செய்திமடல், ஜனவரி 2022

Posted on February 8, 2022

Home Publications Posts செய்திமடல், ஜனவரி 2022

செய்திமடல், ஜனவரி 2022

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தச் செய்திமடலை எழுத அமர்ந்தபோது, ​​நாம் இதுவரை முடித்த பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை உணர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் நாம் எகிப்தின் பாரங்களுக்குள்ளாக கடந்து சென்றபோது தேவன் நம்மைப் பாதுகாக்க மிகவும் நல்லவராக இருந்தார். நாம் நோய், பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியிருந்தபோது அவர் நம் நலனில் அக்கறை கொண்டிருந்தார். இந்தச் செய்திமடல் மிகச் சிறிய மக்கள் குழுக்காகவும், சில எளிய காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவன் இந்த எண்ணத்தை பாதுகாத்து, ஒரு மரமாக வளரச் செய்திருக்கிறார். இதன் மூலமாக குணப்படுத்துதல், மீட்கப்பட்டு புதிப்பிக்கப்படுதல், மற்றும் நிலைநிற்பது போன்ற கனிகள் உருவாகியதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்திமடலில், உறவுக்கான நமது பொறுப்புகள்’ என்ற செய்தியை கையாளப் போகிறோம். இந்த மாதச் செய்திமடல் முறிந்த உறவுகளுக்கெல்லாம் விடையாக இருக்கப் போகிறது.

ஒரு உறவின் அடித்தளம்

எந்தவொரு கட்டமைப்பிலும் அடித்தளம் ஒரு முக்கிய பகுதியாகும். அடித்தளம் வலுவாக இருந்தால், புயல்கள் கூட கட்டிடத்தை அழிக்க முடியாது. மத்தேயு 7: 24 & 25 இல், 24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. சத்தியம் மிகவும் தெளிவாக உள்ளது. நாம் செய்த தேர்வுகளின் விளைவாகவே நம் உறவுகளில் போராட்டங்களை நாம் எதிர்கொள்ளுகிறோம். பல நேரங்களில், அடித்தளத்தில் உள்ள சிக்கல்களால், நாம் துரோகமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம் என்பதை நாம் உணர முடியவில்லை. மாற்கு 13:31ல், 31. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுறும் எல்லை உள்ளது ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு அப்படி இல்லை. கொலோசெயர் 1:17 இல் பவுல் இதே கருத்தை எழுதுகிறார்: 17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. தேவனுடைய வார்த்தை நம் இருதயத்தில் இருக்கும்போது, ​​​​சூழ்நிலைகள் நமக்கு எதிராகவே இருந்தாலும் நாம் விட்டு கொடுக்க மாட்டோம். எனவே, ஒரு உறவை சீர்பொருத்தி மாற்றியமைப்பதற்கான முதல் படி, தேவனுடைய வார்த்தையே நம்முடைய சிந்திக்கும் செயல் முறையாக மாற வேண்டும். நமது உறவுகளை யாராலும் அழிக்க முடியாது; நம்முடைய தவறுகள் கூட அல்ல, ஆனால் நம்முடைய சிந்திக்கும் செயல்முறையால் முடியும். நம்முடைய சிந்தனை முறையே தவறின் காரணம் என்பதை உணர முடியாமல் தவிக்கிறோம்.  நம்முடைய இருதயங்களில், காயம், வலி மற்றும் குற்றச்சாட்டுகள் போன்ற எதிர்மறை எண்ணங்கள் தேவனுடைய வார்த்தையினால் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். சங்கீதம் 107:10-12ல், 10. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், 11. அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். 12. அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள். எனவே, நம்முடைய துன்பங்களைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையில் கவனம் செலுத்துவது முக்கியம். இதனால், தேவன், உறவுகளை உரையாடல்களின் மூலமாக காட்டுவார். ஒரு உறவு கட்டப்படுவதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று, தேவனுடைய நியமங்களால் தூண்டப்பட்ட உரையாடல்கள் ஆகும். எனவே, ஒரு உறவைக் கட்டியெழுப்புவதில் நம்முடைய சிந்திக்கும் செயல்முறைகள் ஒரு முக்கிய அங்கமாகின்றன.

