Newsletter

Be strengthened by the word of God

Home Tag : Newsletter

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

நம்முடைய கடினமான சூழ்நிலையின்போது நம்முடைய விடுதலைக்கான நேரத்தை நாம் எதிர்பார்ப்பது இயல்பானது தான் ஆனால் தேவனுடைய நிறைவான மகிமையைக் காண நாம் தவறுகிறோம். நாம் துரிதமாய் விடுதலையடைய ஏக்கமுடையவர்களாய் இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தேவன் செயல்படுத்துகிற வல்லமைகள் நன்மைகள் மற்றும் மகிமைகளை பார்க்க முடியாதவர்களாக நம்மை மாற்றுகிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் எரேமியா 29:11 -ல் இருக்கிற வசனம் நம்மை ஊக்குவிக்கறதாக இருக்கிறது. ஆனால் அந்த வசனத்தைத் தியானிக்கும்பொழுது அதன் அர்த்தம் ஆழமாகவும் மற்றும் ஆவிக்குரிய கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் நம்மால் உணர முடியும். இந்தத் தீர்க்கத்தரிசனம் வெளிப்படுதப்பட்ட நேரத்தில் பாபிலோனில் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் தங்களுடைய சொந்த நிலங்களை இழந்து சோர்வடைந்து அவர்களுடைய விடுதலையை மாத்திரமே பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தார்கள். அவர்களிடத்தில் இரண்டு எதிர்மறையான கருத்துக்களையுடைய இரண்டு விதமான தீர்க்கதரிசிகள் அவர்களுக்குக் கூறினார்கள். அனனியா துரிதமான விடுதலையை குறிக்கும் தீர்க்கதரிசனம் மூலம் முரட்டாட்டத்தை உண்டாக்கும் பொய்யான நம்பிக்கையை ஜனங்களுக்குள் உண்டாக்கினான். ஆனால் அதற்கு மாறாக ஏரேமியா தீர்க்கதரிசியோ இந்த வேதனையான அடிமைத்தனம் எழுபது ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியது கேட்ட ஜனங்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் ஏரேமியா கூறின தீர்க்கத்தரிசனமானது தேவனுக்கு உண்மையாகத் தேவனுடைய சத்தியத்தை வெளிப்படுத்துகிறதாய் இருந்தது.

எரேமியா மூலம் தேவன் அறிவித்ததாவது: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (ஏரேமியா 29:11). இந்தக் காத்திருப்பின் காலங்களில் தேவன் அவர்களைக் கைவிடவில்லை என்கிற நம்பிக்கையையும் மேலும் சுகமடையும் வழிகளையும் மற்றும் இழ்ந்துபோன தேவனால் கொடுக்கப்பட்ட அடையாளங்களையும் மறுபடியும் பெற்றுக்கொள்வதினால் தேவனுடைய பிரசன்னத்தில் உண்டாகும் இரட்சிப்பின் சந்தோஷத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தியது.

நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக மாறும்பொழுது சிந்தனைகளில் மாற்றம் உண்டாகி தேவன்மேல் உள்ள நம்பிக்கை குறைகிறது. ஆனால் தேவனுடைய வாக்குத்தத்ததின் வல்லமைகளோ ஒருபோதும் மாறுவதில்லை. காத்திருப்பது மற்றும் மறுக்கப்படுவது அவைகள் இரண்டும் ஒன்றல்ல மாறானவைகள். பெரும்பாலும், நம் அறிவுக்கு எட்டாத முறைமையில் தேவனாகிய கர்த்தர் செயல்படுகிறார் என்கிற செய்தியை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

நீங்கள் எதிர்பார்க்கிற விடுதலை காலதாமதமானாலும் உங்களுக்கு நன்மை உண்டாகும்படி தேவனுடைய நேர்த்தியான நேரத்தில் பெற்றுக்கொள்வீர்கள் அதற்குத் தேவனுடைய வார்த்தையினாலே சிந்தனைகளில் மாற்றம் அடைந்து தேவன் ஆயத்தப்படுத்தின இரட்சிப்பின் நம்பிக்கைக்குள் நடத்தப்படுகிறோம். எனவே உங்களுடைய கடந்தகால தோல்விகள், பலவீனங்கள் மற்றும் இயலாமைகளை நாம் நோக்கிப் பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் அவருடைய ஆவியும் ஜீவனுமான வார்த்தைகளுக்கு நேராக நம்முடைய சிந்தனைகளை நாம் திருப்புவோமாக ஒழிந்துபோவதில்லை. அவருடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை.

(ஆகஸ்ட் மாதம் 2025 அன்று மத்தேயு ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரி லல்லியால் மொழிபெயர்க்கப்பட்டது).

Click to download as PDF -> Tamil

Read More →