இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இந்தச் செய்திமடலை எழுத அமர்ந்தபோது, நாம் இதுவரை முடித்த பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை உணர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் நாம் எகிப்தின் பாரங்களுக்குள்ளாக கடந்து சென்றபோது தேவன் நம்மைப் பாதுகாக்க மிகவும் நல்லவராக இருந்தார். நாம் நோய், பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியிருந்தபோது அவர் நம் நலனில் அக்கறை கொண்டிருந்தார். இந்தச் செய்திமடல் மிகச் சிறிய மக்கள் குழுக்காகவும், சில எளிய காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவன் இந்த எண்ணத்தை பாதுகாத்து, ஒரு மரமாக வளரச் செய்திருக்கிறார். இதன் மூலமாக குணப்படுத்துதல், மீட்கப்பட்டு புதிப்பிக்கப்படுதல், மற்றும் நிலைநிற்பது போன்ற கனிகள் உருவாகியதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்திமடலில், ‘உறவுக்கான நமது பொறுப்புகள்’ என்ற செய்தியை கையாளப் போகிறோம். இந்த மாதச் செய்திமடல் முறிந்த உறவுகளுக்கெல்லாம் விடையாக இருக்கப் போகிறது.