நமது சுயபெலம் மற்றும் சுயமுயற்சியால் நம்முடைய சிந்திக்கும் செயல்முறைகள் சரி செய்யப்படாது அல்லது குணமடையாது. அதனால்தான் ஒரு உறவை உருவாக்குவது சிக்கலாகிறது. பல நேரங்களில், உடைந்த உறவுகளை சீர்கட்டுவது சாத்தியமில்லை. நீங்கள் உண்மையில் ஒரு உறவில் உடன்பட்டு இருப்பிர்கள் என்றால், முதலாவதாக உங்கள் சிந்திக்கும் செயல்முறை புதிதாக மாற்றப்பட வேண்டும். சிந்தனை முறையில் புதுப்பிக்கப்படுவதற்கு இரண்டு செயல்முறைகள் தேவை. முதலில், பழைய அமைப்பிற்கும் பழக்கவழக்கங்களுக்கும் மரிக்க வேண்டும், இரண்டாவதாக, புதிய கட்டமைப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். முந்தைய செய்திமடலிலும், புது சிருஷ்டி தொடர்பான இதேபோன்ற செய்தியைப் பார்த்தோம், அங்கு நாம் பழையவையை விட்டுவிட்டு புது அமைப்புடனும் இசைந்திருத்தல் குறித்து பேசினோம். யாத்திராகமம் 31:13 இல், 13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். எனவே, நமது கடந்த காலத்தை இயேசு கிறிஸ்துவின் கைகளில் ஒப்படைப்பது மட்டுமே ஒரு புதிய படைப்பு பிறப்பதற்கும் நம்முடைய சிந்திக்கும் செயல்முறைகள் குணமடைவதற்கும் ஒரே வழி. இயேசு கிறிஸ்துவின் வழி ஒரு இடுக்கமான வழி. உங்கள் பழைய அழுகிய கடந்த காலத்தை நீங்கள் மரிக்க அனுமதிக்காத வரை, ஒரு புதிய வாழ்க்கை பிறக்காது. இந்த காரணத்தினாலேயே, இயேசு கிறிஸ்துவின் வழி ஒரு இடுக்கமான வழி. ஒரு நபர் தன்னுடைய கடந்த காலத்தை பிடித்து கொள்ளும்வரை வரை, அவர் ஒரு புதிய உறவுக்கு தகுதியானவர் அல்ல.

