்முடைய கடமைகள் அல்லது செயல்கள் நம் குணத்தை மாற்ற உதவாது என்றும், அது குணாதிசயத்திற்க்கான ஒரு சான்று அல்ல என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இந்தப் பகுதியில் நாம் காணும் மூன்றாவது குணசாலி ஒரு சமாரியன். இயேசு கிறிஸ்துவின் காலத்தில், சமாரியர்கள் கலப்படமான தூய்மையற்ற, பாதி அந்நிய, பாதி யூத மதத்தை கடைப்பிடித்த தாழ்ந்த இனமாக கருதப்பட்டனர். அவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் வெளியாட்களாக நடத்தப்பட்டனர், ஆனால் அந்த சமாரியனால் பரிசுத்த ஆவியின் கனிகளை வெளிப்படுத்த முடிந்தது. இதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் ஒரு தொழிலின் வெளிப்புற வேஷத்தை தரிக்கவில்லை. அன்பை அவன் அவனுடைய குணமாக கொண்டிருந்தான்.
வஞ்சனை
பல சமயங்களில், நம்முடைய வஞ்சனையை கையாள நாம் போராடுகிறோம். சங்கீதம் 40: 2 இல், பாவம் என்பது, “உழையான சேறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சத்தியத்தை புரிந்துகொள்ளும் திறன் உங்களுக்கு இருக்காது என்று அர்த்தம். அதனால் தான், எபிரெயர் 3:13 கூறுகிறது, “உங்களில்ஒருவனாகிலும்பாவத்தின்வஞ்சனையினாலேகடினப்பட்டுப்போகாதபடிக்கு, இன்றுஎன்னப்படுமளவும்நாடோறும்ஒருவருக்கொருவர்புத்திசொல்லுங்கள்”. பாவம் ஒரு நபருக்குள் நுழையும் போது, அது ஒரு வஞ்சனையை உருவாக்குகிறது மற்றும் ஒருவன் நன்மை செய்ய விரும்பினாலும், அவனால் அதை செய்ய முடியாது, ஏனென்றால் மாம்சசிந்தை அதை செய்ய அனுமதிக்காது. இதனால்தான் பலர் தங்கள் பாவங்கள் தவறு என்று தெரிந்தாலும், அவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆதாமும் ஏவாளும் சத்தியத்தின் மீதான அன்பை இழந்தபோது, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பாவம் நுழைவதற்கு இடமளித்தனர் மற்றும் அவர்கள் நிர்வாணிகள் ஆனார்கள். பாவம் உங்களை வஞ்சிக்கும், சத்தியத்தை அறிய அனுமதிக்காது. உறவுகளில், இயேசு கிறிஸ்துவின் ஜீவன் பாரம்பரியத்திற்காகவும் உலக அமைப்பிற்காகவும் வர்த்தகம் செய்யப்படும் தருணத்தில், பாவம் நுழைவதற்கு இது ஒரு திறந்த வாயிலாகும். அதைத் தொடர்ந்து, வஞ்சனையின் அழிவைக் காண உங்களுக்கு புரிதல் இருக்காது. பல சமயங்களில், “சூழ்நிலைநிமித்தம், நான் இந்த பாவத்தை செய்தேன்” என்று சாக்குப்போக்கு சொல்கிறோம். வேதத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை “வழி இதுவே” என்று கூறும்போது, உலக அமைப்பில் நிரூபிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்ற எல்லா வழிகளும் வஞ்சனை மட்டுமே. நான் பாவத்தைக் குறிப்பிடும்போது, அது தேவனுக்காக அல்லாமல் நம் சுயநலத்திற்காக நாம் செய்யும் வேலையை பற்றி குறிக்கின்றேன். இந்த வகையான சுயநல நோக்கம் எந்த உறவிலும் நம்மை வஞ்சிக்கும். எந்த காரியத்தையும் நீங்கள் தேவனுக்காக செய்வதிலிருந்தும், தேவனுடைய சாயலில் செய்வதிலிருந்தும், தேவனின் உதவியுடன் செய்வதிலிருந்தும் உங்கள் கவனத்தை நீங்கள் மாற்றினால், நிச்சயம் அந்த உறவு உங்களை அழிக்கப் போகிறது.
ஒரு உறவில், ஒரு நபர் தவறு செய்யும்போது, ஒரு பாவ அறிக்கை அல்லது பாவத்தை ஒப்புக்கொள்வது மட்டும் ஒரு உறவை மீட்டெடுக்க போதுமானதாக இருக்காது. தேவனுடனான நம்முடைய உறவில், நம்முடைய ஜெபமும் மற்றும் வேத வாசிப்பும் தேவனுடனான உறவை குணமாக்கும் என்று நாம் நம்புகிறோம்; இது ஒரு வஞ்சனையான செயல். தேவனுடனான உறவை நிலைநிறுத்த ஒரே வழி மனந்திரும்புதல்தான். பல சமயங்களில், நம்முடைய நல்ல செயல்களும் முயற்சிகளும் அவரைப் பிரியப்படுத்தும், மற்றும் அவருடைய கோபத்தை அடக்க முடியும் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது, உங்கள் பற்றாக்குறையை ஈடுசெய்ய நீங்கள் செய்த பணிகள் சமாதான பலியாக ஏற்றுக்கொள்ளப்படாது. யூதாஸ் 30 வெள்ளி நாணயங்களுக்காக இயேசு கிறிஸ்துவை காட்டிக்கொடுத்தான், ஆனால் அவன் வெள்ளி நாணயங்களை திருப்பி கொடுத்தாலும், தேவனுடனான உறவை அது மீண்டும் நிலைநாட்டவில்லை. ஒரு உறவை மீண்டும் கட்டியெழுப்ப மக்கள் தரிக்கும் வேஷத்தால் பல நேரங்களில் நாம் வஞ்சிக்கப்படுகிறோம்.
