August 2021

Be strengthened by the word of God

Home August 2021

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் சமாதானமும் சந்தோஷமும் உங்களோடிருந்து உங்களை ஆளுகை செய்வதாக.

இந்த வாரத்தைக் காண்கிறதற்கு கர்த்தர் நமக்கு கிருபை செய்திருக்கிறார். நாம் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நடந்தாலும் அவர் நம்மை அழிவுக்கு நீக்கினபடியினால், அவரை நாம் ஆராதிப்பதே சரியானது மற்றும் தகுதியானது. உங்களை எகிப்திலிருந்து புறப்பட பண்ணின தேவனாகிய கர்த்தர் நானே என்று தம்முடைய நாமத்தை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.  எனவே, தேவனுக்கு நன்றி சொல்லும் அற்புதமான மற்றும் தெய்வீக பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையில் உள்ள குறைபாட்டைக் கண்டு, அவர்களின் கஷ்டங்களை குறித்து கர்த்தரிடத்தில் கேள்வி கேட்க முடிவு செய்த பலர் இந்த உலகத்தில் உள்ளனர். ஆயினும்கூட, கர்த்தரை துதிக்க தீர்மானித்த சிறுகூட்ட ஜனத்தை கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டு அழைத்திருக்கிறார். அதனால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தாங்கள் அக்கினியிலும் மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து செல்லும்போது, உருவாக்கினவரை துதித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்கள் கஷ்டமான சூழ்நிலைகளை தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க முடிந்தது. கர்த்தரை துதிப்பது ஒரு தேவபக்திக்கேற்ற செயலாகும், அது நம் வாழ்வை ஒரு ஆசீர்வாதமாக மாற்றி நம் வாழ்வில் வெளிப்படுகிறது. கர்த்தரை துதிப்பது நம்முடைய சுய பிரயோஜனத்துக்காகவே. நாம் கர்த்தரை துதிக்கும்போது, நம்முடைய சிந்திக்கும் செயல்முறை குணமாகும், மேலும் நம்முடைய மனது சரியான நிலையில் வேலை செய்யும். பல சமயங்களில், சில விஷயங்களைச் செய்வது தவறு என்று நமக்குத் தெரியும், ஆனாலும் நாம் அவற்றைச் செய்கிறோம். இதற்கு காரணம் நம் இருதயம் உணர்வற்றுப்போய்விட்டது. சத்தியத்தின் மீதான அன்பை வளர்க்க சிலர் போராடினார்கள். கர்த்தரை துதிப்பது நம்முடைய ஆத்துமாவை குணப்படுத்தும் தைலம் போன்றது மற்றும் சத்தியத்தை நேசிக்க அது நம்மை வழிநடத்தும்.

Read More →

Greetings to you in the name of our Lord and Saviour Jesus Christ. May the peace and joy of Jesus Christ rest with you and reign over you.

God has blessed us to see this week. Though we walked through lot of difficult situations, He did not allow us to perish, so it is right and worthy to worship him. He revealed His name to us as the Lord God who brought us out of Egypt. Therefore, thanking God is a wonderful and Godly habit that we need to work on. There are many people in the world who have decided to see the lacking in their lives and question God for their troubles. Nevertheless, God has called a few chosen people to be His very own who make an extraordinary choice to Praise him. That is the reason why the chosen when they walked through the fire and all kinds of troubled waters, were praising the Creator. They were able to keep the troubled situation away from their lives. Praising God is a Godly habit that is revealed in our lives to make our lives a blessing. Praising God is for our own benefit. When we praise God, our thinking process will be healed, and the mind will work in a normal way. Many times, we know that doing certain things are wrong, yet we do them. This is because our hearts have become futile. Few struggled to develop the love for the truth. Praising God will be a healing balm to the soul and will lead us to love the truth.

Read More →