சீர்திருத்தத்தை நோக்குவது

உறவை கட்டியெழுப்ப அல்லது மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அடுத்த கட்டம் சீர்திருத்தங்களைத் நோக்குவதாகும். ‘சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பைப் பற்றி பேசுவதற்கு முன், ஒருவர் ஏன் சீர்திருத்தங்களைத் நோக்க அல்ல எதிர்பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சீர்திருத்தங்களை நீங்கள் நோக்குகின்றீர்கள் அல்லது எதிர்பார்க்கிறீர்கள் என்றல் அவைகள் உங்களை புண்படுத்தவோ அல்லது குற்ற உணர்வுடன் உங்களை பாதிக்கவோ கூடாது. வேதத்தில், சீர்திருத்தங்கள் பற்றிய கருத்து உங்களை சிறந்ததாக்க கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களை நியாயந்தீர்ப்பதுமில்லை, மற்றவர்களை நியாயந்தீர்க்க உங்களை அனுமதிப்பதுமில்லை. இது உங்களையும் காயப்படுத்தாது, மற்றவர்களையும் காயப்படுத்த உங்களை அனுமதிக்காது. யோவான் 3:17ல் 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். எனவே, தேவனுடைய சீர்திருத்த செயல்முறையை நியாயத்தீர்ப்பு அல்லது ஆக்கினை தீர்ப்பு என்று நாம் விளங்கிக்கொண்டால், அது பரிசுத்த ஆவியின் சத்தமல்ல என்பதை நாம் உறுதியாக அறிந்துகொள்ளலாம். இது பரிசுத்த ஆவியின் சத்தமல்ல என்பதால், அந்த சத்தம் எதிர்க்கப்பட வேண்டும். இன்னும் சிறப்பாக சொல்லவேண்டும் என்றால், அது எதிர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அது உங்கள் மனதிலிருந்து அழிக்கப்படவும் வேண்டும். நாம் ஏன் சீர்திருத்தப்பட வேண்டும்? தேவனுடைய வழியிலிருந்து நாம் எங்கு விலகி சென்றோம் என்பதை உணர, சீர்திருத்தம் எப்போதும் நமக்கு உதவும், எனவே தேவனுடனான நமது உறவை மீட்டெடுக்க இது உதவும். நம்முடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு தவறும் நிவர்த்தி செய்யப்பட்டு வெளியரங்கமாக்கப்பட வேண்டும். எபேசியர் 5:13 & 14 இல் 13. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. 14. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். நீங்கள் உங்கள் தவறுகளை வெளியரங்கமாக்க அனுமதிக்கும் போது, ​​உண்மையில், நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் உறவில் அனுமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். இயேசுகிறிஸ்துவே சமாதான பிரபு. எந்த உறவிலும் ‘சரி’ அல்லது ‘தவறு’ என்று எதுவும் இல்லை. ஒரே கேள்வி என்னவென்றால், நீங்கள் அந்த உறவில் ஆர்வமாக உள்ளீர்களா அல்லது அதற்கு எதிராக இருக்கிறீர்களா என்பதே. உண்மையில் நீங்கள் ஒரு உறவில் சரி மற்றும் தவறை தேடினால், அந்த உறவை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்பதே அர்த்தம். அன்பு இருக்கும் போது, ​​சரி அல்லது தவறு என்று எதுவும் இல்லை. எதிரிகள் தங்கள் பலத்திற்காக போராடுவார்கள், மற்றும் அண்டை வீட்டார் சரி மற்றும் தவறுக்காக போராடுவார்கள், ஆனால் குடும்பத்தில் அப்படி அல்ல. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அடிமையாக உங்களை சமர்ப்பிக்கும் போது, ​​எந்த ஆக்கினை தீர்ப்பும் இருக்காது என்ற கருத்தின் பின்னணியில் உள்ள நியமம் இதுதான்.