நியாயாதிபதிகள் 11 ஆம் அதிகாரத்தில், யெப்தா ஒரு தியாகம் செய்கிறான், ஆனால் தேவன் அதில் மகிழ்ச்சியடையவில்லை. இருப்பினும், ஆபிரகாம் அதே வகையான தியாகத்தை செய்தபோது அது தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு காரணம் கீழ்ப்படிதல். செய்த செயல்களைவிட நம்முடைய நோக்கம் தேவனால் பார்க்கப்படுகிறது. ஒரு நபர் தவறு செய்யும்போது, அது அந்த உறவை அச்சுறுத்தவில்லை என்றால், அதை மன்னிக்க முடியும். ஆனால் உறவை அச்சுறுத்தும் தவறுகள் இருந்தால், உடன்படிக்கையை புதுப்பிக்க வேண்டும் மற்றும் சீர்திருத்துதலின் வடிவத்தில் உறுதியளித்தல் நிறுவப்பட வேண்டும். தியாகச் செயல்கள் ஒரு உறவை மீட்டெடுப்பதற்கான ஆதாரம் அல்ல, மாறாக சீர்திருத்தும் செயல்களே. 1 கொரிந்தியர் 13 வது அத்தியாயத்தில், அன்பு இல்லாத தியாகத்தின் சாத்தியங்களை நாம் காண்கிறோம். எனவே கிறிஸ்துவில் அன்பானவர்களே, செயல்களைப் பார்த்து ஒரு நபரை நியாயந்தீருங்கள்.
முடிவுரை:
வஞ்சனைக்கான முக்கிய காரணம், நம்முடைய ஆசைகள் மற்றும் பேராசைகளின் மீதான நமது அன்பு. பிசாசு நாம் விரும்புவதைத் தருவான், ஆனால் உயிர்வாழ்வதற்கான அடிப்படையான நமது அத்தியாவசியத் தேவைகளை அழித்துவிடுவான். ஆனால் இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிறார், மேலும் நம்முடைய பாவ இயல்பிலிருந்து நம்மை திருத்துவதன் மூலம் அவர் தனது அன்பை வெளிப்படுத்துகிறார், இதனால் நாம் அழிவிலிருந்து காப்பாற்றப்பட முடியும். ஒரு உறவில் நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் இவைதான். எந்தவொரு உறவும் நம்மைச் சரிசெய்ய உதவ வேண்டும் மற்றும் அழிவிலிருந்து நம்மை மீட்க வேண்டும். ஆசை மற்றும் உணர்வுகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் ஒரு உறவு ஒரு அழிவுகரமான மற்றும் புண்படுத்தும் உறவாகும். ஒரு உறவில் ஏமாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கான உண்மையின் வழி மனந்திரும்புதலும் சமர்ப்பணமுமாகும். நீங்கள் மனந்திரும்பும்போது, நீங்கள் பரிசுத்த ஆவிக்கு உணர்திறன் அடைகிறீர்கள், மற்றும் நீங்கள் அவருக்கு அர்பணித்தால், உங்கள் முழு சிந்தனை செயல்முறையும் அவரால் வழிநடத்தப்படும். நாம் தேவனின் சாயலில், தேவனின் மகிமைக்காக, கிறிஸ்துவின் மணவாட்டியாகப் படைக்கப்பட்டுள்ளோம். இது நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதை உங்கள் குறிக்கோளாக வைத்திருக்கும் வரை எந்த உறவும் உங்களை வஞ்சிக்காது. ஒரு சூழ்நிலையை தீர்மானிக்க அறிவும் அனுபவமும் போதாது. சத்தியம் தேவை. இயேசு கிறிஸ்து ஒருவரே சத்தியம்; வேறு சத்தியம் இல்லை.
எனவே, நீங்கள் மனந்திரும்பி சமர்ப்பிக்கும்போது, வஞ்சிக்கும் உறவுகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். நீங்கள் எப்படி அன்புகூர வேண்டும் என்று தெரியாமல், ஒரு உறவை ஏற்படுத்துவதற்காக ஏமாற்று வேலைகளை நீங்கள் நம்பி கொண்டிருந்தீர்களானால், மனந்திரும்புதலும் சமர்ப்பணமும் உங்களை மாற்றும், மேலும் நீங்கள் தேவனோடும் மற்றும் சக கிறிஸ்தவர்களுடனான உறவை ருசிக்க தொடங்குவீர்கள்.
மனந்திரும்பவும் சமர்ப்பிக்கவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவராக. ஏசாயா 42: 3 & 4 ன்படி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, 3. அவர்நெரிந்தநாணலைமுறியாமலும், மங்கியெரிகிறதிரியைஅணையாமலும், நியாயத்தைஉண்மையாகவெளிப்படுத்துவார். 4. அவர்நியாயத்தைப்பூமியிலேநிலைப்படுத்துமட்டும்இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடையவேதத்துக்குத்தீவுகள்காத்திருக்கும்.. அவருடைய சமாதானமும் சந்தோஷமும் உங்கள் மீது இருப்பதாக.