அன்புள்ள திருச்சபையோரே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவருடனும் இருப்பதாக.
இதுவரை நம்மை பாதுகாத்து, நம் வாழ்க்கையில் தேவன் அருளிய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவோம்.
ஒவ்வொரு நாளும் விஷயங்கள் மிக மோசமான நிலைக்குச் செல்கின்றன. மனுஷர்கள் தற்பிரியராயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தங்கள் ஆறுதலுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மற்றவர்களின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அழிக்க அவர்கள் பயப்படுவதில்லை. இது மிகவும் திடனற்றுப்போகப்பண்ணுகிற சூழ்நிலை. தேவனுக்கு பயப்படும் பயம் மனுஷர்களுடைய மனதிலே சீர்படுத்தப்படவில்லை.
கடந்த வார வேதாகம ஆய்வில் பலர் இந்த கருத்தை புரிந்து கொள்ள சிரமப்பட்டனர், மேலும் பலர் இந்த கருத்தை புரிந்து கொள்ள தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உதவி கோரினர். அவர்களுக்கு உதவியாக இருப்பதில் உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கேள்விகள் வேதாகம ஆய்விலேயே கேட்கப்பட்டிருந்தால் அது ஒரு உண்மையான ஆசீர்வாதமாக இருந்திருக்கும். கருத்தை புரிந்து கொள்ள முடியாத பலர் பயம் காரணமாக கேள்விகள் கேட்கவில்லை. இதன் அடிப்படையில் நான் உறவு குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.