மத்தேயு 7:1ல், “தீர்க்காதிருங்கள்…” என்ற கட்டளையைப் பார்க்கிறோம். மற்றும் 1 யோவான் 1:9 இல், 9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். தேவன், நம்முடைய உண்மையல்லா தன்மை மற்றும் அக்கிரமங்களிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று அவர் கூறுகிறார். தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை யார் பெற்றாலும், நிச்சயமாக அவர்களின் உறவுகளில் இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். இரக்கத்தை பெறாமல் உங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ள உங்களால் முடியாது. பல சமயங்களில், ஒரு தவறான பாவஅறிக்கை அல்லது மாம்சத்தால் ஏவப்பட்ட ஒரு பாவஅறிக்கை எப்போதும் பேரழிவிற்கு வழிவகுக்கும். சீர்திருத்தங்கள் என்று வரும்போது அது மனிதர்களின்படியோ, மனிதர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதின்படியோ அது நடக்காது. தேவனாகிய கர்த்தர் வேதத்தில் சொல்லும் சீர்திருத்தம் என்பது, இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக நாம் என்ன செய்தோம் மற்றும் பரிசுத்த ஆவியை நாம் எப்படி துக்கப்படுத்தியிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும். 1 கொரிந்தியர் 11:31 & 32 இல் 31. நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். 32. நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். இந்த பத்தியின் படி, சீர்திருத்தம் செயல்முறை உங்கள் தேர்வுகளின் அல்லது முடிவுகளின் விளைவுகளிலிருந்து உங்களை விடுவிக்கும். ஆகவே, உறவை கட்டியெழுப்புவதில் அல்லது மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ள இரண்டாவது படி, சீர்திருத்தங்களை நாம் விரும்பி அதை ஒரு பழக்கமாக மாற்றுவதாகும். சங்கீதம் 73: 13 & 14 இல், 13. நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். 14. நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். சில நேரங்களில் நம்முடைய சூழ்நிலை அமைதியாகவும் சமாதானமாகவும் இருப்பதால் சீர்திருத்தம் தேவைப்படாமல் போகலாம் என்று கருதுகிறோம். இந்த ஆவிக்குரிய செயலற்ற தன்மை மற்றும் தேக்கம் நம்மை தாக்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. இந்த ஆவிக்குரிய செயலற்ற தன்மை உறவுகளை மட்டுமல்ல, நம் மகிழ்ச்சியையும் அழிக்கிறது. தனிமையில் இருந்து வெளிவர விருப்பம் உள்ள எவ்வொருவரும், சீர்திருத்தம் என்ற பழக்கத்தில் வளர வேண்டும்.

ஒரு உரையாடலை தக்கவைப்பதற்கான தகுதி

ஒரு உறவை கட்டியெழுப்புவதில் அல்லது மீண்டும் கட்டியெழுப்புவதில் மூன்றாவது படி உள்ளது, அது, தவறுகளுக்கு வருந்துவது மற்றும் அதை சரிசெய்ய முயற்சிப்பது ஆகும். குறிப்பாக, நாம் தவறு செய்திருந்தால், அதை சரிசெய்து, நடந்த சேதத்தை சீரமைத்து மீட்டெடுக்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தைச் சிந்தியிருந்தாலும், நாம் நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு அதை விட்டுவிட வேண்டியது அவசியம். அறிக்கையிடுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் என்பது ஒரு சட்டப்பூர்வ எச்சரிக்கைக்கான பதில் அல்ல. அப்படியானால் அது சடங்காச்சாரம் மற்றும் நியாயப்பிரமாணம் ஆகும். அதாவது, தவறை ஒப்புக்கொள்ளுதல் என்பது எதையாவது சாதிப்பதற்காகவோ, அல்லது ஒரு விளைவைத் தவிர்ப்பதற்காகவோ அல்லது ஒரு நன்மை பெறுவதற்கான ஒரு தேவையாகவோ கருதப்படக்கூடாது. அது ஒரு கடமையாகவோ அல்லது ஒருவருக்கு கண்ணியமாக செய்யும் செயலாகவோ செய்யக்கூடாது. அறிக்கையிடுதல் என்பது குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்தையும் மாற்றப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்த வேண்டும். சுய நலம் அல்லாமல் உண்மையாகவே ஒரு உறவின் மேல் இருக்கும் அன்பின் மூலம் எழ வேண்டும். மற்றவர்களுடனான ஒரு உரையாடலில், நமது வார்த்தைகள் பொதுமைப்படுத்தப்பட்டு, வெறும் வாயிலிருந்து மட்டும் வந்தால், அது நமது உறவை அழிக்கும் பாத்திரமாக விளங்கும். மாறாக அமைதியாக இருப்பது நல்லது. நாம் தவறை ஒத்துக்கொள்ளும்போது ​​அது மிகத் துல்லியமாக இருக்க வேண்டும், மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொண்டு பொறுப்பேற்க நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். 1 நாளாகமம் 21:17 இல் 17. தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான். இந்தப் பகுதியில் தாவீதின் வருத்தத்தின் வெளிப்பாடுகளை நாம் தெளிவாகக் காணலாம். தாவீது தனது தவறுக்கு பொறுப்பேற்கிறான், அதன் விளைவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறான். எனவே, ஒரு உறவை மீட்டெடுப்பது என்பது குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்துடனும், மற்றும் தவறுக்கு பொறுப்பேவதுடனும் தொடங்கப்பட வேண்டும். பழையவைகள் அழிக்கப்படாததினிமித்தம் புதியவைகள் உருவாக்கப்படாவிட்டால் இரக்கம் அருளப்படாது. இரக்கம் வெளிப்படுத்தப்படாவிட்டால், மறுசீரமைப்பிற்கான தேவனுடைய துவக்கம் இருக்காது. ஒரு உரையாடலே மறுசீரமைப்பின் துவக்கமாயிருக்கும். ஒரு உரையாடலின் மூலம் மற்றவர்களை காயப்படுத்துவதற்கு நாம் எப்படி பொறுப்பாகிறோம் என்பதை உணர்கிறோம். இந்த உணர்தல் பின்னர் அறிக்கையிடுதலாக மாறுகிறது. இது மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கிறது.

உரையாடலைப் ஆதாயப்படுத்துவதில் உள்ள இரண்டாவது முக்கியமான அம்சம், ‘நேரம்.’ எபிரேயர் 12:17ல் 17. ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். மேற்கூறிய வசனத்தில், ஏசா தனது பாவங்களை ஒப்புக்கொள்ள எடுத்துக் கொண்ட நேரம் அவன் நிராகரிக்கப்பட காரணமாயிற்று. ஒரு உறவில் உள்ள இறுக்கத்தை நாம் உணரும் தருணத்தில், நாம் வழிவிலகி இருக்கிறோம் என்பதை கண்டறிய சரியான ஆலோசகராகிய கர்த்தரிடத்தில் செல்ல வேண்டும். அது தானாக வெளிப்படும் வரை நாம் காத்திருக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவனான பேதுரு, இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தபோது, ​​துக்கித்து அழுதான். அவன் உணர்வடைவதற்கு, தான் செய்த தவறுகளின் விளைவு தானாக வெளிப்படும் வரை அவன் நேரத்தை வீணாக்கவில்லை. மற்றவர்களின் தவறுகளைப் பார்த்து அல்லது அதை நியாயப்படுத்துவதன் மூலம் நம் நேரத்தை வீணடிக்கக்கூடாது. எகிப்தின் அரசனான பார்வோன், தான் தவறு செய்ததாக பலமுறை ஒப்புக்கொண்டான், ஆனால் அவன் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தான். அவனது பாவ அறிக்கையின் பொருள் விடுதலையிருந்தது, மனமாற்றம் அல்லது மறுரூபமாக்கப்படுவதாக அல்ல. லூக்கா 19:8 இல் 8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இங்கே ஒரு பாவ அறிக்கை மாற்றப்படுவதற்கான முயற்சியுடன் சேர்ந்து செய்யப்படுவதின் மூலம் அது ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் காண்கிறோம்.

கர்த்தரின் பங்கு:

நாம் முன்பு விவாதித்தபடி, இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவு, நம்முடைய மற்ற எந்த உறவுகளையும் பாதிக்கக்கூடிய முக்கிய பங்கு வகிக்கிறது. நீதிமொழிகள் 16:6 & 7 இல் 6. கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். 7. ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். இங்கே, மனந்திரும்புதலுக்கும் உறவை மீட்டெடுப்பதற்கும் இடையே ஒரு முக்கியமான தொடர்பைக் காண்கிறோம். நாம் தேவனை பிரியப்படுத்த வேண்டும், அதுவே மறுசீரமைப்பில் இன்றியமையாத பகுதியாகும். நாம் குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தம், அறிக்கையிடுதல் மற்றும் மாற்றமடைய எடுக்கும் முயற்சிகள் மூலம் தேவனை பிரியப்படுத்தி நம்மை ஏற்க வைக்க வேண்டும். அதன்பிறகு, உறவை சரிசெய்வது தேவனுடைய பொறுப்பு.

 

இந்தக் செய்திமடலை ஒரு எச்சரிக்கையுடன் முடிக்க விரும்புகிறேன். சங்கீதம் 1:5: 5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. சில நேரங்களில், ஒரு உறவை மீட்டெடுக்க நாம் நேர்மையான முயற்சியை மேற்கொண்டாலும், அது எந்த பலனையும் தராமல் போகலாம். நாம் மனம் தளரக்கூடாது. குற்ற உணர்வு உங்கள் இதயங்களில் ஊடுருவ அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் அது அவருடைய நீதி ஒழுங்குமுறை. அவர் குயவன், நாம் அனைவரும் அவருடைய கைகளில் களிமண். இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தி, அவரை நம்முடைய ராஜாவாக்க முடிவு செய்வோம், அதனிமித்தம் அவருடைய ஆட்சியில் நாம் களிகூர இயலும்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை மீட்டெடுக்க வந்தார். நாம் அவருடைய பிள்ளைகள் என்பதால், உலகத்தைப் போல நாம் போராட முடியாது. முடிந்தவரை விரைவில் உறவுகளை சீர்பொருத்த உங்கள் சிறந்த முயற்சியை கொடுங்கள். நாம் இவ்வுலகில் என்றென்றும் இருக்கப் போவதில்லை, எனவே நமக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஜீவனை சரியான முறையில் பயன்படுத்துவோம். உலகக் கொள்கைகளைப் பின்பற்றி அதை வீணாக்காதீர்கள். இந்த வசனத்தின்படி நீங்கள் வாழ்வதற்கு  உங்களுக்கு உதவ பரலோக பிதாவிடம் நான் ஜெபிக்கிறேன்: எபேசியர் 4:30 – 32 30. அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். 31. சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. 32. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

 எனவே, சுருக்கமாக சொன்னால், தேவனுடைய வார்த்தையை நாம் நேசிப்பதிலும் அதை நம்மில் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம், இதன்மூலம் நமது பழைய மனிதன் ஒரு புதிய சிருஷ்டியாக மாற்றப்படுவதற்கு நாம் சமர்ப்பிக்க முடியும். இதன் மூலம், அவருடைய இரக்கத்தை பெறுவோம், மேலும் நமது சிந்தனைமுறையும் செயல்முறையும் குணமடைந்து புதுப்பிக்கப்படட்டும். இந்த செயல்பாட்டில், நாம் தேவனின் சீர்திருத்தத்தை நேசித்து மற்றும் அதற்கு நம்மை சமர்பிப்போமாக. மேலும், தவறை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதின் மூலம் நேர்மையான உரையாடலுக்கு தகுதியானவர்களாக மாறி,  உறவில் அதன் வலிமையையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வோமாக. மேலும், உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாம் தாமதிக்க வேண்டாம் அல்லது கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடவேண்டாம். நேர்மறையாக இருப்பது மற்றும் உறவுகளை மீட்டெடுக்க தயாராக இருப்பது எவ்வளவாய் முக்கியம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இறுதியாக, தேவனுடனான நமது ஒப்புரவு நம் வாழ்வின் மற்ற பகுதிகளை மீட்டெடுக்க வழிவகுக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோமாக.

பிதாவின் அன்பு உங்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கட்டும். இயேசுகிறிஸ்துவின் இரக்கமும் கிருபையும் உங்கள் ஆத்துமாக்களைக் காத்து, பரிசுத்த ஆவியின் இனிய ஐக்கியம் உங்களோடு இருந்து, நாம் அவரை மகிமையில் பார்க்கும் வரை உங்கள் அனைவரையும் ஆளுகை செய்வதாக. ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.